வவுனியாவில் நகர் பகுதியில் இருந்த சடலத்தால் பரபரப்பு!
வவுனியா - கொறவப்பொத்தானை வீதியில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டது. குறித்த பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக இன்று மதியம் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் நீண்ட நேரத்தின் பின்னரே பொலிசார் அந்தப்பகுதிக்கு வருகைதந்ததாக கூறப்படுகின்றது. அங்கு நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாநகரசபை உறுப்பினர் பர்ஸ்சான் பொலிசாருடன் இணைந்து சடலத்தை அங்கிருந்து அகற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் ஆங்கிலம் தாய்மொழி எனப் பொய் கூறிய கீர்த்தனா பணியில் இருந்து அதிரடி நீக்கம்
பிரித்தானியாவின் மருத்துவமனை அறக்கட்டளையில் 2023 அக்டோபரில் சாய் கீர்த்தனா ஸ்ரீபெரம்புதூர் என்ற பெண் பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளராகப் பணியில் சேர்ந்தார். அவர் தனது விண்ணப்பத்தில் ஆங்கிலம் தனது தாய்மொழி என்று குறிப்பிட்டிருந்ததுடன், அதற்கான புலமைத் தேர்வையும் தவிர்க்க முயன்றதால் பணி நீக்கப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. பணியில் சேர்ந்த சில வாரங்களிலேயே அவர் சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுடன் உரையாட முடியாமல் திணறுவதை நிர்வாகம் கவனித்தது. ஒரு பேச்சு சிகிச்சையாளருக்கு மொழித் துல்லியம் மிக அவசியம் என்ற நிலையில், அவரது மொழிப்...
மல்லாவியில் 2 யுவதிகள் ஒரேநேரத்தில் வல்லுறவுக்குள்ளன சம்பவம் தொடர்பாக ராஜி கூறும் பரபரப்புத் தகவல்! வீடியோ
ராசி ரெக்ஸ் என்ற முகநுாலில் உண்மையை உரக்கச் சொல்லும் பெண்... முல்லைத்தீவு மல்லாவியில் இரு பெண்களை மத போதகர் உட்பட 3 பேர் வல்லுறவுக்குள்ளான சம்பவத்தின் உண்மை நிலை என்ன? பெற்றோரே யோசியுங்கள்
சற்று முன் முறுகண்டியில் ரயில் மோதி காருடன் சேர்ந்து தூக்கி வீசப்பட்ட தம்பதி! வீடியோ
முருகண்டி பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்து ஒன்று அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புகையிரதப் பாதையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, அதே நேரத்தில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காரில் பயணித்திருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர். விபத்துக்குப் பிறகு உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவி குழுவினர் இணைந்து அவர்களை மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த சம்பவம்...
மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றில் நடந்தது என்ன?
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இவ்வழக்கில் தொடர்புடைய இரு நகைக்கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நேற்று நீதிமன்றத் தொகுதிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் பிணையில்...
கொழும்பில் தமிழ் இளைஞன் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்!
கொள்ளுப்பிட்டி - சீ.வி. அவென்யூ பகுதியில் நிர்மாணப்பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்றாவது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்த போது, சாரக்கட்டு உதவியுடன் இரும்புப் பகுதியை பொருத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் கால் வழுக்கி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
யாழில் அயல்வீட்டு நபரால் 11 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம்!
யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்ததை அடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். அதேவேளை சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
இன்றைய (16.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று வீட்டிற்குத் தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியம் கூடும். சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை,...
முகமாலையில் அடிகாயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!
கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இனங்கானப்பட்டுள்ளது கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. முகமால வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று (15-04-2026) ஆடு மேய்க்க சென்ற ஒருவர் ஆட்கள் நடமாட்டமற்ற காணியொன்றுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த நிலையில் அப்பகுதி கிராம அலுவலர் மற்றும் பளைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப் பட்டதையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் இவ்வாறு சடலமாக கானப்பட்டவர் முகமாலை வடக்கு பகுதியை சேர்ந்த இளையவன் நல்லதம்பி (வயது -71) என அடையாளம் கானப்பட்டுள்ளது
தந்தையைக் காப்பாற்றப் போய் மூன்று மகன்கள் உயிரிழப்பு: இலங்கையை உலுக்கிய சோகத்தின் சுருக்கம்
இலங்கையின் சோமாவதி வனப்பகுதிக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றில் (வெருகல் பாலம் அருகே) சித்திரை புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று இந்த நெஞ்சை உருக்கும் விபத்து நிகழ்ந்தது. சம்பவம்: கொழும்பில் பணிபுரிந்து வந்த நான்கு சகோதரர்கள், புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்குத் திரும்பித் தமது தந்தையுடன் ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர். நீராடிக்கொண்டிருந்தபோது தந்தை நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காக நான்கு மகன்களும் ஆற்றில் குதித்துள்ளனர். தந்தை மற்றும் ஒரு மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், தந்தையைக் காப்பாற்ற முயன்ற மற்றைய மூன்று மகன்களும் நீரில் அடித்துச்...










