Home செய்திகள் கனடாவில் உயர் கல்வி கற்றுவரும் மாணவன் கட்டுநாயக்காவில் கைது!

கனடாவில் உயர் கல்வி கற்றுவரும் மாணவன் கட்டுநாயக்காவில் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் 21 வயது கனேடிய பிரஜை எனவும் அவர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்று தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

குறித்த நபர் கொண்டு வந்த பயணப் பைகளை சோதனை செய்த போது, 18.253 கிலோகிராம் ஹாஷிஷை சுங்க அதிகாரிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இவை ஆறு பெரிய பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 சிறிய பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட கனேடிய நாட்டு பிரஜையும் கைப்பற்றப்பட்ட ஹாஷிஷும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை நேற்று (27) இரவு 10.30 மணியளவில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) வந்த எமிரேட்ஸ் EK 648 விமானத்தில் வந்த பயணிகளை மேற்கொண்ட சோதனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள பணிப்பாளரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.
குறித்த போதைப்பொருள் அவரது பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.182.53 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகள் சுங்கத்துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிடிபட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக போதைப்பொருள் விசாரணைப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No photo description available.No photo description available.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here