தமிழர் பகுதியில் பயங்கரம்!! யுவதியை அறுத்து பிரியாணி சமைத்து சாப்பிட்டவர்கள் யார்?
சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன் இருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. சிவப்பு நிற சூட்கேஸ் – பெண்ணின் உடல் பாகங்கள் அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி...
மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு – அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டம், கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாவ – ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தௌபீக் முகமட் தாரிக் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விவசாய இயந்திரத்தை கழுவுவதற்காக வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் கொம்ரசர் இயந்திரத்தை இணைத்திருந்த நிலையில், மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக கஹடகஸ்திகிலிய – ரத்மல்கஹவெவ கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் திடீர் மரண...
வவுனியாவில் காணாமல் போன தேவசகாயம் சடலமாக மீட்பு!
வவுனியாவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நபர் இன்று காலை வவுனியா பறயனாளங்குளம் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அவரது இறப்பு தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர் முன்னர் வெளியாகிய செய்தி கீழே! வவுனியாவில் 62 வயதுடைய நபர் காணாமல் போயுள்ளார் வவுனியா மில் வீதி பகுதியில் இருந்து 62 வயதுடைய தேவகாயம் தொம்பிலிப்பு என்பவர் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி காலை 7.00 மணியளவில், வவுனியா மில் வீதி பகுதியில் இருந்து அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 🔎 காணாமல் போனவரின் விபரங்கள் பெயர்: தேவகாயம் தொம்பிலிப்பு வயது: 62 காணாமல்...
கிளிநொச்சியில் வீட்டில் நின்ற உழவு இயந்திரத்தில் நசியுண்டு குழந்தை மரணம்!
கிளிநொச்சி முரசுமோட்டையில் வீட்டில் நின்ற உழவு இயந்திரம் ஏறியதில் நசியுண்டு 4வயது பாலகன் மரணமான சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகனங்களை இயக்கும் போது அவதானம் தேவை.
யாழ் பண்டத்தரிப்பில் 237 பேரின் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது இந்த மின் குமிழா? வீடியோ
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர். கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது...
வாணவேடிக்கையால் தீப்பற்றிய பனைமரம், பாதுகாப்பு வேலி – யாழ் திருவிழாவில் விபரீதம்
யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இதன்போது பனை மரம் ஒன்றும், பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாகவும் கோரிக்கைகளும் அறிவுறுத்தல்களும்...
யாழில் கோயிலுக்கு சென்ற பலரின் கண் பார்வை பறி போனது! வீடியோ
யாழில் கோயிலுக்கு சென்ற பலரின் கண் பார்வை பறி போனது! வீடியோ திருவிழா அசம்பாவிதத்தினால் இதுவரை 127 பேருக்கு கண் சிகிச்சை : பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று இரவு (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின் விளக்குகளின் பயன்பாடு காரணமாக பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை 127 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் தற்போது...
யாழில் காதல் தோல்வி!! என்ர தங்கம் பாவம்! அவளை தொல்லைப் படுத்த வேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்ட சாரங்கன் மரணம்!!!
யாழ் வடமராட்சி நெல்லியடியைச் சேர்ந்த செல்வராசா சாரங்கன் என் 28 வயதான இளைஞன் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. கட்டட நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையாளராக பணியாற்றிய குறித்த இளைஞன் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் என்ர தங்கமும் காரணம் இல்லை.. அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம என்றும் கடிதம் எழுதி வைத்த பின்னரே தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
மாத்தறை அரச மரத்தில் இரு வெளிநாட்டவர்கள் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
மாத்தறை, திஹகொட, பலோல்பிட்டிய பகுதியில் உள்ள விகாரை ஒன்றின் போதி மண்டபத்திற்கு முன்பாக அமைந்திருந்த வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு வெளிநாட்டவர்களின் சடலங்கள் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மத வழிபாடுகளுக்காக விகாரைக்கு வந்திருந்த பிரதேசவாசிகள் சிலர் சடலங்களைக் கண்டு, உடனடியாக திஹகொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய பிரான்ஸ் நாட்டவரும், 52 வயதுடைய ஸ்கொட்லாந்து நாட்டவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் வெலிகம, மிதிகம, குருபெபில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற அன்று...
வவுனியாவில் சொந்த பேத்தியை துஸ்பிரயோகம் செய்த தாத்தாவுக்கு 15 ஆண்டு கடுங்காவல் சிறை!
12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது...










