யாழில் பிரபல கிறீஸ்தவ போதகர் நையப்புடைக்கப்பட்டார்! நடந்தது என்ன?

0

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு...

இலங்கையில் உள்ள கனேடிய தூதரகத்திற்கு நியாயம் கேட்கச் சென்ற தமிழ் யுவதிக்கு கொலை மிரட்டல்! அவதானம் மக்களே!

0

இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்திற்குச் சென்று நியாயம் கேட்ட ஈழத்தமிழ் பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் இளைஞர், யுவதிகளை கனடாவிற்கு அனுப்புவதாக ஏமாற்றிய கும்பல் ஒன்றின் மூலம் துபாயிலிருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் வேலைவாய்ப்பு வழங்கி அங்கு குடியேறுவதாகக் கூறி, போலியான ஆவணங்களை வழங்கி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கண்டறிக புவியியல் வரைபடங்களை ஆராய்வது தெற்காசிய கலாச்சார நிகழ்வுகளை ஆராய்தல் துயரக் கால உதவிச் சேவைகளைப் பெறுதல் கனடாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி தமிழ் இளைஞர், யுவதிகளை...

உலுக்குளம் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தாயை காட்டுக்குள் அழைத்துச் சென்று கணவன் கொன்றது ஏன்?

0

அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடபெற்றுள்ளது. இன்று காலை (28), சந்தேக நபர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அந்த வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத் தாக்குதலால் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், உலுக்குளம பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயதுப் பெண் ஆவார். தனிப்பட்ட தகராறு...

யாழில் நடந்த கலியாண வீட்டில் மணப் பெண்ணின் முன்னாள் காதலன் பெரும் ரகளை!!

0

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் சற்று முன் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த மண்டபத்தில் நடந்த திருமண வைபவத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் உள்ளே புகுந்த காவாலி ஒருவன் மண்டபத்தில் மணமக்கள் அமர்ந்திருந்த மேடையில் ஏறி ஒப்பாரி வைத்து அழுது புலம்பியதாகத் தெரியவருகின்றது. நிறைவெறியில் வந்திருந்த குறித்த காவாலியை அங்கிருந்தவர்கள் துாக்கிச் சென்று மண்டபத்திற்கு வெளியே கிடத்திய போது அவனுக்கு ஆதரவாக வந்த சிலர் அங்கு குழப்பம் ஏற்படுத்த முற்பட்டதாகவும் இதனையடுத்து அவர்களும் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு கவனிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....

ஆட்டோ விபத்தில் இருவர் பலி!! காலியில் பரிதாபம்!! வீடியோ

0

காலி, அம்பலன்வத்தை அனகாரிக தர்மபால மாவத்தையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், கராப்பிட்டியவிலிருந்து அம்பலன்வத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் மோதியதில், அதன் பின்னாசனத்தில் பயணித்த 59 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த 49 வயதுடைய ஆண் பலத்த காயங்களுடன் காலி...

பிறந்து 10 நாள் குழந்தை உட்பட 3 பேர் விபத்தில் பலி!! மதவாச்சி பிரதான வீதியில் நடந்தது என்ன?

0

கெபித்திகொல்லாவ-மதவச்சிய பிரதான சாலையில் உள்ள கோனமரியாவ பகுதியில், இன்று காலை (27) மிட்சுபிஷி மொன்டெரோ காரும் ஒரு முச்சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், படவியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து நாள் குழந்தை, அதன் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்கள் அனுராதபுர போதனா மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது

மட்டக்களப்பில் கைத் தொலைபேசி வெடித்து 19 வயது சங்கீதன் பலி!! நடந்தது என்ன?

0

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பெரும் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதான கமலேஸ்வரன் சங்கீதன் எனும் இளைஞன் இன்று ( 27/08/2026 ) பிற்பகல் 5 மணி அளவில் தனது வீட்டில் கையடக்க தொலைபேசியை சாஜ் செய்தவாறு நெஞ்சில் வைத்துக்கொண்டு உறங்கிய நிலையில் மின்சாரம் தடைப்பட்ட சந்தர்ப்பத்தில் கைத் தொலைபேசி வெடித்து குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மண்ணின் பிரபல இராசயனவியல் துறை ஆசிரியர் கலா ரீச்சர் மரணம்!!

0

தன் கற்பித்தல் திறனால் சிறந்த மாணவ தலைமுறையொன்றை உருவாக்கிய பெருமைக்குரியவரும், பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவருமான யாழ். மண்ணைச் சேர்ந்த ‘ கலா ரீச்சர் ‘ என அழைக்கப்படும் செல்வி. கலா நமசிவாயம் இன்று வியாழக்கிழமை (27.08.2026) காலமானார். இவர் யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்.இந்து மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் முன்னாள் இரசாயனவியல்துறை ஆசிரியருமாவார்.

மட்டு’வில் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு பெண மரணம்!

0

மட்டக்களப்பு, காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். குறித்த பெண் தனது வீட்டிற்கு அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி மாலை 5:15 மணியளவில் பொருட்கள் வாங்குவதற்காகக் கடைக்கு வந்த இரண்டு சிறுவர்கள், அப்பெண் காயமடைந்து கிடப்பதைக் கண்டு அப்பகுதிப் பெரியவர்களுக்குத் தகவல்...

விபத்தில் 7 பேர் பலி! யாழ்ப்பாண பேரூந்து சாரதிக்கு 13 வருட கடூழிய சிறை

0

அதிவேகப் போட்டி… 7 பேர் பலி! பேருந்து சாரதிக்கு 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உறுதி! ⚖️ ​சாலையை பந்தயக் களமாக்கி 7 பேரின் உயிரைப் பறித்த கொழும்பு – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சாரதிக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது! ​நிகழ்ந்தது என்ன? கடந்த 2017-ஆம் ஆண்டு சிலாபத்தில், மணிக்கேற்ப 80 முதல் 120 கி.மீ வேகத்தில் மற்றொரு பேருந்துடன் போட்டியிட்டுச் சென்ற இந்த அதிவேகப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியை...