கிளிநொச்சியில் நடு வீதியில் அடித்துக் கொல்லப்பட்டார் பாடசாலை அதிபர் கணேசன்!! வீடியோ
வழமையான தனது நடை பயிற்சியினை முடித்து திரும்புகின்ற போது பெரிய மோட்டார் சைக்கிலில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் மோதியதில் ஓய்வு பெற்ற அதிபர் பெ. கணேசன் அவர்கள் படுகாயம் அடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்துள்ளார். சமீப நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணிக்கும் இளைஞர்களால் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளன. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார் சட்டத்தை...
பிருத்தானியாவில் 15 வயது மனவளர்ச்சி குறைந்த தமிழ் சிறுமி கர்ப்பம்!! கணவனே காரணம் என பொலிசாரிடம் மாட்டிய பச்சைக் கள்ளி வெள்ளவத்தை சுரேக்கா கள்ளக்காதலனுடன் இலங்கைக்கு தப்பி ஓட்டம்!!
பிருத்தானியாவின் லெஸ்டர் பகுதியில் 15 வயதான ஓட்டிசம் என்ற நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு மனவளர்ச்சியற்ற நிலையில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த தமிழ் சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது கர்ப்பத்திற்கு காரணம் தனது கணவரே என அப்பாவியான கணவனை பொலிசாரிடம் மாட்டியுள்ளாள் கொடூர மனைவியான வெள்ளவத்தையை சொந்த இடமாக கொண்ட 38 வயதான தமிழ் குடும்பப் பெண் சுரேக்கா. சுரேக்காவின் பெற்றோர் தீவகத்தைச் சேர்ந்தவர்கள். 1990ம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் பின் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் குடியேறியுள்ளார்கள். வெள்ளவத்தைப்...
லண்டனில் நாட்டுப்பற்றாளனான பொறியியலாளர் ஜெயந்தனை குத்திக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை! நடந்தது என்ன?
உணவகத்திற்கு வெளியே விமானப் பொறியாளரைக் குத்திக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை புஷே (Bushey) உணவகத்திற்கு வெளியே விமானப் பொறியாளர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு, 20 ஆண்டுகள் குறைந்தபட்ச சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 20 ஆண்டு காலத்திற்குப் பிறகே அவர் பரோல் (Parole) எனப்படும் தற்காலிக விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியும். லண்டனின் டாலிஸ் ஹில் (Dollis Hill) பகுதியைச் சேர்ந்த 26 வயதான டெக்வார்ன் வில்லியம்ஸ் (Dequarn Williams), புஷே ஹை ஸ்ட்ரீட்டுக்கு அருகில் உள்ள 'வூ லவுஞ்ச்'...
தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு!
தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility Study) இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, UN-Habitat Climate Resilient Project அலுவலகம், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் மற்றும் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் (Consultants) ஆகியோர் இணைந்து கள ஆய்வில் பங்கேற்றனர். இதன்போது தண்ணிமுறிப்பு குளத்தின் தற்போதைய நிலைமைகள், அணைக்கட்டின் பலப்படுத்தல் பணிகள், பழுதடைந்த கதவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் குளத்திற்கு நீர் வரத்து ஏற்படுத்தும் ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் நேரடியாக பார்வையிடப்பட்டன. மேலும், குளத்தின்...
கிளிநொச்சியில் பெரும் சோகம்!! பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலியான காட்சிகள்! வீடியோ
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் இன்று திங்கட்கிழமை (22.06.2026) அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாகப் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா (வயது-02) குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
முல்லைத்தீவு கைவேலி விபத்தில் கந்தசாமி மரணம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.06.2026) காலை வீதியால் பயணித்த வாகனமொன்று மோதித் தள்ளியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிருப்பு- 01 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை கந்தசாமி சிகிச்சை பலனின்றி இன்று (22) உயிரிழந்துள்ளார்.
அவனா இவன்! அம்பாறை பெண் மருத்துவர் கொலை சூத்திரதாரி இவ்வளவு கொடியவனா?
கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் காதலன் என கூறப்படும் நபர், தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் கண்டி பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 இடங்களில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.இருந்த போதிலும், அவர் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் தகவல் வெளியிடும்...
நகைக் கடையில் முதலாளியை உள்ளே செல்ல விட்டு தாயும் மகளுமாக லீலை ( வீடியோ)
தம்புள்ளையில் உள்ள நகை கடை ஒன்றில் நகைக்கடை முதலாளி மற்றும் ஊழியர்களை ஏமாற்றி தாயும் மகளுமாக நகையை களவெடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையுடன் கள்ளமண் கோஷ்டி மோதல்!! சிறுவர்கள், மாணவிகள் உட்பட 14 பேர் சிறையில் அடைப்பு!! பரபரப்பு வீடியோ
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) பொதுமக்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, சிறுவர்கள், முதியவர்கள், பாடசாலை மாணவிகள் உட்பட 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு காட்டுப்பகுதிக்குள் உழவு இயந்திரத்துடன் (Tractor) இருந்த ஒருவரை அவர்கள் கைது செய்ய முற்பட்டபோது, பொதுமக்களுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையே கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதன்போது, கைது செய்யப்படவிருந்த...
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மரணம்!
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (61), சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21) பிற்பகல் காலமாகியுள்ளார். 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி பிறந்த அவர், ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், பல ஊடகங்களில் மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளராக ஊடகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.










