அதிவேகம்!! காருடன் மோதிச் சிதறி எரிந்த மோட்டார் சைக்கிள்!! வர்த்தகரின் மகன் பலி!! வீடியோ
நேற்று (23) கந்தளாய் கித்துலூத்து பகுதியில் இடம்பெற்ற விபத்தில் Paththirana Super உரிமையாளரின் 27 வயது மகன் உயிரிழந்துள்ளார். அதி வேகமாகச் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதியே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது . . திருகோணமலையில் இருந்து கபரணை நோக்கி வெளிநாட்டவர் பயணித்த கார் ரக வாகனமும் கபரணையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த உயர் ரக மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி வியத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் காயமடைந்த இருவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (22) மாலை...
இன்றைய (24.07.2026) இராசி பலன்கள்!
மேஷம் இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9 ரிஷபம் இன்று புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். அதிர்ஷ்ட...
பிரித்தானிய அமைச்சரவையில் வரலாற்றுச் சாதனை படைத்த ஈழத் தமிழ்ப் பெண்!
பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது அந்நாட்டின் புதிய இராஜாங்க அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதல் தமிழ் பெண் உறுப்பினர் என்ற பெருமையைக் கொண்டுள்ள இவர், தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பான பணிகளால் இந்த முக்கியப் பதவியை எட்டியுள்ளார். கடந்த சில வாரங்களாகப் பிரித்தானியாவின் அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாகப் புதிய பிரதமராக ஹன்டி பெர்கம் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து...
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் சிறு பிள்ளையின் என்புக்கூடு!
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடனும் காலில் காலுறையுடனும் (சோக்ஸ்) சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை , 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இன்றைய தினம் மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்...
லண்டன் டொக்டர் என ஏமாந்து தன்னுடையதை பறி கொடுத்த தமிழ்ப் பெண்!! மட்டு’வில் சம்பவம்!!
மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான 'வெளிநாட்டு வைத்தியர்' ஒருவரின் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண் ஒருவரின் முகநூலில், லண்டனைச் சேர்ந்த 'டான்' எனும் பெயருடைய வெள்ளைக்கார வைத்தியர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி நண்பராக இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் முகநூல் வாயிலாக உரையாடி வந்துள்ளனர். சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் அழைப்பு இதனையடுத்து, கடந்த...
கன்னியாவில் எதனையும் புதிதாக கட்டவில்லை – யாழில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர்
திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்த வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் , ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்கள் பாதுகாக்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வீதி ஒன்றின் பெயர்பலகையை திரைநீக்கும் நிகழ்வில் கலந்துகொண்டவரிடம் , கன்னியா பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கட்டட பணிகள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி ஒரு தொல்லியல் தளமாகும். அது தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட...
மாத விலக்கான நாட்களிலும் நவகாந்தன் கடும் தொல்லை!! பிரான்ஸ் பொலிசாரிடம் சரணடைந்த யாழ் குடும்பப் பெண்!! பெற்றோரே அவதானம்!!
இது ஒரு இணையத்தளத்தில் வந்த பதிவாகும். அதனை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்... கடந்த சில நாட்களுக்கு முன் பேஸ்புக் மூலம் எம்மை தொடர்பு கொண்ட யாழ் உரும்பிராய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தரான ஜெயபாலன் நவகாந்தன் என்பவர், தான் திருமணம் செய்து தனது மனைவியை கடந்த வருட நவம்பர் மாதம் பிரான்சிற்கு அழைத்து வந்ததாகவும் அவள் தற்போது தன்னை விட்டுப் பிரிந்து பொலிசாரிடம் சென்று தனிமையில் வாழப் போவதாக கூறி தன்னை ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்ததுடன் தனது மனைவியின் புகைப்படங்கள் மனைவியின்...
ரூபா 150 க்கு ஆசைப்பட்டு 30 இலட்சம் தண்டம் கட்டிய யாழ் தனியார் வைத்தியசாலை.
முழு இரத்த பரிசோதனைக்கு (FBC) அரசின் உச்ச அனுமதிக்கப்பட கட்டணம் ரூபாய் 400 ஆக இருக்க நோயாளியிடம் ரூபாய் 550 அறவிடப்பட்டதாம்.... யாழ்ப்பாணத்தில் அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு முப்பது லட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக, முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைகளுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு 3 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பலாலி வீதியில் உள்ள கந்தர்மடத்தில் அமைந்துள்ள Venus Speciality Hospital...
தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறிச் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றும், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் நேற்று புதன்கிழமை மாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது இரணைதீவுக்குத் தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன், அதில்...
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் தப்பிய கடத்தல்காரர்கள்: கைத்துப்பாக்கியுடன் தப்பியதாக மக்கள் பரபரப்பு தகவல்! வீடியோ
தர்மபுரம் காவல் பிரிவு, K.N.57 புன்னநிரவி கிராம அலுவலர் பிரிவு மக்கள் தர்மபுரம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில், கல்லாறு கத்தோலிக்க தேவாலயம் அருகே விடப்பட்டிருந்த ஒரு உரப்பையில், 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இரவு 23.45 மணிக்கு கைப்பற்றப்பட்டுளது.BGK 3427 என்ற பதிவு எண் கொண்ட கருப்பு நிற பல்சர் (200cc) மோட்டார் சைக்கிளும், BIJ 2767 என்ற பதிவு எண் கொண்ட கருப்பு நிற பல்சர் (160cc) மோட்டார் சைக்கிளும் சம்பவ இடத்திலிருந்து...










