யாழ் திருநெல்வேலி முத்துத்தம்பி சைவச் சிறுவர் இல்லத்திலிருந்து 07.05.2026ம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் யாருக்கும் தெரியாமல் தப்பி ஓடி சங்கானைப் பகுதியில் உள்ள அத்தை வீட்டுக்குச் சென்ற லலித்குமார் ராபின்சன் என்ற 16 வயதுச் சிறுவனைக் காணவில்லை என உறவுகள் தேடுகின்றார்கள். குறித்த சிறுவன் அத்தை வீட்டிலிருந்து அன்று மாலை 5 மணியளவில் தான் மீண்டும் சிறுவர் காப்பகத்திற்கு செல்வதாக கூறி வெளியேறிய பின் காணாமல் போனதாகத் தெரியவருகின்றது. ஆகவே குறித்த இந்தச் சிறுவனை எங்காவது கண்டால் 0763986185 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறு சிறுவனின் உறவுகள் கேட்டுள்ளார்கள்.


இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














