கள்ளக்காதலனான குடும்பஸ்தரால் 24 வயது யுவதி காவிந்தி கொழும்பில் கொடூரக் கொலை! உடல் நீல நிறமாக மாறியது ஏன்?

0

கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானை சயுர அடுக்குமாடி குடியிருப்பில் 24 வயதுடைய யுவதியை கொடூரமாக கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, குடா வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஹேஷலா காவிந்தி சில்வா என்ற 24 வயதான யுவதி துடைப்பத்தாலும், கைகளாலும், கால்களாலும் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.போதைப்பொருள் பாவனை மனைவியை பிரிந்து வாழும் திருமணமான சந்தேக நபர் கடந்த 8 மாதங்களாக உயிரிழந்த யுவதியுடன் தொடர்பை பேணி வந்துள்ளார். பொலிஸாரின்...

ஒரே நேரத்தில் 11 பேருக்கு மரண தண்டனை! உலகையே உலுக்கிய சீனாவின் அதிரடி முடிவு!

0

முன்னுரை மியான்மரின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள லாவ்க்காங் (Laukkai) நகரத்தை மையமாக வைத்து இயங்கி வந்த ஒரு மாபெரும் குற்றவியல் சாம்ராஜ்யம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 'மிங்' (Ming) குடும்பம் என்று அழைக்கப்பட்ட செல்வாக்கு மிக்க இக்குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இது வெறும் ஒரு சட்ட நடவடிக்கை மட்டுமல்ல, ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இணைய மோசடிகளுக்கு (Cyber Scams) எதிரான சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை உலகிற்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கையாகும். மிங் குடும்பத்தின் 'மோசடி சாம்ராஜ்யம்' (2015 -...

ட்ரம்ப் கோல்ட் கார்டு:அமெரிக்க குடியுரிமை விற்பனைக்கா? 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் -காத்திருக்க தேவையில்லை! அமெரிக்கா செல்ல இதுதான் குறுக்குவழியா? கையில் பணம் இருந்தால் கிரீன் கார்டு ரெடி!

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் "ட்ரம்ப் கோல்ட் கார்டு" (Trump Gold Card) என்ற புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது பாரம்பரிய விசா முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. செல்வந்தர்கள் பெரும் தொகையை அமெரிக்க அரசாங்கத்திற்குச் செலுத்துவதன் மூலம், மிக விரைவாக அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமையையும் (Permanent Residency), எதிர்காலத்தில் குடியுரிமையையும் (Citizenship) பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தக் கட்டுரையில் ட்ரம்ப் கோல்ட் கார்டு என்றால் என்ன, அதற்கு விண்ணப்பிக்கும் முறைகள், கட்டண விவரங்கள், மற்றும்...

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!

0

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது-48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது-43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இன்று (29) காலை புலையாவெளியை சேர்ந்த பெண்ணொருவர் மீன்வாங்குவதற்காக ஆற்றங்கரைக்கு சென்ற சமயம் ஆற்றங்கரையை அண்டிய பகுதிகளில் காட்டுயானைகளை தடுக்க போடப்பட்டிருந்த வேலியில் இணைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி...

பாதிரியார் மீதான தாக்குதல் வழக்கு : 3 பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர்!

0

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கத்தோலிக்க அருட்சகோதரர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் இன்று (29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சரீரப் பிணை சந்தேக நபர்கள் அறுவரும் தலா ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது பணி இடைநீக்கமும்...

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.42% ஆல் உயர்வு!

0

ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பைக் காட்டுகின்றது. இதற்கு பிரதானமாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்த கேள்வியின் அதிகரிப்பே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி அதிகரிப்புடன் டிசம்பர் மாதத்தில் அதிக லாபத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கையினால் முடிந்துள்ளதாக ஆடை சங்கங்களின் சம்மேளனம் (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 6.49% ஆல் அதிகரித்துள்ளதுடன்,...

இன்றைய ராசி பலன்கள் (29.01.2026)

0

மேஷம் இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய...

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 4 ஆசிரியைகள் பணி நீக்கம்!

0

கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 4 ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க காணொளி அழைப்புகள் (Video Calls) மற்றும் காட்சிகள், அந்த மாணவரின் நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.​ இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இடைநீக்கம்-முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு ஆசிரியைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணப் பரிமாற்ற சந்தேகம்-அந்த மாணவரிடமிருந்து ஆசிரியைகள் பணத்தைப் பெற்றுக்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் கல்வி அமைச்சின்...

மன்னாரிலிருந்து யாழ் வரை தொலைபேசியில் கதைத்து வந்த சாரதியின் வேலை நிறுத்தப்பட்டது!! பொறியியலாளர் விமலேஸ்வரன் அதிரடி! வீடியோ இணைப்பு!

0

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 25ஆம் திகதி அன்று காலை 9.45 மணியளவில் மன்னாரிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தின் சாரதி, தனங்கிளப்பு வரையிலான பயணத்தின் போது,...

பிருத்தானியாவில் புலம்யெர் தமிழ் முதலாளி செய்த கேவலம்! பூபதி உணவகத்திற்கு நடந்த கதி! பிச்சைக்காரர்களை விட கேவலமாக நடாத்தப்பட்ட தொழிலாளிகள்!

0

பிரித்தானியாவில் அகதிகளாக இலங்கையிலிருந்து பிழைப்புத் தேடி வந்த எமது ஈழத்தமிழர்கள், தமக்கு வதிவிட உரிமையும் புகலிடமும் கொடுத்த இந்த நாட்டிற்கும் விசுவாசம் இல்லாமல், வேலைக்கு வரும் பாவப்பட்ட தமிழர்களுக்கும் நேர்மையில்லாமல் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இப்போது பிடிப்பட்டிருக்கும் நபர் வெறும் 'Tip of the iceberg' மட்டுமே… இதுபோல் பல முதலைகள் பிடிபடாமல் பிரித்தானிய அரசின் கண்களில் மண்ணைத்தூவி வலம் வருகின்றனர். பிரித்தானியா முழுவதும் விசா இல்லாத காரணத்தைச் சாதகமாக வைத்து, தஞ்சம் கோரி வந்தவர்களை அடிமாட்டு விலைக்கு வேலைக்கமர்த்தி, அவர்களின் இரத்தத்தைச் சுவைக்கும் ஓநாய்களாகப்...