இன்றைய (23.07.2026) இராசி பலன்கள்!
மேஷம் இன்று பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம் இன்று உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். காரிய வெற்றி உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது...
இலங்கை வைத்தியர் கனடாவில் கைது!! குழந்தைகளுடன் தொடர்பை பேணிய குற்றத்தில்
குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் மீது இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சிங்கள வைத்தியர் ஒருவர் Toronto போலீசாரால் நேற்று 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார்.கைது செய்யப்பட்டவர் Toronto Sick Children வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்த டிலான் திசாநாயக்க என்று Toronto போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். 44 வயதான டிலான் திசாநாயக்க முடக்குவாத வைத்திய நிபுணர்(specializes in Rheumatology) என்று வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஜனவரி மாதம் விசாரணைை ஒன்றினை ஆரம்பித்திருந்த புலனாய்வாளர்கள், பிப்ரவரியில், Sick Children மருத்துவமனையிலும், ஒரு தனியார்...
இலங்கை யுவதி உட்பட்டவர்களை அடிமையாக வைத்திருந்த இலங்கையைச் சேர்ந்த 7 பேர் மலேசியாவில் கைது!!
மலேசியாவில் சக இலங்கையர் ஒருவரை கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாக சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களம் கைது செய்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் ஜெஞ்சாரோம் பகுதியில் அமைந்துள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது முதலாளியால் கட்டாயத் தொழிலாளராகச் சுரண்டப்பட்டதாகக் கருதப்படும் இலங்கைப் பெண் ஒருவர் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மலேசியக் குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலனாய்வின் மூலம்...
வைத்தியசாலை ஊழியருக்கு மரண தண்டனை!
கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் இன்று (22) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அதன்படி, ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில், சிறைச்சாலை ஒன்றிற்குள் பிரதிவாதியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இவ்வாறு...
தான் வளர்த்த கோழிச் சேவலை உரித்து கறி சமைத்த அப்பாவை அடித்து கொன்ற மகன்! தமிழர் பகுதியில் சம்பவம்!
மகன் வளர்த்த கோழியை தந்தை சமைத்த விவகாரத்தில் மகனால் தாக்கப்பட்ட தந்தை தந்தை சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் லிந்துலை மாவுசலை மேல் பிரிவை சேர்ந்த அந்தோணி ராஜா வயது 65 என போலீசார் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் தலைமறைவாக இருந்த மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய மகன் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி லிந்துலை போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் போலீஸ் விசாரணையின் பின்னர் 20ஆம்...
யாழில் பயணிகளை காப்பாற்றிய பின் இறந்த பஸ் சாரதி!
யாழில் பயணிகள் உயிர்களை காப்பாற்றி தனியார் பேருந்தின் சாரதி திடீர் என மரணம் அடைந்தமை தியரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று (22/07) காலை நயினாதீவு குறிகாட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்தை செலுத்திச் சென்றுகொண்டிருந்தது. இதன்போது, மண்கும்பான் சந்திக்கு அருகில்சாரதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரியவருகின்றது. இதனையடுத்து , சாதுரியமாக செயற்பட்ட சாரதி பேரூந்தினை அந்த உயிர்ப்போராட்டத்தின் இறுதி நொடிகளிலும், தனது பொறுப்பை மறக்காமல், பயணிகள் எவருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவாறு பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார். இதனையடுத்து நடத்துனரின் உதவியுடன் யாழ்...
யாழில் 19 வயது யுவதி உயிரை மாய்த்தார்!
யாழ் உரும்பிராய் வடக்கு கற்பகப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ரிஷிகரன் சோபிகா எனும் யுவதி நேற்று முன்தினம் உயிரை மாய்ந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவர் எதற்காக இவ்வாறான முடிவு எடுத்தார் என்பது தெரியவில்லை.
குடும்பத்துக்காக உழைக்கச் சென்று ஹோமாகம தீ விபத்தில் தீயில் கருகிப்போன இளம் நெஞ்சங்கள்!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.... நேற்று ஹோமாகம காட்டுவன தொழில்பேட்டையில் அமைந்துள்ள ஹெல்மெட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, ஒட்டுமொத்த நாட்டை மட்டுமன்றி மனிதநேயம் கொண்ட அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கியுள்ளது. இக்கோர விபத்தில் சிக்கி பலியாகியுள்ள ஐந்து பேரின் மரணச் செய்தி, மீளாத் துயரத்தையும் சொல்லொணா மனவேதனையையும் தந்துள்ளது. அதிலும் இவர்கள் வறுமையும் குடும்பச் சூழ்நிலையும் வாட்டியபோதும், எல்லாவற்றிற்கும் தங்கள் பெற்றோரைச் சார்ந்து வாழ இவர்கள் விரும்பவில்லை. சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) பரீட்சைகளை முடித்த கையோடு, குடும்பத்திற்கு ஒரு பாரமாக...
யாழில் பாடசாலை செல்லாது சுற்றித் திரிந்த 4 மாணவக் காவாலிகள் பொலிசாரால் கைது!!
வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு மாணவர்களும் இரவாகியும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பல்வேறு அழுத்தங்கள் பெற்றோர் மற்றும் உறவுகளால் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறுவர் என்ற காரணத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் நாளை காலை 7:00 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை நாளைய தினம் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம்...
இன்றைய (22.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ரிஷபம் இன்று உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6,...









