Home செய்திகள் வவுனியா மதியாமடுவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து சிந்துஜன் நசுங்கிப் பலி! வீடியோ

வவுனியா மதியாமடுவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து சிந்துஜன் நசுங்கிப் பலி! வீடியோ

வவுனியா – வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று உழவியந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தேவை நிமித்தம் உழவியந்திரத்தை செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் அதனை செலுத்திச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் 29 வயதான கேசன்-சிந்துஜன் எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

May be an image of tractorNo photo description available.

May be an image of one or more people, beard, people smiling and road
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply