யாழ் விபத்தில் தலை நசுங்கிப் பலியான இளம் கலைஞர் வசந்தன் என்பவர் கடைசியாக ஆடிய ஆட்டம்!! வீடியோ
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் கலைத்துறையைச் சேர்ந்த வசந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் , மயிலிட்டியை சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். இவர் ஒரு கலைத்துறையைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது. தற்போது அவர் ஆடிய ஒரு ஆட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதனை அப்படியே தந்துள்ளோம்.
யாழில் பெண்ணிடம் சங்கிலி அறுத்த கொள்ளையன் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டான்!!
நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் இன்று(02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார். நல்லூர் கோவில் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து போல் வருகை தந்த நபரொருவர் அங்கு பணியாற்றிய பெண்ணின் தங்கச சங்கிலியை நேற்று(01) அறுத்துச் சென்றுள்ளார். அத்தோடு,மோட்டார் சைக்கிள் ஒன்றையும் ஆசிரியர் ஒருவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து வர்த்தக நிலைbreakயத்திலிருந்த CCTV கமரா ஊடாக குறித்த நபரை இனங்கண்ட நாவற்குழி மக்கள் சந்தேகநபரை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் இன்று...
எலும்பு முறிவை 3 நிமிடத்தில் சரி செய்யும் சீன விஞ்ஞானிகளின் அதிசயக் கண்டுபிடிப்பு!
சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘Bone-02’ எனும் புதிய பசையை உருவாக்கி மருத்துவத்துறையில் சாதனை படைத்துள்ளனர். தற்போது எலும்பு முறிவு ஏற்பட்டால், முழுமையாக குணமடைய சில மாதங்கள் ஆகும். இதனால் எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், ‘Bone-02’ பசை 3 நிமிடத்தில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடக்கூடியது என்று விஞ்ஞானர்கள் தெரிவித்துள்ளனர். சோதனையில் 150 பேருக்கு இதன் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும், எனவே தற்போதைய...
சுவிட்சர்லாந்தில் சீனாவால் கண்காணிக்கப்படும் இனத்தவர்கள்!
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திபெத்தியர்கள் மற்றும் உய்குர் இனத்தவர்கள் சீனாவால் கண்காணிக்கப்படுகிறார்கள் அல்லது தங்கள் சமூகத்தினரை வேவு பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. பாசல் பல்கலைக்கழகத்திடம் நீதித்துறைக்கான பெடரல் அலுவலகம் ஒரு அறிக்கையை கேட்டிருந்தது. அதில், இரண்டு குழுக்களும் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உட்பட பல வழிகளில் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த குழுக்களுடன் தொடர்புடைய சுவிஸ் குடிமக்களும் கண்காணிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படக்கூடிய குழுக்களை நாடுகடந்த அடக்குமுறையிலிருந்து பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை ஆராய்வதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
லண்டன் ரயிலில் நடந்த திகில் சம்பவம்: கத்திக்குத்துக்கு இலக்கான ஒன்பது பேர் ஆபத்தான நிலையில்
செவ்வாய்க்கிழமை மாலை ரயிலில் பலர் கத்தியால் குத்தப்பட்டனர். பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தின் வகை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பின்னர் ரயில் ஆங்கில நகரமான ஹண்டிங்டனில் நிறுத்தப்பட்டபோது, ஆயுதமேந்திய அதிகாரிகள் இரண்டு பேரைக் கைது செய்தனர். ஊடக அறிக்கைகளின்படி, சாட்சிகள் வியத்தகு காட்சிகளை விவரித்தனர். ஹண்டிங்டன் லண்டனுக்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷயர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, ரயில் டான்காஸ்டரிலிருந்து பிரிட்டிஷ் தலைநகருக்குப் பயணித்துக் கொண்டிருந்தது. தாக்குதல் குறித்து அவசர சேவைகள் இரவு 7:42 மணிக்கு எச்சரிக்கப்பட்டன. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் மற்றும்...
காதலனின் கண் முன்னே களனி கங்கையில் மூழ்கிய இளம் பெண் பலி
முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளது. நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட குழுவினர், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வழியில், முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக கோகிலவத்தை பகுதியில் களனி கங்கை அருகே உள்ள வாகனங்களை கழுவும் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக ஆற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுக்க முற்பட்ட குறித்த இளம் பெண்,...
நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் ஆலயத்தில் அதிர்ச்சி -உண்டியல்களை உடைத்து திருட்டு - (சி.சி.டி.வி. இணைப்பை துண்டித்து பதிவு கருவிகளும் திருட்டு) நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில் நுவரெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் சனிக்கிழமை (01) இரவு ஆலயத்தின் பின் கதவு...
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த புஸ்பகுமார் உயிரிழப்பு.!
தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் விபத்திற்குள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றின் மீது ஜீப் வண்டி மோதியது. இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை...
யாழில் 17 வயதான மகனை காணவில்லை என தாயார் முறைப்பாடு!!
யாழ்ப்பாணத்தில் 17 வயதான தனது மகனை காணவில்லை என தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த ச. சயோசியன் (வயது 17) எனும் தனது மகன் கடந்த 31ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை வரையில் வீடு திரும்பவில்லை என தயார் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சிறுவன் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் , பெற்றோருக்கு அல்லது பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
அழுகிய மரக்கறிகளை ஊழியர்களின் சமையலுக்காக வைத்திருந்த முல்லைத்தீவு ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நிறுவனம்...










