பளையில் மின்சாரம் தாக்கி சிவதாஸ் உயிரிழப்பு!

0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் மின்சார இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாவச்சேரியில் லண்டன் அண்ணனுக்கு துரோகம் செய்த தம்பி! பணத்துக்காய் சோரம்போகும் இரத்த பாசம்.!

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். சாவச்சேரியை சேர்ந்த அண்ணன் தம்பி தொடர்பான சம்பவமே இது. அண்ணன் லண்டனில் நிரந்தரமாக வசித்து வருகிறார். தம்பி சாவச்சேரியில் பரம்பரை வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்கும் தந்தை வழி முதுசமாக காணித்துண்டு இருந்துள்ளது. தாய் தந்தை மறைவுக்கு பிறகு அதை சமமாக இருவரும் பிரித்து தத்தமது பெயர்களில் எழுதிக் கொண்டார்கள். தனது காணித்துண்டில் ஆடம்பர வீடொன்றை கட்டத் திட்டமிட்டார் அண்ணன். கடந்த 2024 ஆண்டு தொடக்கத்தில் இலங்கை வந்த அவர், வீடு கட்டும் திட்டத்தை தம்பியிடம் சொல்லி, அதை...

இன்றைய (11.07.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சக ஊழியர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது. குடும்ப கவலை தீரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஊதா அதிர்ஷ்ட எண்:...

யாழில் இளைஞனை கடத்திச் சென்று நிர்வாணமாக்கி சித்திரவதை!! காருக்குள் காணப்பட்ட வாள்களில் இரத்தக்கறை!! வீடியோ

0

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, காரில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை பொலிஸார் விரட்டி பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகில் கார் ஒன்றில் வந்த 05 பேர் கொண்ட கும்பல் அவ்விடத்தில் நின்ற இளைஞனை காரில் நாவற்குழி பகுதிக்கு கடத்தி சென்று , ஆடைகளை களைந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி , கூரிய ஆயுதங்களால் தாக்கிய பின்னர் , மீண்டும் இளைஞனை காரில் கொண்டு வந்து...

யாழில். 21 இலட்ச போலி நாணய தாள்களுடன் கைதானவருக்கு 06 ஆண்டுகள் சிறை!

0

யாழ்ப்பாணத்தில் 21 இலட்ச ரூபாய் போலி நாணயத்தாள்கள் மற்றும் அதனை அச்சிட பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் கைதான நபருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்று 06 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு 21 இலட்ச ரூபாய் பெறுமதியான போலி 5 ஆயிரம் நாணய தாள்கள் மற்றும் அதனை அச்சிடுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் குறித்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்து...

தாங்க முடியாத அந்த வலி! யாழில் ரயில் முன் பாய்ந்து பிரபாகரன் பலி!

0

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல், யாழ்.கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்குச் சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். பின்னர் அவரது சடலமானது எடுத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம்...

மசாஜ் செய்வதாக அறைக்குள் அழைத்து அவர்களுடன் பாலியல் உறவு கொண்டு அதனை இரகசியமாக வீடியோ எடுத்து புலம்பெயர்ந்தவர்களுக்கு அனுப்பிய கில்லாடிகள் கைது! தமிழர் பகுதியில் சம்பவம்!

0

பதுளை பண்டாரவளைப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா (spa) மையத்தில், வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளை ரகசியமாகப் படம்பிடித்து விற்பனை செய்யும் சட்டவிரோதச் செயல்பாடு ஒன்று பொலிஸ் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எல்லபகுதியில் இயங்கி வந்த இந்த ஸ்பா மையத்தில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது. சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர் போல வேடமணிந்த சென்று சட்டவிரோதச் செயல்பாட்டை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். 4,000 முதல் 8,000 ரூபாய் வரையிலான கட்டணம் இந்தச் சட்டவிரோதச் செயலை முன்னெடுத்த முக்கிய சந்தேக நபர்களாக, வெலிமடைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒரு ஆணும்,...

யாழில் சவர்காரத்தினுள் ஹேரோயின் கடத்திய கில்லாடி பிடிபட்டது எப்படி?

0

வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (9) கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைத ஒருவரே இவ்வாறு...

கிளிநொச்சி வைத்தியசாலையில் மயக்கத்தில் தாய்! களவு போன காது தோடு! பொலிசார் கூறிய விசித்திர காரணம்!

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம் வருத்தம் வந்தா நகை போடாதீர்கள், களவு போனால் நீங்கள் தான் பொறுப்பு.‼️ சுயநினைவற்று இருக்கும் ஒரு நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் வைத்தியசாலைக்கு ஓடினால், அங்கே நோயாளியின் உடமைகளுக்கு பாதுகாப்பில்லை வேதனையளிக்கிறது. எனது அம்மா சுயநினைவற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, யாரோ ஒருவரால் அவரது காதில் இருந்த தோடுகள் களவாடப்பட்டன. ஒரு நோயாளிக்குத் தற்காப்பு கூடச் செய்ய முடியாத நிலையில் இருக்கும்போது இந்தத் துரோகம் நடந்துள்ளது. இதனைப் பற்றி வைத்தியசாலை அரச அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில், "நாங்கள்...

யாழில் கணவர் விவாகரத்து!! அரச ஊழியரான மனைவியுடன் வாழ்ந்து வந்த மகள் கர்ப்பம்!!! மனைவியின் கள்ளக் காதலன் காரணமா?

0

அரச ஊழியரான பெண் ஒருவர் கணவனை கடந்த ஒரு வருடத்திற்கு முன் விவாகரத்து செய்து 17 வயதான பிரபரல பாடசாலை மாணவியான தனது மகளுடன் தனித்து வாழ்ந்து வந்த நிலையில் குறித்த மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பது கண்டு பிடிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக கணவர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமான போது மனைவி தனது மகளுடன் மாயமாகியுள்ளார். யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் DO ஆக பணியாற்றும் 41 வயதான குடும்பப் பெண் ஒருவர் தன்னை கணவன் தாக்குவதாக கூறி பொலிசாரிடம் முறையிட்டு...