மலையகத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்கள்!! பரபரப்பு காட்சிகள் இதோ
வட்டவளை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாய் ஒருவரை சில இளைஞர்கள் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய நிலையில் அந்த இளைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றனர் இந்த தாய் எங்கிருந்து நீரில் அடித்து வரப்பட்டார் என்ற தகவல்கள் தெரியவில்லை மனிதம் மரணிக்கவில்லை
உனது மனுசனை எனக்கு விட்டுத்தா!! எவ்வளவு காசு வேணும்? யாழில் கனடா அன்ரி குடும்பப் பெண்ணுடன் பேரம் பேசியது எப்படி? ஓடியோ லீக்!
இணையத்தளம் ஒன்றில் வந்த செய்தியை அப்படியே இங்கு தந்துள்ளோம். கனடா வான்கூவர் சர்ரே பகுதியை வாழ்விடமாகவும் யாழ்ப்பாணம் கொழுபுத்துறைப் பகுதியை சொந்த இடமாகவும் கொண்ட அரியரத்தினம் அனுசா என்ற கணவனை இழந்த 47 வயதான விதவைப் பெண் யாழ் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பம் ஒன்றை சீரழிக்க முற்பட்டுள்ளார். இரு சிறு பிள்ளைகளுடன் வாழும் அக் குடும்பத்தின் 36 வயதான வாகனச் சாரதியான குடும்பஸ்தரை தன்னிடம் விட்டுவிடுமாறும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாகவும் குடும்பஸ்தரின் மனைவியுடன் பேரம் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை...
கனடாவில். யாழ் – பருத்தித்துறை இளைஞர் உயிரிழப்பு !. கொலையா?
யாழ் பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவன். கனடாவில் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,. இச் சம்பவத்தில் கமலகாசன் ஆருஜன் வயது 20. என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் சடலம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் தற்கொலையாஅல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
கிளிநொச்சியில் பரபரப்பு; எரிந்த நிலையில் சடலம் மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில் இன்று (03) எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரணைமடு குளத்தை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முக்கிய சான்றுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாவட்ட நீதிபதி சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகவும் உயிரிழந்த நபரின் அடையாளத்தை...
இன்றைய (03.08.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எடுக்க ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பயணங்களால் நன்மை உண்டாகும். ஆதாயம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்...
யாழில் கார் மோதி இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணை இவ்வாறு உயிரிழந்த நபர் 28 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். குறித்த கார் சாரதியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். யாழில் இரட்டைச் சகோதரிகளின் விபரீத முடிவால் பறிபோன உயிர்கள்
தமிழர் பிரதேசத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதியதில் ஒருவர் பலி!
கல்முனையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதியதில் ஒருவர் பலி அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் இன்று மாலை (02.08.2026)ஆம் திகதி இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொலிரோ ரக வாகனம் ஒன்று, கல்முனை தாழவட்டுவான் சந்திக்கு அருகாமையில் பயணித்தபோது சாரதிக்கு ஏற்ப்பட்ட திடீர் சுகயீனத்தால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அவ்வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த அபிவிருத்தி லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தக்...
பிரான்ஸ் செல்லவிருந்த அருணவன், பொறியியல் பீடமாணவன் தனேஸ் ஆகியோர் கோர விபத்தில் பலி!!
திருகோணமலை மாவட்டம், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று (02) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவரும், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக...
டியூஷன் மாணவிகளுக்குத் தொந்தரவு- தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது..!
காணொளி ஆதாரங்கள் மூலம் அதிரடி நடவடிக்கை; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த...
யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே தீ மூட்டி தவறான முடிவெடுத்து உயிரிழந்தனர்.
யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே தீ மூட்டி தவறான முடிவெடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும்போது பலியாகினர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது. வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










