அர்ச்சுனா சற்று முன் சிறையிலிருந்து நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார்!
யாழில் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, காணிப் பிரச்சினை ஒன்றின் போது பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியிருந்தார். குறித்த காணியின் உரிமை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு...
கராத்தேயில் சாதனை படைத்த சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழன் கௌரிதாசனுக்கு ஷிஹான் பட்டம்!
கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள் சர்வதேச செயலமர்வைத் தொடர்ந்து கருப்புப்பட்டி வழங்கும் நிகழ்வு நேற்று (26) சூரிச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் நான்காவது தலைமுறை தலைமை பயிற்சியாசிரியர் கௌரவிக்கப்பட்டபோதே “ஷிஹான்” பட்டம் அளிக்கப்பட்டது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் சுவிட்சர்லாந்து நாட்டுக்கான பிரதிநிதியும், தலைமை ஆசிரியரும், சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாமின் தேசிய கராத்தே நடுவருமான சிகான் விபுலானந்தன்...
முல்லைத்தீவில் பெண்ணின் தங்கச் சங்கிலியை காவாலிகள் அறுத்துச் செல்லும் காட்சிகள்! வீடியோ
முள்ளியவளை வடக்கு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளியவளை பகுதியிலுள்ள பலசரக்கு கடையில் பொருட்கள் வாங்க சென்றிருந்த பெண்மணியின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அறுத்து தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் (28.04.2026) காலை 11.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் முதலில் கடைக்கு வந்து தீப்பெட்டி வாங்கி விட்டு கடைக்குள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டுநின்ற பெண்மணியின் ஒரு பவுண் எடையுடைய தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு வேகமாக...
இன்றைய ((29.04.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம்...
காலியில் 20 வயது யுவதியின் கை, கால்களைக் கட்டி வைத்து அக்காவின் 38 வயது கணவனும் அவனது 68 வயது அப்பாவும் பாலியல் வன்கொடுமை! நீதிமன்றம் கொடுத்த தண்டனை இதுதான்!
2014 ஆம் ஆண்டு காலி - ஹபரடுவ , பெதின்னொருவ கிராமத்தில் 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை மற்றும் மகனுக்குக் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து காலி உயர் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம, தீர்ப்பளித்தார். முதல் குற்றவாளியான மகனுக்கு, பிறிதொரு கொலை முயற்சி வழக்கில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றம் அதிரடி உத்தரவு அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ....
தையிட்டி விவகாரம் – கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்!
கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின் அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட இருந்தது. அதன் போது, காணி உரிமையாளர்கள் "காணிகளை விடுவிக்கும் நோக்குடனையே அளக்கின்றோம்" என எழுத்தில் உறுதி மொழி வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரி இருந்தனர். அதற்கு இவ்வாறான உறுதிமொழிகளை அதிகாரிகளாக நாம் எழுத்தில் வழங்க முடியாது அதற்கான அதிகாரங்கள் எம்மிடம் இல்லை...
யாழில் ஆசிரியைகள், மாணவிகளின் இரகசிய புகைப்படங்கள் வெளியாகின! 17 வயதான 3 மாணவர்கள் கைது!!
சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை 'செயற்கை நுண்ணறிவு' (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, அவற்றைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, தற்போது சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஆறு மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பாடசாலை அதிபரினால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மூன்று மாணவர்கள் கைது அந்த முறைப்பாட்டுக்கு அமைய, முதற்கட்டமாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 17 வயதுடைய...
யாழில் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் குமரன் நடிகர் விஜய் தொடர்பாக கூறிய பரபரப்பு தகவல் இதோ! வீடியோ
யாழில் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் குமரன் நடிகர் விஜய் தொடர்பாக கூறிய பரபரப்பு தகவல் இதோ! வீடியோ
தமிழர் தாயகத்தில் தொடரும் துயரம்: கிளிநொச்சியில் இளைஞன் உயிரிழப்பு! எதற்காக இந்த முடிவு எடுத்தான்?
கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேதீஸ்வரன் இயன்முகிலன் ( வயது-20 ) நேற்று திங்கட்கிழமை (27.04.2026) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். மிகவும் துடிப்பான இளைஞனாக அறியப்பட்ட குறித்த இளைஞனின் திடீர் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் தாயகப்பகுதியில் இளவயது தற்கொலைகள் திடீரென அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
யாழில் நீதிமன்றத்திற்கு சென்ற மனைவி, அவளது சகோதரன் மீது கணவன் நடு வீதியில் மறித்து கத்திக்குத்து! சாவகச்சேரி சம்பவப் பின்னணி இதுதான்! CCTV வீடியோ
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினரிடையே நிலவி வரும் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இன்று (27) இந்த வழக்கு விசாரணைக்காக மனைவியும் அவரது சகோதரனும் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர். விசாரணைகள் முடிவடைந்த பின்னர், இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இதன்போது, வழியில் மறைந்திருந்த கணவன், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை...










