வழமையான தனது நடை பயிற்சியினை முடித்து திரும்புகின்ற போது பெரிய மோட்டார் சைக்கிலில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் மோதியதில் ஓய்வு பெற்ற அதிபர் பெ. கணேசன் அவர்கள் படுகாயம் அடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சமீப நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணிக்கும் இளைஞர்களால் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளன. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
போக்குவரத்து போலீசார் சட்டத்தை மிக கடுமையாக நடைமுறைப்படுத்தாத வரைக்கும் இவற்றிற்கு தீர்வு காண முடியாது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















