மன்னார் வீதியில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள் ; இழுத்துச் செல்லும் நாய்கள்! வீடியோ

0

மன்னார் சவுத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கேடும் அச்சமும் நிலவி வருகின்றது. இன்று குறித்த நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீதிகளில் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்ததோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்றுள்ளது. நீண்டகாலமாகவே இந்த நிறுவனம் மனித எச்சங்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு அருகிலேயே வீசி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.​ இதனால் அப்பகுதி...

வவுனியா மதியாமடுவில் உழவு இயந்திரம் கவிழ்ந்து சிந்துஜன் நசுங்கிப் பலி! வீடியோ

0

வவுனியா – வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று உழவியந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தேவை நிமித்தம் உழவியந்திரத்தை செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் அதனை செலுத்திச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் 29 வயதான கேசன்-சிந்துஜன் எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் தீயில் கருகி தாயும் மகளும் பலி! திட்டமிட்ட கொலை என சந்தேகம்! Photos

0

கொழும்பு மஹரகமையில் உள்ள இருமாடி வீடு ஒன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹரகம, பமுணுவ வீதி, எக்சத் சுபசாதக மாவத்தையில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 55 வயதுடைய தாய் மற்றும் அவரது 16 வயதுடைய மகள் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் வீட்டின் உரிமையாளரான 76 வயதுடைய முதியவர் ஆகிய இருவருமே பலத்த...

முல்லைத்தீவு வைத்தியசாலை எக்கவுண்டரே! படிச்சுப் பட்டம் பெற்ற நீ ஒரு சலவைத் தொழிலாளியிடம் லஞ்சம் பெறலாமா? நேற்று கைது செய்யப்பட்ட கணக்காளரின் விளையாட்டு இதோ!

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் படிச்சி பல்கலைகழகம் போய் பட்டம் பெற்று கணக்காளராக வந்து சலவை தொழிலாளியிடம் போய் இலஞ்சம் வாங்குகின்றீர்களே! ஒரு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் யாரிடம் இலஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டனர்? என்பதனை அறிந்து போது வேதனையாக இருந்தது. வைத்தியசாலையில் பயன்படுத்தப்படும் ஆடைகள் உள்ளிட்ட துணிகளை சுத்தம் செய்து விநியோகித்து வரும் ஒப்பந்தத்தை பெற்றவரிடம் இலஞ்சம்...

கலியாணவீட்டுக்கு நாளைக் குறித்து விட்டு மாப்பிளை நோர்வேக்கு தப்பி ஒட்டம்! நடந்தது என்ன?

0

காணியை அளவீடு செய்ய வாருங்கள் என காணி உரிமையாளர்களிடம் கோரி விட்டு, கடற்தொழில் அமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இது எப்படியென்றால் , கல்யாண வீட்டுக்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளை ஓடி போனது போன்று என தெரிவித்துள்ள வலி. வடக்கு பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் விகாரைக்கு எதிராக 30ஆம் திகதிக்குள் வழக்கு தாக்கல் செய்யாது விடின் சபை நடவடிக்கைகளை தொடர்ச்சியாகப் புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே...

கனடாவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களால் இலங்கை இளைஞன் படுகொலை! CCTV Video

0

கனடாவின் ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா எனத் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் சம்பவ தினத்தன்று நள்ளிரவு 12:40 மணியளவில், Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து வீட்டிலிருந்த நபர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், காயமடைந்த நபரை மீட்டு தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொலிஸார்...

இன்றைய ராசி பலன்கள் (19.04.2026)

0

மேஷம் இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 1,2 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக் காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடை...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கணக்காளர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது! நடந்தது என்ன?

0

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர். 'விநியோகஸ்தர் ஒருவரிடம் கையூட்டு பெறுவதற்கு முயற்சித்த போது குறித்த தகவல் கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்' என தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைக கணக்காளர் கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்திய முல்லைத்தீவுப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கைதுக்கான காரணம் இதுவரை...

மட்டு’வில் சாராயம் குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த 19 வயது மகன்!

0

மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (17) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த விபரங்கள் வருமாறு: சித்தாண்டி 4ஆம் பிரிவு, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவதினம் மாலை 6.00 மணியளவில், சந்தேகநபரான மகன் தனது தாயிடம் மது அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் கேட்டுள்ளார். தாயார் தன்னிடம் பணம் இல்லை...

அவதானம் பெற்றோரே! 25 வயது இலங்கை மாணவி பிருத்தானியா பல்கலைக்கழகத்தில் கற்ற போது நடந்த கதி!

0

பிரித்தானியாவில் உள்ள கொவென்ட்ரி பல்கலைக்கழகம்யில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவர், கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட  ஒரு நாள் தாமதம் காரணமாக தனது கல்வி கனவை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ,தெரியவருகையில், இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய நவோத்யா டி சில்வா என்ற மாணவி,  International Hospitality and Tourism Management துறையில் பட்டம் பெற லண்டனில் கல்வி பயின்று வந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கான இந்த பாடநெறிக்காக சுமார் 42,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் அதாவது சுமார் 1.6 கோடி ரூபாவுக்கும் அதிகமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இரண்டாம்...