37 கோடி70 லட் சம் பெறுமதியான போதைப் பொருளை கடத்தி வந்து கட்டுநாயக்கா அதிகாரிகளை அதிர வைத்த பல்கலைக்கழக மாணவன்!!
முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட விமானப் பயணிகள் பணம் செலுத்தி வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் 'கோல்ட் ரூட்' (Gold Route) பயணிகள் முனையத்தினூடாக இந்த வெளிநாட்டவர் நேற்று (19) நள்ளிரவு நாட்டிற்குள் நுழைய முயன்ற போதே, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். வரலாற்றில் முதல் முறை இவ்வாறு கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த, அந்நாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும்...
யாழில் சனுஜன் மரணம்!! எதிர் திசையில் வந்த வண்டி மோதியது!!
இன்றைய தினம் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதற்கான பயிற்சிக்காக சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் அச்சுவேலி பாரதி வீதி பகுதியைச் சேர்ந்த சனுயன் வயது( 22,) என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் சாரதி பயிற்சி நிறைவு பெற்றவுடன் வாகனத்தில் இறங்கி எதிர்த்து திசைக்கு சென்று கொண்டிருந்த பொழுது வேகமாக வந்த மீன் ஏற்றி சென்ற வாகனம் வேகமாக வந்து குறித்த நபர் மீது மோதியுள்ளது. இளைஞன் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார். வாகனத்தின்...
சற்று முன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன!
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://doenets.lk/examresults எனும் இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு தர்மஅடி! பட்டப்பகலில் போர்க்களமாக மாறிய தெரணியகல!
போதைப்பொருளைத் தேடுகிறோம் என்ற பெயரில் அத்துமீறி ஒரு வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார், அங்கிருந்த அப்பாவி இளைஞர்களை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே, அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இந்தச் செயல் அங்கிருந்தோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தாக்கியதோடு நிறுத்தாமல், பொலிஸார் தங்களோடு கையில் கொண்டு வந்திருந்த போதைப்பொருளை, அந்த இளைஞர்கள் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தி அவர்களைக் குற்றவாளிகளாக்க சதி செய்துள்ளனர். தங்களின் எதிர்காலத்தை அழிக்கத் துணிந்த இந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த இளைஞர்கள், தங்களைப் பாதுகாக்க பொலிஸாருடன் தைரியமாக மோதலில் குதித்தனர். இதனால் அந்த இடமே பெரும் பதற்றத்துடன்...
நெடுந்தீவு மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!
நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் இன்று (19) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்த மீனவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்றையதினம் அவரது சடலமாக தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. உரிய விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை...
குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி ராட்சத முதலையால் பரபரப்பு; அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை சுமார் 8 அடி நீளமான ராட்சத முதலை ஒன்று புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் முதலை நுழைந்ததை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு முயற்சிகளின் பின்னர் முதலையை உயிருடன் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச...
பிரபல தேசிய பாடசாலையின் 15 வயது மாணவி வல்லுறவு!! சம்பவத்தை மூடி மறைத்த அதிபரும் உப அதிபரும் கைது!
அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள தேசியப் பாடசாலையொன்றில், 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலை வளாகத்தில் வைத்து மற்றொரு பாடசாலை மாணவனால் பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில், குறித்த பாடசாலையின் அதிபர், உப அதிபர் மற்றும் சந்தேகத்திற்குரிய மாணவன் ஆகியோர் இன்று (ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். வேறு பாடசாலையிலிருந்து வந்த மாணவன் கடந்த மே மாதம் 21-ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், பாடசாலையில் நடைபெற்ற...
கனடா ஆசையை தர்சினிக்கு துாண்டி நுவரேலியா கொண்டு சென்று றுாம் எடுத்து …..! அம்பாறை பெண் மருத்துவரின் மரணத்தின் அதிர வைக்கும் பின்னணி!!
தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில்தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை சிகிச்சையாளரான அந்த பெண்ணின் மரணம், நுவரெலியாவில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில் நிகழ்ந்திருக்கலாம் என்றும், அது கொலை அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. இந்த மரணத்திற்கான பிரேதப் பரிசோதனையை தெல்தெனிய மாவட்ட மருத்துவமனையின் மாவட்ட தடயவியல் நிபுணர் டொக்டர் கே.பி.யு.கே. பண்டாரா நேற்று (18) நடத்தினார். அவர் மரணம் குறித்து திறந்த...
யாழில் எம்.பி அர்ச்சுனாவின் 10 அடி கட்டவுட் செருப்பு மாலை!! காரில் வந்து கிழித்தெடுத்த அர்ச்சுனா!! பரபரப்பு வி
யாழில். தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை கிழித்து , தனது காரில் எடுத்து சென்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன். யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல் , கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அருச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்...
குடிகாரக் கணவனின் கொடூர செயல்! மனைவி கத்தியால் குத்திக் கொலை!!
கம்பஹா மாவட்டம், கந்தானையில் நீண்ட நாள்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக, மதுபோதையில் இருந்த கணவனால் மனைவி கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 42 வயதுடைய பெண்ணே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சந்தேகநபரான 48 வயதுடைய கணவனுக்கும், உயிரிழந்த மனைவிக்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்ச்சியாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இன்றைய தினமும்...










