தாண்டிக்குளத்தில் உதயகுமாரை மோதி கொன்றுவிட்டு வாகனத்துடன் தப்பி ஓடியது யார்?
வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியுள்ளது. கனகராஜன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது. இவ்விபத்தில் கனகராஜன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
யாழ் போதனா வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு! பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரை ஒருவன் கட்டிப்பிடிக்க மற்றவன் முன் பகுதியில் தாக்கினான்!
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி , அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை யுவதியொருவர் நோய் வாய்ப்பட்ட நிலையில் , குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர் நோய் வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும் , 5 ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் பகுதியில் குழுமி...
ஊழல் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ்காரன் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு பலி!
பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று அதிகாலை பாணந்துறை வலான பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாக பாணந்துறை தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.பேராதனைப் பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவருக்கு வழங்கப்பட்டிருந்த டி-56 ரக சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத் தானே சுட்டுக்...
இன்றைய (29.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம் இன்று புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாக்கும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக...
அவுஸ்திரேலியாவில் விபத்து – மோகன்தாஸ் பரிதாப பலி! குடும்பத்துடன் புதிய வாழ்க்கை தொடங்க முயன்ற குடும்பத்திற்கு சோகம்!
அவுஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பிரிஸ்பேன் அருகே நடைபெற்ற கோர சாலை விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். சரத் மோகன்தாஸ் (37) என்ற அந்த இளைஞர் ஓட்டிச் சென்ற டெஸ்லா கார், புருக்வாட்டர் பகுதியில் உள்ள அகஸ்டா பார்க்குவே மற்றும் மாக்னோலியா டிரைவ் சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீப்பிடித்தது. கடந்த ஜூலை 19, 2026 அன்று அதிகாலை 1.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில், அவசர கால மீட்புக் குழுவினர் விரைந்து சென்றும் சரத் மோகன்தாஸ் சம்பவ...
அவுஸ்ரேலியாவில் ஓடும் ரயிலில் ரவுடித் தனம் செய்த இலங்கைத் தமிழனான சிவகுமாருக்கு நடந்த கதி!!
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான சரணீஸ் சிவகுமாருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சரணீஸ் சிவகுமார் மற்றும் அவரது நண்பரான பேட்லி மாவினே ஆகிய இருவருக்கும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைக்கலப்பாக மாறியுள்ளது. இதன்போது இருவரும் இணைந்து குறித்த நபரின் முகம் மற்றும் தலையில் சரமாரியாகத்...
யாழில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பொலிசார் துரத்திய போது நடந்த கதி!!
யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் பொலிசாரை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்ற நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றுள்ளனர். நேற்று (27) பண்டத்தரிப்பு நகரத்தில் இந்த சம்பவம் நடந்தது. வீதிப்போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இளவாலை பொலிசார், ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் வருவதை அவதானித்து, அவர்களை வழிமறித்தனர். எனினும், இளைஞர்கள் பொலிசாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். பொலிசார் அவர்களை விரட்டிச்சென்று வழிமறித்த போது, இரண்டு இளைஞர்கள் தப்பியோடினர். ஒருவர் அகப்பட்டார். சிக்கிய இளைஞன், பொலிசாருடன் தகராற்றில் ஈடுபட்டு, அவர்களை தாக்க முயற்சித்தார்....
நெடுங்கேணியில் தொட்டில் முறிந்து 5 மாத குழந்தை பலி!
நெடுங்கேணி பகுதியில் நடந்த சோகம்.. பறிபோன 5 மாத பெண் குழந்தையின் உயிர்..😥😥 வவுனியா - நெடுங்கேணி, குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் பெண் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. நேற்று (27) குறித்த கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினரின் வீட்டில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த தடி எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த 5 மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், இச்சம்பவத்தில் குழந்தையின் தாயாரின் காலிலும் தடி விழுந்ததில் அவர் காயமடைந்துள்ளார் என கூறப்படுகின்றது. #தாய் உடனடியாக...
அவசர சிகிச்சைப் பிரிவில் அப்பா!! பார்க்க சென்ற மகனை மறித்த வைத்தியசாலை ஊழியர்கள்!! கோபத்தில் முரண்பாடு!! துரத்த வந்த பொலிஸ் மீது மகன் தாக்குதல்!! நடந்தது என்ன?
ஹொரணை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி படுகாயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையைப் பார்ப்பதற்காக மதுபோதையில் வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், வைத்தியசாலை ஊழியர்களை வசைபாடி ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, வைத்தியசாலையின் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் அவரை வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்திய போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் சந்தேகநபர்...
யாழில் அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!!
யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் , இரவு பேருந்துக்காக வீதியில் காத்திருந்த வேளை , அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










