யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள நிலையில், அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீதவான் கள விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது மனித புதைகுழி காணப்படும் பகுதி சதுப்பு நிலமாக உள்ளதை நீதவான் அவதானித்துள்ளார்.
இந்தநிலையில், மனித புதைகுழி வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுக்கான பாதீடு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான நிதியை, நீதி அமைச்சு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.





