யாழில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்பற்று – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த லோகிதன் ரிராஜ் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த குழந்தைக்கு நேற்றிரவு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை அங்கேயே உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














