Home செய்திகள் அம்பாந்தோட்டையில் பெற்றோர் முன்பாகவே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள்...

அம்பாந்தோட்டையில் பெற்றோர் முன்பாகவே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட 3 பேரின் சடலங்களும் மீட்பு!

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹுங்கம களமெட்டிய கடலில் கடந்த மே 30 ஆம் திகதி (வெசாக் பூரணை தினம்) அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரின் உடலம் கரை ஒதுங்கி உள்ளது.
பலத்த அலையில் சிக்கி இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் உடலங்கள் 31 ஆம் திகதி காலை கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூவரும் ஹுங்கம துடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 12, 17 மற்றும் 18 வயது உடையவர்கள். இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.இதே சம்பவத்தில் இளைஞன் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பி பிழைத்ததாகவும் தெரிய வந்துள்ளது. கடலோர பாதுகாப்பு குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய ஒரு துயரமான நினைவூட்டல் இது..

May be an image of one or more peopleMay be an image of one or more people, water, beach and oceanMay be an image of swimming

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply