Home செய்திகள் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய ஆலோசனை!

புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய ஆலோசனை!

அகதிகளாக பொருளாதார ஏதிலிகளாக ஐரோப்பாவிற்கு படையெடுத்து வந்த புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை 2030 ம் ஆண்டிறகு பின்னர் மிகவும் கடினமாக இருக்கப் போகின்றது.
எப்படி கடினமாக இருக்க போகின்றது என விளக்குகிறேன்… தொடர்ந்து வாசியுங்கள்.
உலகப் பொருளாதாரம் இப்போது வரலாறு காணாத கடன் சுமையில் தத்தளிக்கிறது, இது ஒரு பெரிய பொருளாதாரச் சரிவுக்கு, அதாவது Great Depression போன்ற ஒரு நிகழ்வுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சத்தை எழுப்புகிறது.
2025-இல் உலகளாவிய கடன் அளவு $315 trillion ஐ தாண்டியுள்ளது. அதேசமயம், physical money (cash + coins) உலகளவில் $8–10 trillion மட்டுமே இருப்பில் உள்ளது.
அதாவது நிஜப் பணம் 3%, மற்றவை அனைத்தும் debt-based digital credit system ல் உள்ளது.
இதுதான் பொருளியல் termல “debt bubble” என கூறுவார்கள்.
தங்கத்தின் விலை உயர்வு போன்ற அறிகுறிகள் மூலம், முதலீட்டாளர்கள் காகிதப் பணத்தின் (Fiat Currency) மீதான நம்பிக்கையை இழந்து, பாதுகாப்பான புகலிடங்களை நாடிக் கொண்னிருக்கின்றனர்.
அமெரிக்கக் கடன் மற்றும் பணவீக்க அபாயம்
தற்போது, உலகக் கடன் மற்றும் அமெரிக்கக் கடன் ஆகியவை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விடப் பல மடங்கு அதிகமாக உள்ளன.
அமெரிக்காவின் தேசிய கடன் (US National Debt) 2000-இல் $5 trillion மட்டுமே இருந்தது.
2020-க்கு முன்னர் $23 trillion ஆனது.
2025-இல் இது $35 trillion ஐ கடந்து விட்டது.
இதற்கான வட்டி மட்டுமே வருடத்திற்கு ஒரு trillion அமெரிக்க டொலர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது (deficit )பற்றாக்குறையைச் சமாளிக்க, கடன் பத்திரங்களை (Treasury Bonds) விற்று கடன் வாங்குகிறது. நிலைமை மோசமாகும் போது, Federal Reserve Bank “Quantitative Easing” (QE) என்ற பெயரில் பணத்தை மின்னணு முறையில் உருவாக்குகிறது.
இந்தக் கட்டுப்பாடற்ற பணம் அச்சிடுதல் அமெரிக்க டொலரின் மதிப்பை பலவீனப்படுத்துகிறது, இதன் விளைவாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கிறது.
அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறைந்து வருவதால், சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் தங்கத்தை அதிக அளவில் குவித்து வருகின்றன. இது De-dollarisation எனப்படும்
De dollarisation என்பது டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
இந்த பொருளாதார மாற்றம், அமெரிக்கா தலைமையிலான பழைய உலக ஒழுங்கில் பிளவுகளை உருவாக்கி, புவிசார் அரசியல் பதற்றங்களை அதிகரிக்கவுள்ளது.
வரவிருக்கும் பொருளாதார வீழ்ச்சி குறித்த மிக ஆழமான கவலைகளில் ஒன்று “The great taking “ என்ற கோட்பாடு ஆகும்.
