யாழில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

0

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற பேரணி, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் ஆரம்பமானது. காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட வாகனம் பேரணியின் முன்னணியில் செல்ல, உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர். பல ஆண்டுகளாக தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள், உண்மை மற்றும் நீதியை...

தெல்லிப்பழையைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் அபிநயா மரணம்!

0

மடத்தடி, கொல்லங்கலட்டி, யாழ்.தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், 4 ஆம் யூனிட், வாரிகுட்டியூர், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசன் அபிநயா (அபி) சுகவீனம் காரணமாகத் தனது 36 ஆவது வயதில் நேற்று வெள்ளிக்கிழமை (28.08.2026) காலமானார்.

யாழ்ப்பாணத்தில் இரு ரவுடிகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு! எதற்காக தெரியுமா?

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில் ,கடந்த 2012ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர். குறித்த 09 நபர்களையும் எதிரிகளாக பெயர் குறிக்கப்பட்டு , மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன இந்நிலையில் , குறித்த...

தமிழர் பகுதியில் AC பஸ்களில் நடக்கும் கேவலங்கள்!

0

நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் சொகுசு AC பேருந்தில், அதிகளவிலான பயணிகள் ஏற்றப்படுவதால் தங்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சொகுசு AC பேருந்து எனக் கூறி பயணிகளிடம் ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் அதற்கேற்ற வசதிகள் வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நான்கு பேர் அமர வேண்டிய இருக்கையில் ஆறு பேர் அமர வைக்கப்படுவதாகவும், பேருந்தின் ஏனைய பகுதிகளிலும் பயணிகள் நெருக்கமாக நின்று பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், உரிய...

அவுஸ்ரேலியா தமிழ் பொறியியலாளர் குடும்பமாக நேபாள வெள்ளப் பெருக்கில் மாயம்!

0

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த தமிழ்ப் பொறியியலாளர் 47 வயது சந்திரசேகரன் முரளிதரன், 42 வயதான அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் இரு மகன்களான 14 வயதான அஷ்வின், 11 வயதான ஆருஷ் ஆகியோர் நேபாள – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகியுள்ளமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. கைலாஷ் மலை யாத்திரைக்காக ‘ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ்’ அமைப்பின் மூலம் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற இந்தத் குடும்பத்தினருடன், காலை உணவுக்குப் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை என்று உறவினர்கள்...

யாழில் சட்டவிரோத மாடு வெட்டும் நடவடிக்கை முறியடிப்பு; 4 மாடுகள் மீட்பு! ஒருவர் கைது! வீடியோ

0

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய வீதிப் பகுதியில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மாடு வெட்டும் நடவடிக்கையை பொலிஸார் முறியடித்துள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஜே.பி. ஜெயமாலின் வழிகாட்டலின் கீழ், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இந்த சட்டவிரோத நடவடிக்கை கண்டறியப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த இடத்திலிருந்து 58 கிலோகிராம் மாட்டு இறைச்சியும், உயிருடன் நான்கு மாடுகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நான்கு மாடுகளில் மூன்று பசு மாடுகளும், ஒரு நாம்பன் மாடும் அடங்குவதாக பொலிஸார்...

கொழும்பில் பரபரப்பு! காரில் கடத்தப்பட்ட யுவதி ; பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

0

யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (29) பகல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழுவொன்று குறித்த வீதித் தடையருகில் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 26 வயதான குறித்த யுவதி எனினும், கார் நிற்காமல் சென்றதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் காரைச்...

யாழ் செல்வச் சந்நிதி ஆலயத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களை அச்சுறுத்தி வாகனத்தால் மோத முற்பட்ட புலம்பெயர் தமிழ்க் காவாலியால் பெரும் பரபரப்பு!!

0

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றதாக புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தின் தீர்த்த உற்சவம் நேற்று இடம்பெற்ற நிலையில், பக்தர்களுக்காக பல்வேறு தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு தாகசாந்தி நிலையத்தில் சுகாதாரத் தரம் உறுதி செய்யப்படாத நீரில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்டதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற...

இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் மீது எந்நேரமும் தாக்குதல் நடாத்தலாம்!! அவதானத்துடன் இலங்கை!!

0

இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். தங்கள் நாட்டு துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில்...

கிளிநொச்சியில் நெல் உமிக்குள் மறைத்து மரக்குற்றிகள் கடத்தல்!

0

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். நேற்று பிற்பகல் (28) பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 15 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான மரக் குற்றிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது பார ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சாரதி மற்றும் கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகள் ஆகியவற்றை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை...