வித்தியா கொலை குற்றவாளியின் சடலத்தை வாங்க மறுக்கும் மனைவி! எதற்காக?

0

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் சடலத்தை மனைவி வாங்க முன் வராத நிலையில், இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது அதனை அடுத்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சடலத்தை ஜெயக்குமாரின் மனைவி , அடையாளம் காட்டியதை அடுத்து , சட்ட வைத்திய அதிகாரி...

கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண் விபத்தில் பலி! வீடியோ

0

கிளிநொச்சி, உருத்திரபுரம் - கரடிபோக்கு வீதியில் இன்று (25) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டு தாயொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிப்பு தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றதே விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை: கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஞ்சினியரின் தாய், மனைவி, 14 வயது மகள் ஆகியோருடன் அந்தரங்க தொடர்பில் இருந்த யாழ்ப்பாண சாரதி பிரதாபன் எங்கே? கொலையா?

0

கொழும்பு நாவலப் (Nawala) பகுதியில் சிங்களத் தொழிலதிபர் ஒருவரின் வாகனச் சாரதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவனை பொலிசார் தேடி வருவதாகத் தெரியவருகின்றது. பிரதாபன் கடந்த 10 வருடங்களாக தொழிலதிபரின் வாகனச் சாரதிகளில் ஒருவராக கடமையாற்றியுள்ளதுடன் தொழிலதிபரின் மகனான டுபாயில் பொறியியலாளராக உள்ளவரின் மனைவி மற்றும் பிள்ளையையும் பல்வேறு இடங்களுக்கு காரில் கொண்டு திரியும் சாரதியாகவும் பணியாற்றி வந்துள்ளான். தனது முதலாளியின் மனைவியான தற்போது 65 வயதுடைய பாட்டியுடன்  10 வருடங்களுக்கு மேலாக பிரதாபன்...

கள்ள மாடு – முகமாலையில் 22 மாடுகளுடன் பாரஊர்தி மடக்கிப் பிடிப்பு! சாரதி அதிரடி கைது!

0

கிளிநொச்சி முட்கொம்பன் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நள்ளிரவோடு நள்ளிரவாக, எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி, சட்ட விரோதமான முறையில் பாரஊர்தி (Lorry) ஒன்றில் இரகசியமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட 22 மாடுகள் முகமாலை பகுதியில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் அதிரடியாக மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன. நடந்தது என்ன? கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கால்நடைகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முகமாலை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான பாரஊர்தியை நிறுத்தி சோதனையிட்ட போது, அதற்குள் மிகவும் நெருக்கடியான...

மாணவி வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான ஜெயக்குமார் சிறைக்குள் தற்கொலை! எதற்காக?

0

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த வழக்கின் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன்...

இன்றைய (25.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட...

மட்டு’வில் லண்டனிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் மரணம்!

0

லண்டனில் இருந்து தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்த இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் சத்தியமூர்த்தி மாரடைப்பால் மரணமாகியுள்ளார். குறித்த குடும்பஸ்தர் வெளிநாடுகளுக்கான பயண முகவராக நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் இருத்து தாயகம் திரும்பிய இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் சத்தியமூர்த்தி மாரடைப்பால் மரணம். திடீர் சுகயீனம் காரணமாக INSIV Global - Pvt Ltd நிறுவனத்தின் Hareendren Sooriyamoorthy அவர்கள் இன்று மாரடைப்பால் மரணமானார். ⚠️ முக்கியமான விழிப்புணர்வு செய்தி (Heart Attack Awareness) இந்த துயர சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான...

கொழும்பில் ஒருவரைக் கடத்தி 2 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிக்கு நடந்த கதி!

0

கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான குறித்த பொலிஸ் அதிகாரி, களனியில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கடந்த 21-ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச்...

அங்கொடயில் சம்பவம்!! மனைவி பலருடன் தொடர்பு! பெற்றோல் உற்றி தீ வைத்த கணவன்! வீடியோ

0

தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார். கடந்த 18 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மூச்சக்கர வண்டி ஒன்றில் வந்த அவர், குறித்த பெண்ணின் தலையில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதனால் பலத்த தீக்காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை...

சர்வதேச மேடையில் தமிழரின் சாதனை: சுவிஸ் தொழிலதிபருக்கு உலகின் சிறந்த CEO விருது!

0

ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான "Best CEO Awards 2026" விருது வழங்கும் விழாவில், சுவிஸ் தொழிலதிபரான ஸ்ரீ இராசமாணிக்கம் உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த உயரிய விருதிற்காக உலகின் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 1,089 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வெறும் 70 தலைவர்கள் மட்டுமே இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டனர். தொழில்துறை முன்னேற்றம், புதுமை, மாற்றுத் தலைமையியல் மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகிய துறைகளில் வெளிப்படுத்திய சிறப்பான பங்களிப்பை...