யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் விதுசன் மரணம்! நடந்தது என்ன?
பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கதிர்காமநாதன் விதுசன் என்பவர் என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19) காலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் ஏனைய நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பெந்தொட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றைய ராசி பலன்கள் (21.04.2026)
மேஷம் இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியானநிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப் படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 7, 9 ரிஷபம் இன்று விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம்....
யாழ் வண்ணார்பண்ணையில் 160 பரப்பு காணி கள்ள உறுதி மூலம் விற்பனை! ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட கால பகுதிக்கு பின்னர் புத்தளம் வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். வண்ணார்பண்ணை பகுதியில் 160 பரப்பு காணியை மோசடியான உறுதி மூலம் காணி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்வதற்கு கடந்த ஒரு வருட காலமாக பொலிஸார்...
போதைப்பொருள் வாங்க மனைவியை விற்ற கணவன்! பலரால் துஸ்பிரயோகம்! தாங்க முடியாது கண்டி ஏரியில் குதித்த மனைவி!
போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தேடும் நோக்கில், தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும், அந்தப் பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மற்றொருவரையும் கைது செய்வதற்கு அலவதுகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முப்பத்தைந்து வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அந்தப் பெண், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் கண்டி ஏரியில் குதித்துள்ளார். இதன்போது முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் அவர் காப்பாற்றப்பட்டு, அகுரண பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநலப்...
அவதானம் பெண்களே! சுவிஸ் தமிழ்ப் பெண் யாழ் வந்து போதைக்கு அடிமையானது எப்படி? பல இளைஞர்களுடன் தொடர்பு!
சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த 41 வயதான 3 பிள்ளைகளின் தாயார் தற்போது சித்தசுவாதினமற்ற நிலையில் சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ் மயிலிட்டிப் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தனது பெற்றோரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக கடந்த வருட தொடக்கத்தில் குறித்த குடும்பப் பெண்ணும் கணவனும் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள். வீட்டு அத்திவார வேலைகளை முடித்துக் கொண்டு கணவன் சுவிஸ் சென்றுவிட மனைவி யாழ்ப்பாணத்தில் தனது உறவுகளுடன் நின்று வீடு கட்டும் வேலையை மேற்பார்வை செய்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த சிவ மாதங்களாக...
யாழில் தேநீர் குடித்த கணவன் றோல்ஸ் சாப்பிடாத காரணத்தால் மனைவி தீயில் எரிந்து மரணம்!
யாழில், தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார். இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு கணவரிடம் வற்புறுத்தியுள்ளார். இதன்போது கணவர் அவரை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து...
யாழ் கீரிமலைக் கடலில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் குளித்த போது நடந்த சம்பவம்! சந்துரு பலி!
யாழ்ப்பாணம் - கீரிமலை கடலில் நீந்தியவேளை தண்ணீரில் மூழ்கி ஆணொருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஏனையோர் கேணியில் குளித்தவேளை குறித்த நபர் கடலில் இறங்கி குளித்துள்ளார். இதன்போது தீடீரெ நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி...
இன்றைய (20.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 7 ரிஷபம் இன்று மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி...
கனடாவிலிருந்து இலங்கை சென்ற தமிழ் குடும்பத்திற்கு நடந்த கொடுமை! அவதானம் புலம்பெயர் தமிழர்களே!
கனடாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற தமிழ் குடும்பம் ஒன்றின் உடமைகள் மற்றும் பெருந்தொகை பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த விவரங்கள்: இடம்: தென்னிலங்கையில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி. பாதிக்கப்பட்டவர்கள்: ஒரு தம்பதியினர், அவர்களது மகன் மற்றும் கனடிய மருமகள். திருடப்பட்டவை: * 2 டேப்லெட்கள் (Tablets). 1000 கனடிய டாலர்கள். பல லட்சம் இலங்கை ரூபாய். நடந்தது என்ன? பாதுகாப்புக் கருதி மகன் மற்றும் மருமகள் தமது கணினிகள் மற்றும் பணப்பைகளை பெற்றோரின் அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளனர். அவர்கள் திரும்பியபோது, அறையின் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருப்பதையும், உடமைகள் திருடப்பட்டிருப்பதையும்...
மட்டு’வில் மிளகாய் தோட்டத்திற்குள் வைத்து ஜெயகாந்தன் சுட்டுக் கொலை! வீடியோ இணைப்பு
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.தனது தோட்டத்தில் வேலை செய்து விட்டு குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது தோட்டத்தில் உள்ள குடிசையில் உறங்கி கொண்டிருந்த நபரே இவ்வாறு பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதனை...









