ட்ராக்டர் சந்திக்கு அருகில் டிப்பர் மோதி ஆட்டோ நசுங்கியது! 2 இளைஞர்கள் பலி! வீடியோ

0

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பின்னால் பயணித்த மேலும் மூவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர...

இன்றைய (27.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி...

யாழில் கோயிலில் மோதல்! படுகாயமடைந்தவரின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டது!

0

யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி, மதுப் போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஆலய வேள்வி நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு நண்பர்கள் மது அருந்திய நிலையில் அவர்களுக்கிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாய்த் தர்க்கம் தீவிரமடைந்த நிலையில், ஒருவர் மீது கண்ணாடி போத்தலால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் படுகாயமடைந்த நபர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்...

19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!

0

புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 19 நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை ஆனமடுவ – அடிகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குழந்தையை வாங்குவதற்காக அழைத்து வரப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வான் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் குழந்தையின் தாய், அவரது மூத்த சகோதரர், அவரது மனைவி, குழந்தையை வாங்கத் தயாராக இருந்த தம்பதியினர் மற்றும் வானின் சாரதி ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குழந்தையை விற்க முயன்ற...

யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியில் நள்ளிரவில் பயங்கரம் – சொகுசு கெப் வண்டியுடன் மோதி காட்டு யானை பரிதாப பலி!

0

ஏ-9 பிரதான வீதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர விபத்தில் காட்டு யானை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சொகுசு கெப் வாகனம் ஒன்று முற்றாக நசுங்கி உருக்குலைந்துள்ளது! ​நடந்தது என்ன? இதோ முழுமையான விபத்து அறிக்கை நள்ளிரவில் வீதிக்கு வந்த எமன்! ​கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கெப் (Cab) வண்டி, திங்கட்கிழமை (25) இரவு மரதன்கடவல, தோணிகல பகுதியை கடந்தபோது இந்த அதிர்ச்சி விபத்து நிகழ்ந்துள்ளது. ​கண்டினியூஸாக பயணித்த வாகனத்தின் குறுக்கே, திடீரென காட்டு யானை ஒன்று வீதியைக் கடக்க முயன்றுள்ளது. கண்ணிமைக்கும்...

மாணவியைக் காப்பாற்றச் சென்ற பாடசாலை அதிபர் கடலில் மூழ்கி துயர மரணம்; மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

0

படல்கும்புர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் (25) மாலை கிரிந்த கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது, 14 வயதுடைய மாணவி ஒருவர் கடலில் மூழ்கியதைக் கண்ட பாடசாலை அதிபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்துள்ளார். இதன்போது, அவர்கள் இருவரும் பலத்த கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைக் கண்ட அங்கிருந்த உயிர் பாதுகாப்புப் பிரிவினரும் (Life Guards) பிரதேசவாசிகளும் இணைந்து, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இருவரையும் மீட்டு தெபரவெவ ஆதார...

அம்பாறையில்17 வயதான 2 சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் தமிழ் முதலாளி! அதனை வீடியோவாக எடுத்து முதலாளியிடம் பணம் பறித்த சிறுவர்கள்! முதலாளி விளக்கமறியலில்! நடந்த என்ன?

0

அம்பாறை கல்முனையில் 17 வயதுச் சிறுவன் ஒருவருக்குப் பணம் தருவதாகக் கூறி, ஓரினச்சேர்க்கை மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 56 வயது வர்த்தகரை, எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை , கல்முனை வர்த்தக நிலையம் ஒன்றில், நீண்டகாலமாக இத்தகைய சட்டவிரோதப் பாலியல் செயற்பாடுகள் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதன்போது,...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடக்கும் பிண வியாபாரம்! பரபரப்பு தகவல்கள் இதோ! Video

0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடக்கும் பிண வியாபாரம்! பரபரப்பு தகவல்கள் இதோ

இன்றைய (26.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தினரிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செயல்திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட...

மட்டக்களப்பில் மீன் பிடிப்பதற்கு தனியாக சிறிய படகில் கடலுக்குச் சென்ற 19 வயது விஜயகாந் சடலமாக மீட்பு !

0

படகில் தனியாக கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன களுதாவளை இளைஞன் சடலமாக மீட்பு மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் படகில் மீன் பிடிக்க சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று (25) திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல் முன்னெடுத்துக்கொண்டிருந்த மீனவர்களினால் மீட்கப்பட்டு களுதாவளைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை (23) மீனவர் ஒருவர் கடலுக்கு சென்று காண நிலையில் அப் பகுதி மீனவர்கள் பொதுமக்களால் தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது சடலமாக மீட்கப்பட்டவர் மட்டு களுவாஞ்சிகுடி பொலிஸ்...