யாழில் சினிமா பாணியில் மணல் கடத்தல்!! துரத்திய பொலிசஸ் ஜீப்பை வழி மறித்த டொல்பின் வாகனம்!! நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்து , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த டொல்பின் ரக வாகனம் தொடர்பில் பொலிஸார் விசரணைகளை முன்னெடுத்துள்ளனர். கிளாலி பகுதியில் இருந்து அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இரண்டு டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றி வருவதாக , சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கொடிகாமம் - புத்தூர் வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது குறித்த இரண்டு டிப்பர் வாகனமும் அவ்வீதியூடாக வந்த போது அதனை வழி மறித்துள்ளனர்....
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கே லஞ்சம் கொடுக்க முற்பட்டார்களாம்!! முன்னாள் நீதி அமைச்சரின் மகன் உட்பட இருவர் கைது!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவை பொலிஸார் கொலை செய்வதைத் தடுப்பதற்கும், குறித்த சந்தேகநபரின் தடுப்புக்...
அம்பாறை பெண் வைத்தியரை கொலை செய்த கள்ளக் காதலனுக்கு அக்காவாக மாறி அலுவல் பார்த்த மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன. அந்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பொலிஸாரின் நீண்ட தேடுதல் வேட்டையின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவரது மனைவியையும் பொலிஸார் இன்று (24) யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்தனர். இந்தக் கைதின் பின்னர் இவ்வாறு மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் பின்னணி மற்றும் சடலம் மீட்பு கடந்த ஜூன் 17 ஆம் திகதி...
இன்றைய (25.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 ரிஷபம் இன்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் இன்று நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள்...
யாழில் மிக இளவயது தவில் வித்துவான் தவறான முடிவெடுத்து மரணம்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த பிரபல இளம் தவில் வித்துவான் சச்சின் பிரசாத் அவர்கள் சற்று முன் தன் முடிவால் வாழ்வை முடித்துக் கொண்டார் என அறியமுடிகிறது... இவர் எதற்காக இவ்வாறான முடிவெடுத்தார் என அறிய முடியவில்லை.
கனடாவுக்கு அழைப்பதாகக் கூறி யாழில் பெற்றோரின் 8 கோடி ரூபா பெறுமதியான சொத்தை அபகரித்த கனடா நிரோஜன்!!
கனடாவில் அஜாக்ஸ் (Ajax) பகுதியில் வசித்து வரும் 47 வயதான சிவரட்ணம் நிரோஜன் என்னும் காவாலி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது பெற்றோரை கனடாவுக்கு எடுப்பதாக கூறி யாழ்ப்பாணம் வந்து அவர்களின் 8 கோடி ரூபா பெறுமதியான வீடு,வளவினை தனது பெயருக்கு மாற்றி எழுதிவிட்டு அவர்களை அம்போ என கைவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான முழு விபரங்களும் ஓரிரு நாட்களில் வெளியிடுவோம்.
மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாணவி துஸ்பிரயோகம்! தடயவியல் வைத்தியர் கைது!
வட கொழும்பில் உள்ள ராகம போதனா வைத்தியசாலையில் தடயவியல் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர், 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாமுனுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை, பெம்முல்லா பகுதியைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி, 16 வயது மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் கைது பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணையின்போது வெளிப்பட்ட மருத்துவத்...
ஊழல், அதிகாரத்துஸ்பிரயோகம்!! வவுனியா நகரசபை தவிசாளர், சாவகச்சேரி உபதவிசாளர் பதவிகள் பறிக்கப்பட்டன!!
வடமாகாண ஆளூநரால் , வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாநகர சபையில் நடைபெற்ற சில செயற்பாடுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் , முதல்வரான சு.காண்டீபனையும் , உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றரிக்ககையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உபதவிசாளர் ஞா.கிசோர் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கியும் , உள்ளூராட்சி உறுப்பினர் பதவியை வறிதாக்கியும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வர்த்தமானி ஊடாக...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஒரே நேரத்தில் 4 பெண்களுடன் படுத்திருந்த மன்மதனும் 4 பெண்களும் கைது!
நான்கு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது வள்ளிபுனம் பகுதியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நான்கு பெண்கள் ஆண் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் 80(mg) மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. வள்ளிபுனம் பகுதியில் நடப்பது என்ன விபச்சாரமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தக் கைது நடவடிக்கை.. போதைப்பொருள் (ஐஸ்) வைத்திருந்த குற்றத்திற்காகவே பிரதானமாக நடத்தப்பட்டுள்ளது. எனினும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளூர் அல்லாத ஒரு பகுதியில் தங்கியிருந்ததும், அவர்களிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதும் இப்பகுதியில்...
கனடாவிலிருந்து கட்டுநாயக்கா வந்த 18 வயது யவதி இந்த வயதிலேயே இவ்வளவு பயங்கரமானவளா? கைது செய்யப்பட்ட பின்னணி!
போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகளின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்பு 352 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 352 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் சந்தேக நபர் நேற்று இரவு (23) சுமார் 10:40 மணியளவில், கனடாவின் டொராண்டோவிலிருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானம் EK 648 மூலம் இலங்கைக்கு வந்தடைந்தார். சோதனையின்போது, பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,265 கிராம் (35.265 கிலோகிராம்) ஹஷிஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டெடுத்தனர். இலங்கை சுங்கத்...










