கண்ணுக்குள் மிளகாய் தூள் தூவி சங்கிலி கொள்ளையடித்தவனை கட்ட வைத்து ஜட்டியுடன் தாக்குதல்! வீடியோ

0

கடுவெல, ஹேவாகம பகுதியில் உள்ள ஜயவிக்ரம எண்ணெய் கடையில் இன்று காலை சுமார் 10.10 மணியளவில் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்க முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர், கடை உரிமையாளரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிப்பதற்காக மிளகாய்த்தூள் அடங்கிய பையுடன் வந்ததாக கூறப்படுகிறது. உரிமையாளரின் மீது மிளகாய்த்தூளைத் தூவி, தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் அங்கிருந்தவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, குறித்த நபர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டி காருடன் மோதியதில் தாயும் 7 வயது சிறுமியும், முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழப்பு.!

0

தெல்கொட பகுதியில், கார் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பியகம பகுதியில் இருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி, திடீரென வீதியின் வலது பக்கமாகத் திரும்ப முற்பட்டபோது எதிர்திசையில் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அதில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் என ஐவர் படுகாயமடைந்து உடுபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதி,...

கல்முனையில் பாடசாலை பல மாணவிகளின் உள்ளாடைக்குள் கை விட்டு பார்த்த PHI ஐ பொலிசார் தேடுகின்றார்கள்! நடந்தது என்ன?

0

கல்முனை பிரபல பாடசாலையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் அங்கசேட்டை: பொதுச்சுகாதார பரிசோதகரைக் கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு! கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (18) மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் இடம்பெற்றபோதே இத்தகாத சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த அதிகாரி தங்களுக்கு உடல ரீதியாகவும் மன...

மாத்தறை அரச மரத்தில் இரு வெளிநாட்டவர்கள் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

0

மாத்தறை, திஹகொட, பலோல்பிட்டிய பகுதியில் உள்ள விகாரை ஒன்றின் போதி மண்டபத்திற்கு முன்பாக அமைந்திருந்த வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு வெளிநாட்டவர்களின் சடலங்கள் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மத வழிபாடுகளுக்காக விகாரைக்கு வந்திருந்த பிரதேசவாசிகள் சிலர் சடலங்களைக் கண்டு, உடனடியாக திஹகொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய பிரான்ஸ் நாட்டவரும், 52 வயதுடைய ஸ்கொட்லாந்து நாட்டவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் வெலிகம, மிதிகம, குருபெபில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற அன்று...

இன்றைய(20.08.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் முதலீடு கிடைக்கும். எதையும் சந்திக்கும் தைரியம் உண்டாகும். தொழில்வகை எதிரிகள் உங்களது மாறாத தனித்தன்மையால் ஒதுங்கி விடுவார்கள். பிறருக்கு பணம் கொடுப்பதாக இருந்தால் அதை எழுத்துப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதும் நல்லவர்களை முன்னிலையாகக் கொண்டு அவர்கள் முன் கொடுப்பதும் பாதுகாப்பு தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று ஆபத்து தரும் வகையிலான இடங்களில் கவனத்துடன் நடந்து கொள்வது நன்மையைத் தரும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவும், புதிய சொத்துகள் வாங்கும் நிலையும் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை...

விடுதியில் தூக்கில் சடலமாக தொங்கிய பல்கலைக்கழக மாணவி யாழினி! நேரில் பார்த்த மாணவிகள் மயங்கிய நிலையில் மீட்பு!

0

மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் இன்று (19) பிற்பகல் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருக்கோவில், தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே.யாழினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே நாடகத்துறை கற்கைநெறிக்காக இக்கல்லூரியில் இணைந்துள்ளார். விடுதி அறையில் மாணவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் இருவர் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக ஏனைய மாணவர்கள் அவர்களை மீட்டு மட்டக்களப்பு போதனா...

கலியாணம் கட்டி சொகுசு வாழ்க்கை வாழும் புத்த பிக்குவின் இரட்டை வேடம் அம்பலம்!!

0

கொழும்பு – குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் தேடிப்பார்த்ததில் இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது. ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் நல்ல கணவராகவும் இருந்துள்ளார்.தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு விசித்திரமான இரட்டை வேடம் தரித்துள்ளார். சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில்...

முல்லைத்தீவு கடலில் மூழ்கி கனடாவிலிருந்து வந்த குடும்பஸ்தர் சுபஈசன் பலி!

0

கனடாவிலிருந்து தாய்நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர், முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த நேரம் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 51 வயதுடைய யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த பூபாலசிங்கம் சுபஈசன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கனடாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 2 நாட்களே ஆன நிலையில், தனது நண்பர்கள் பேருந்தில் முல்லைத்தீவு பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்துள்ளார். இதன்போது, நண்பகல் வேளையில் நாயாறு கடலில் குளித்துக்...

யாழில் கார்கில்ஸ் பூட்சிற்றி இழுத்து மூடப்பட்டது!! வியாபார உரிமமும் ரத்து!! நடந்தது என்ன?

0

காலவதியான உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் யாழ் கோண்டாவில் சந்தியில் அமைந்திருந்த கார்கில்ஸ் பூட் சிற்றியின் வியாபார உரிமையை இரத்தச் செய்யுமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  காலவதியான சொக்லேட்டுக்கள் மற்றும் பால்போத்தல்கள் உட்பட பல பொருட்கள் குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இவற்றைப் பரிசோதித்த பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தனர். ஏற்கனவே குறித்த விற்பனை நிலையத்தில் இவ்வாறான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் மீண்டும் காலவதியான...

பளையில் புலிகளின் முகாம் உள்ளது என போலித் தகவல் பரப்பியவர் கைது!!

0

பளையில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்களைப் பரப்பியதற்காக, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) 46 வயது நபர் ஒருவர் பெல்லன்விலவில் கைது செய்யப்பட்டார் .