இன்று மாலை 4.30 மணியளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 60 பயணிகளுடன் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்பட்ட குமுதினிப் படகு நயினாதீவு முனையை அண்டிய பகுதியில் டீசல் அடைப்பு காரணமாக பழுதடைந்தது.
பழுதை சரி செய்வதற்கான பணியாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பயணிகள் கடற்படை படகு மூலம் மீண்டும் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கே கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை சம்பவத்தை அறிந்து நெடுந்தீவிலிருந்து புறப்பட்டுச் சென்ற கரிகாலன் தனியார் படகு மக்களை ஏற்றிக் கொண்டு நெடுந்தீவை நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














