இன்றைய (27.07.2026) இராசி பலன்கள் !

0

மேஷம் இன்று நன்மைகள் உண்டாகும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேச வேண்டும். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6 ரிஷபம் இன்று மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு...

PickMe சாரதி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; தந்தை–மகனின் கொடூரங்கள் அம்பலம்!

0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமகம, கலகஹேன பகுதியில் கடந்த 16ஆம் திகதி அதிகாலை கால்வாயில் இருந்து வாடகைக்கார் சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவரின் மோட்டார்...

நீர்வேலியில் போதைப் பொருட்களுடன் 3 பேர் கைது!!

0

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் நீர்வேலி பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருவதாக , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் , 5.650 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 600 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் , அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மது போதையில் காரைச் செலுத்தி இரு பெண்கள் மீது போதிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!!

0

இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும் நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கொள்ளப்பட்ட மதுபோதைச் சோதனையில், சந்தேகநபர்...

சாப்பாட்டுக்கடை முதலாளி படுகொலை: திடுக்கிடும் பின்னணி அம்பலம்!

0

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்தின் சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது. பெல்லன்வில பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரை நேற்று (25) இரவில் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை நவகமுவ பொது மயானத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தெஹிவளை - பொரலஸ்கமுவ வீதியில் பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு அருகில் நேற்று இரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்...

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற கோர விபத்து – இளைஞர் உயிரிழப்பு மூவர் படுகாயம்!

0

ல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதான வீதியில், குழந்தையேசு ஆலயத்திற்கு அருகில் நேற்று (25.07.2026) இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில், புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அதில் ஒருவர் அதிசீவிர சிகிச்சை பிரிவிலே அனுமதிக்கப்பட்டுள்ளார் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அதிவேகமாக பயணித்த நிலையில் குழந்தை இயேசு சாந்தியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு...

கனடாவிலிருந்து யாழ் வந்து ஐயர் அம்மாவை கவர் பண்ணிய 65 வயது சிவரட்ணம்!

0

யாழ் வலிகாமம் பகுதிியில் உள்ள பிரபல கோவில் ஒன்றின் 42 வயதான 3 பிள்ளைகளின் தாயான குருக்களின் மனைவி கனடாவில் இருந்து வந்த 65 வயதான சிவரட்ணம் எனும் மன்மதனுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.  மனைவியைக் காணாது குறித்த குருக்ள் தேடத் தொடங்கிய போது அவரது தொலைபேசி வட்சப்பிற்கு மனைவியுடன் சிவரட்ணம் இருக்கும் புகைப்படம் வந்துள்ளது. இதனையடுத்து குறித்த கோவில் நிர்வாகத்திடம் குருக்கள் முறையிட்டு கதறியுள்ளார். தற்போது கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் அடியவர்கள் சிவரட்ணத்தை கொலை வெறியில் தேடி வருவதாகத் தெரியவருகின்றது. சிவரட்ணம் குறித்த...

தமிழர் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி ; பெண்ணுடன் பிடிபட்ட மனேஜர்!

0

அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, அங்கு முகாமையாளராகப் பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்ட நடவடிக்கை அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உளவாளி ஒருவரைப் பயன்படுத்திப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் விபத்தில் சிக்கிப் பலி!

0

தென்கிழக்கு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த இருவர் விபத்தில் சிக்கி மரணம் ஒரே குடும்பத்தில் ஒரே நேரத்தில் 2 உயிரிழப்புக்கள் விபத்தில் ஏற்பட்டது வேதனையான விடயமே இன்று (25) தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெறும் தனது மனைவியின், தனது சகோதரியின் பட்டமளிப்பு விழாவிற்கு உற்சாகத்தோடு வந்த மச்சான், மச்சினன் இரண்டு பேரும் மஹியங்கனை பிரதேசத்தில் நடத்த மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார். அக்குறணை - தலகஹ கந்தை முனவ்வறா மஹல்லாவைச் சேர்ந்த அஷ்கர் மற்றும் ஸப்றான் என்பவர்கள் தான் அவர்கள். அவர்களின் நல்லடக்கம் இன்று 25/07/2026 சனிக் கிழமை மாலை 6:00 மணிக்கு...

யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி! என்ன நடந்தது?

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடு பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையினால் வறிதாக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகத் தான் செயற்பட்ட வேளையில் பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றது என பகிரங்கப்படுத்தியமை பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு அமைவாகத் தவறானது எனக் காரணம் காட்டி அப்போதைய பேரவை தன்னைத் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியமை தவறு எனத் தீர்பளித்து, தன்னை மீளவும் 27.08.2022 முதல்...