லண்டனிலிருந்து வந்த 37 வயதான சொந்த மாமனுடன் தலைமறைவான யாழ் பல்கலைக்கழக மாணவி!! காதலன் நிர்க்கதி!!
தனது தாயின் சொந்த தம்பியாரான குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ளார் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கற்கும் 22 வயதான மாணவி. தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவிக்கு காதலன் ஒருவரும் இருந்துள்ளர். இருவரும் பாடசாலையில் கற்கும் போதே காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் மாணவி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய போதும் காதலன் தெரிவாகவில்லை. தற்போது மாணவியின் காதலன் கல்வியற்கல்லுாரிக்கு தெரிவாகியுள்ளதாகவும் அங்கு தங்கிியிருந்து கல்வி கற்று வருவதாகவும் தெரியவருகின்றது. இருவரும் கற்றல் செயற்பாட்டை முடித்த பின் திருமணம் செய்து வைக்க இரு தரப்பு பெற்றோரும் முடிவு எடுத்திருந்தனர். இந்...
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்’! யாழில் கதறும் தாய், பிள்ளைகள்
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (25) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில், சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது. இந்நிகழ்வைக் கண்டித்து, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்நாட்டு...
நல்லூர் LAVIN’s சைவ உணவக உரிமையாளருக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் தண்டம்!! கட்டாவிடில் 6 மாத சிறை!! எதற்காக?
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள LAVIN’s சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய , மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு...
யாழில் களவாடி அடகு வைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்ட காட்சிகள் இதோ!! வீடியோ
யாழ். குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வீடுகளை இலக்கு வைத்து தங்க நகைகளை திருடி, பின்னர் அவற்றை அடகு வைத்து வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸாரின் விசாரணைகளில், கோப்பாய் பகுதியில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் தலா ஒரு வீட்டிலும் என ஐந்து வீடுகளில் தங்க நகைகள் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டிலிருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான...
நைனாமடம் பகுதியில் வேலை செய்யும் அசோக் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டான்!!
மாரவில, மூதுகட்டுவ கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் பாரிய கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார். நண்பர்களுடன் விடுமுறையைக் கழிக்கச் சென்ற இடத்தில் எதிர்பாராத சோகம் ஏற்பட்டுள்ளது. வென்னப்புவ – நைனாமடம பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஐவரைக் கொண்ட இளைஞர் குழுவினர், விடுமுறையைக் கொண்டாடுவதற்காகச் சனிக்கிழமை (22) மாலை மாரவில கடற்கரைக்கு வந்துள்ளனர். மாலை 6:00 மணியளவில் இவர்கள் கடலில் இறங்கி நீராடிக்கொண்டிருந்தபோதே, திடீரென வந்த இராட்சத அலை இரு இளைஞர்களை இழுத்துச் சென்றுள்ளது. அலையில் சிக்கி...
டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ என்பவர் மீது மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36...
இறந்து விட்டதாக கருதப்பட்டு செத்தவீடு நடந்து கொண்டிருந்த போது உயிருடன் நடந்து வந்த நபரால் பெரும் பரபரப்பு!! கல்கமுவவில் நடந்தது என்ன?
பர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து வந்த விசித்திரமான சம்பவமொன்று கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. இவ்வாறு திடீரெனத் தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவராவார். வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திரு. கீர்த்திசேன சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியினால் கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும்...
பிருத்தானியப் பொலிசாரால் தேடப்படும் யாழ்ப்பாண நபர்!!
பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார் தேடி வருகிறார்கள். ஸ்விண்டன் பகுதியில் தேடப்படும் அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோgpரியுள்ளனர். சனிக்கிழமை காலை, வில்ட்ஷயர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “தற்போது காவல்துறையால் தேடப்பட்டு வரும் 24 வயதான சிந்துஜன் பாலேந்திரன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.” “சிந்துஜன் ஸ்விண்டன் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்பவர் என்பது அறியப்படுகிறது.” என்றார். நிதிக்குற்றங்கள் தொடர்பில் அவர் தேடப்படுகின்றார்.
யாழ் நெடுந்தீவில் சினிமா நடிகர் விஜயகாந் ஸ்ரைலில் கால்களால் அடிபடும் குதிரைகள்!! வீடியோ
யாழ் நெடுந்தீவில் சினிமா நடிகர் விஜயகாந் ஸ்ரைலில் கால்களால் அடிபடும் குதிரைகள்!! வீடியோ
தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்கப்பட்ட காட்சிகள்!! வீடியோ
பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். தியவன்னா ஓயாவின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு படகுப் படைப்பிரிவைச் சேர்ந்தஉயிர்காக்கும் குழுவினர், கிம்புலாவலவிற்கு அருகிலுள்ள சதுன் உயன பகுதியில் பெண்ணொருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். இதையடுத்து, கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு அதிவேக அவசர மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், குறித்த பெண்ணை பாதுகாப்பாக நீரில் இருந்து மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட பெண்...










