சொத்துக்களை பறித்த பின் அப்பா, அம்மாவை தெருவில் அலைய விட்ட மகன்! தென்னிலங்கையில் சம்பவம்!
வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வயதான அந்த தம்பதிகளிற்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர். மகன் ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்த நிலையில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகின்றார். மகள் கணவனை இழந்து வறுமையில் வாடுவதாக அந்த வயோதிப தம்பதிகள் கூறியுள்ளனர். இந் நிலையில் வெளினாட்டில் இருந்து திரும்பிய தமது மகன், பெற்றோரின் சொத்துக்ளை பறித்ததோடு அவர்காளின் உடமைகளுக்கும் தீவைத்து, விட்டைவிட்டு வெளியேற்றி...
யாழில் 14 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற காவாலிகளைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள்!! பொலிசார் அசமந்தம் என குற்றச்சாட்டு!! வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சபாபதி பிள்ளை வீதியைச் சேர்ந்த உதயன் அவர்களின் மகளான லோஜி என்பவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கஞ்சா கசிப்பு போன்ற வியாபாரம் மற்றும் பாவனை தொடர்பாக பல வழக்குகள் இவர்மீது பதிவாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுதலையாகி வந்துள்ளார். நபர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை கைவிட்டுள்ளார் என கூறப்படும் நிலையில் பாடசாலைக்கு செல்லும் சிறுமிகளை இலக்கு வைத்து பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேக நபர்...
இணையத்தில் விற்கப்படும் பெண்களின் புகைப்படங்கள் – பொலிசார் அவசர எச்சரிக்கை
பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, இலங்கை பொலிஸ் சிறுவர்...
தலைமன்னாரில் கணவன் மேற்கொண்ட கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு
தலைமன்னார் பகுதியில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்துள்ளார் தலைமன்னார் பகுதியில் , கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து , கணவன் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார் அதில் படுகாயமடைந்த மனைவியை மீட்டு , தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமன்னார் பொலிஸார் , கணவனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர.
2 பெண்களை திருமணம் செய்த வைத்தியர்…இறப்பின் பின் வெளிவந்த இரகசியம். சடலத்தை ஏற்க மறுக்கும் இரு மனைவிமார்கள்….
பதுளை போதனா மருத்துவமனையில் பணியாற்றிய 49 வயதான மயக்கவியல் நிபுணர் டாக்டர் பிரபாத் அனுருத்த தயாரத்னவின் திடீர் மரணம், மருத்துவத் துறையிலும் சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கினிகத்தேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், பின்னர் பதுளையில் வசித்து வந்ததுடன், கொழும்பு நாலந்தா கல்லூரியின் முன்னாள் மாணவராகவும் விளங்கினார். 1998-1999 காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இணைந்து மருத்துவக் கல்வியை நிறைவு செய்த அவர், பின்னர் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வந்தார். கடந்த 23ஆம் திகதி வழமைபோன்று பதுளை போதனா மருத்துவமனைக்குச் சென்ற டாக்டர் தயாரத்ன,...
டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ காவாலி: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்! வீடியோ
டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு, ஹன்வெல்ல மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதத்தைப் பரப்பிய ‘பஸ் லலித்’ என அறியப்படும் லலித் கண்ணங்காரவை, காவல்துறையினர் கைது செய்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று (25) அதிகாலையில் டுபாயிலிருந்து நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட இந்த பாதாள உலகக் குற்றவாளி, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றவாளி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, ஹன்வெல்ல மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி...
கிளிநொச்சியில் 17 வயது மாணவி ரயிலில் மோதுண்டு பலி! கார் நொருங்கியது! வீடியோ
கிளிநொச்சி – யாழ் பல்கலைக்கழக வீதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில், கடவையை கடக்க முற்பட்ட காரை மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரில் பயணித்த 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,
நல்லுாரில் களவெடுக்கும் பெண் கள்ளிகளை பெயர் விபரங்களுடன் கட்டித் தொங்க விட்ட பொலிசார்!! வீடியோ
நல்லுாரில் களவெடுக்கும் பெண் கள்ளிகளை பெயர் விபரங்களுடன் கட்டித் தொங்க விட்ட பொலிசார்!! வீடியோ r
மட்டு’வில் 17 வயது மாணவி சதுமியா மரணம்!!
ட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 வயதான S. சதுமியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக இன்றைய தினம் (25) உயிரிழந்துள்ளார். சுங்காங்கேணியை பிறப்பிடமாகக் கொண்ட இம் மாணவி மட்/ககு/ சுங்காங்கேணி வலம்புரி விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 12 ல் கல்வி பயின்று வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல கனவுகளுடன் கல்வி கற்று வந்த மாணவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் பத்மசிறி பெரேரா என்ற கெஹல்பத்தர பத்மேவை, 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேக நபரை கொழும்பு பிரதம நீதிபதி அசங்க போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அப்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன் பல உண்மைகளை வெளிப்படுத்தினர். “சந்தேக நபரிடமிருந்து 8 கைபேசிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் இருந்த...