இக்கோட்பாட்டின்படி, ஒரு பெரிய கடன் சுழற்சியின் ( Debt cycle) முடிவில் ஏற்படும் நிதிக் collapse-இன் போது, சில சட்ட ஏற்பாடுகளின் மூலம் (குறிப்பாக, நிதிப் பத்திரங்களுக்கான Uniform Commercial Code – UCC பிரிவுகள் மூலம்), உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களும கடன் வழங்குநர்களும் ( creditors) மக்களின் நிதிச் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முடியும்.
அதாவது உங்களுடைய…..
▪️வீடுகள் மற்றும் சொத்துக்கள் (கடன் மூலம் நிதி திரட்டப்பட்டிருந்தால்)
▪️வங்கிப் பண இருப்புகள் (Bank Deposits)
▪️பங்குகள், பத்திரங்கள் போன்ற அனைத்து நிதிச் சொத்துக்கள்
ஆகியவை பறிபோகும் அபாயம் உள்ளது..
இது உலக வரலாற்றில் மிகப் பெரிய பறிமுதல் நடவடிக்கையாக இருக்கும் என்றும், இலட்சக்கணக்கான முதலீட்டாளர்களை ஏழைகளாக்கிவிடும் என்றும் இந்தத் தகவல்
எச்சரிக்கின்றது.
பிரபல முதலீட்டாளர் Ray Dalia தனது “Big Cycle ” கோட்பாட்டில், அதிகக் கடன், செல்வச் சமத்துவமின்மை மற்றும் உள்நாட்டுக் குழப்பங்கள் ஆகியவை ஒரு பேரரசின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்று குறிப்பிடுகிறார்.
இந்தக் கட்டத்தின் உச்சம், “உள்நாட்டு மோதல் (Revolution)” அல்லது “வெளிநாட்டுப் போர் (War)” மூலமாகவே புதிய உலக ஒழுங்கு உருவாகிறது.
தற்போதைய அமெரிக்காவின் கடன்குறைப்பு சிக்கல்கள், உள்நாட்டு அரசியல் பிளவுகள் மற்றும் உலக வல்லரசுகளுக்கு இடையேயான பதற்றம் ஆகியவை இந்த இறுதிப் போரை நெருங்குவதன் அறிகுறிகளாகும்.
இந்த நிலை ஒரு பெரிய பொருளாதாரச் சரிவில் முடிவடையும் என அவர் எச்சரிக்கிறார்.
The Great Depression போன்ற கடுமையான பொருளாதார மந்தநிலையின்போது பொருளாதார நெருக்கடி, வளங்களுக்கான போட்டியைத் தூண்டி, உள்ளூர் மக்களுக்கும் புலம்பெயர்ந்த ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் (Migrants) இடையே சமூகப் பதற்றத்தை உருவாக்கலாம்.
இச்சூழலில், “வெளிநாட்டவர்கள்” வேலை இழப்புக்கும், சமூகப் பிரச்சினைகளுக்கும் பலிகடாவாக (Scapegoat) ஆக்கப்படலாம்.
இந்த வீழ்ச்சியால் ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவில் வாழ முடியாத சுழல் ஒன்று (Hostile Environment) உருவாகும் அபாயம் உள்ளது.
பொருளாதாரம் வீழ்ச்சியடையும்போது, பொதுமக்களின் கோபம் அரசுக்கு எதிராகத் திரும்புவதற்குப் பதிலாக, எம்மோப்போன்ற புலம்பெயர்ந்தோர் மீது எளிதாக திரும்பும் அபாயம் உள்ளது.
உலக நாடுகள் வரலாறு காணாத கடன் சுமையிலும், புவிசார் அரசியல் மோதல்களின் விளிம்பிலும் நின்று கொண்டிருப்பது ஒரு பெரிய பொருளாதாரச் சரிவுக்கான அறிகுறிகள் என்பது தெளிவாகத் தெரிகின்றன.
இந்த வீழ்ச்சி, நிதி அமைப்பை ஆழமாகப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், “The great taking போன்ற பறிமுதல் அபாயங்களை உருவாக்கக்கூடும்.
இது தொடர்பாக தெளிவான விளக்கங்களை பெற்று வரவிருக்கும் ஆபத்தை முற்கூட்டியே அறிந்து தயாராக இருங்கள் என அறிவுறுத்துகிறேன்.
வந்த பின் அல்லல் படுவதை காட்டிலும் வரமுன் காப்பது புத்திசாலித்தனம்.
நன்றிகள்

Mukinthan Thurairajasingham

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here