மட்டு’வில் பெரும் சோகம்! 54 வயது காமுகன் தனது 12 வயது மகளை துஸ்பிரயோகம் செய்ததை அறிந்த தந்தை தற்கொலை!

0

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவருக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நஞ்சு அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் தகவல்களின்படி, 54 வயதுடைய நபர் ஒருவர் 12 வயது சிறுமி மற்றும் அவரது 10 வயது தோழியுடன் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, சம்பவம் சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் வீட்டிற்கு...

இன்றைய (19.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். ஆனாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள்...

கனடாவில் பெண்ணுடன் சேட்டை விட்ட 36 வயதான இலங்கைத் தமிழனான திருக்குமரன் கைது!!

0

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் உள்ள டர்ஹாம் பிராந்திய போக்குவரத்துப் பேருந்தொன்றில் (Durham Regional Transit bus) இடம்பெற்ற, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Hate-motivated) தாக்குதல் சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி புரோகிரஸ் அவென்யூ (Progress Avenue) மற்றும் மில்னர் அவென்யூ (Milner Avenue) ஆகிய பகுதிகளை இணைக்கும் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நெருங்கி, அவருக்கு எதிராகப் பல அவதூறான மற்றும்...

கிளிநொச்சியில் வீதி விபத்து: யாழ்ப்பாண இளைஞன் பலி!

0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் நிதர்சன் என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் பலியானவராவார்.இவர் கிளிநொச்சி பகுதியில் தனது தினசரி பணியினை முடித்துக்கொண்டு, நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பிரதான வீதி வழியாக பயணித்துள்ளார். உமையாள்புரம் பகுதியைச் சென்றடைந்த போது, மோட்டார் சைக்கிள் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி...

ஊழல் மோசடி! வவுனியா பிரதேசசெயலாளர் சுலோஜினி பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டார்!

0

வவுனியா மாவட்டத்தின் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த சுலோஜினி குகன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் பணித்தடை செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு நடவடிக்கை தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இலஞ்சச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து, பொதுச்சேவைகள் ஆணைக்குழுவானது அவரை பணியில் இருந்து இடைநிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு!

0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (18) திகதி நடைபெற்றது. சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு, கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளன. அதவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள் எலும்புக்கூடுகள் காணப்படுவதனால், அதனை பக்குவமாக சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில்...

அம்பாறை வைத்தியசாலையில் கடமையாற்றிய 33 வயது பெண் மருத்துவரை அனுபவித்த பின் கொன்றது இவனா? பொலிசார் தேடுகின்றார்கள்!! நடந்தது என்ன? வீடியோ

0

கண்டி தெல்தெனியவில் பூட்டப்பட்ட கார் ஒன்றிற்குள் பிசியோதெரபிஸ்ட் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காதலருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் பொலிஸார் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய, வெலிகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பிசியோதெரபிஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காதலன் தலைமறைவு... தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் சடலம் ஒன்று இருப்பதாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று (17) பிற்பகல் 2 மணியளவில் தொலைபேசி மூலம் தகவல் அளித்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள்...

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்!

0

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, இன்று (18) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு குழுவினால், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இடம்பெற்ற...

அமெரிக்கா போயும் ஆமத்துறு அடங்கவில்லை!! பாலியல் சேவை பெற முயன்ற போது கைது!! நடந்தது என்ன?

0

அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பாலியல் சேவைகளைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைதான இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்கு, தனது பல்கலைக்கழகப் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஆட்கடத்தல் மற்றும் வணிக ரீதியிலான பாலியல் தொழிலை ஒடுக்குவதற்காக பொஸ்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘ஒப்ரேஷன் ரெட் கார்ட்’ (Operation Red Card) என்ற விசேட இரகசிய நடவடிக்கையின் கீழ், கடந்த சனிக்கிழமை ‘ரிவியர்’ (Revere) ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 32 வயதான மஹாயாயே வினீத தேரர், அமெரிக்காவின்...

அந்த நரகலோகத்திற்கு திரும்ப போக மாட்டேன்!! 4ம் மாடிக்கு மீண்டும் செல்லமாட்டேன் என அழுது புலம்பும் சுரேஷ் சலே!

0

நான் மீண்டும் அந்தத் தடுப்புக் காவல் கூடத்திற்குச் செல்ல விரும்பவில்லை. அந்த இடம் ஒரு நரகம் போன்றது. எனக்கு மரணமே பொருத்தமானது " என அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தனது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலின் கீழ் இருந்த சுரேஷ் சலே, திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை இந்த நிலையில், மருத்துவமனையில் சுரேஷ் சலே,...