மனைவியுடன் சண்டையிட்ட நபரின் திருவிளையாடலால் இலங்கையின் ஒரு பகுதி இருளில் மூழ்கியது! படையினர் விரைகின்றார்கள்! வீடியோ
மனைவியுடன் சண்டையிட்ட நபர் ஒருவர் உயரழுத்த மின் கம்பம் மீது ஏறியதால் மாத்தறை மாவட்டம் முழுவதும் மின்தடை கம்பூருபிட்டிய புறநகர்ப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயர் அழுத்த மின்கம்பி மீது ஏறியதால், மாத்தறை முதல் கம்பூருபிட்டியவில் உள்ள மாகந்துறை வரை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக உயர் அழுத்த மின்கம்பி மீது ஏறியதாகக் கூறப்படுகிறது. இதனால், பல பகுதிகளில் மின்சாரம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நபரை கீழே இறக்குவதற்கு காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு...
பிரான்சில் கணவனை கைவிட்டு வவுனியா போதைப் பொருள் வியாபாரியிடம் சரணடைந்த கமலவேணி!! கணவன் குழந்தைகளுடன் நிர்க்கதி!!
தனது கணவன் மற்றும் 5 வயது, 2 வயதான இரு பெண் குழந்தைகள் ஆகியோரை பிரான்சில் கைவிட்டு விட்டு வவுனியாவைச் சேர்ந்த போதைப்பொருள் காவாலி ஒருவனிடம் சென்று வசித்து வருகின்றாள் வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சொந்த இடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட 36 வயதான கமலவேணி உசாநந்தன். ஜங்ரொங் எனும் ரிக்ரொக் ஐடி மூலம் ஏற்பட்ட நட்பு தற்போது தன்னிடமிருந்து மனைவியைப் பிரித்துள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவியின் ரிக்ரொக் ஐடியில் வவுனியாப் பகுதியைச் சேர்ந்த ஒருவன் நீண்டகாலம்...
யாழ் இளைஞன் மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூட்டுக்குள் செய்த செயலால் பெரும் பரபரப்பு!
மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதியொருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள கடையொன்றில் 16,000 ரூபா பணம் திருடியமை மற்றும் மற்றுமொரு கடையை...
மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தாய் வசந்தகுமாரிக்கு நேர்ந்த கதி!
மாவத்தகம பிரதேசத்தில் தனது மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த தாய் ஒருவர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இங்குறுவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனுக்கேவத்தை வசிக்கும் 46 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான ரத்நாயக்க முதியன்சேலாகே வசந்தா குமாரி திசாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவத்தகம நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தனது மகளை பேருந்தில் ஏற்றுவதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலையில் சற்று தொலைவில் அமைந்துள்ள பிரதான வீதிக்கு வந்துள்ளார். மகளை...
மகள்களைப் பாடசாலையில் விட்டுத் திரும்பிய படை அதிகாரி பேருந்து மோதி பலி
புத்தளம் - ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமகந்த சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், உந்துருளியும் மோதி இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பிருத்தானியாவில் தமிழ் பெண் வைத்தியர் யாழிலிருந்து சென்ற 71 வயது கணவனின் தந்தை மீது பாலியல் புகார்!! மாமனார் கைது!
பிருத்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் NHS Trusts இல் வைத்தியராக கடமையாற்றும் 37 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவர், தனது மாமனார் தன் மீது பாலியல் ரீதியில் தகாத நடவடிக்கை மேற்கொண்டதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் யாழிலிருந்து சென்ற 71 வயது முதியவரை கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றார்கள். இருப்பினும் குறித்த பெண் மருத்துவர் மிகவும் திட்டமிட்ட முறையில் தனது மாமனார் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக பெண் வைத்தியரின் கணவன் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள...
யாழில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள், குண்டு மீட்பு!
யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் கு*ண்டு என்பன மீட்கப்பட்டதாகவும், இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரியின் கண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வாள் மற்றும் கு*ண்டு என்பன கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் மீட்கப்பட்டன. இந்நிலையில் இது குறித்து வாக்குமூலம் வழங்குவதள்காக அவர் கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த உத்தரவு! 8 லட்சம் ரூபா ஒப்பந்தத்தில் நடந்த கொலை!
வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் 'குங்பூ ருவான்' என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் தவிர்த்து வந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இளைஞரைத் தீர்த்துக் கட்டுவதற்காக 8 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்ததாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகையில், நவகமுவ, கொரதொட்ட, சமனல உயன வீதியில் வைத்து இந்த இளைஞர் கடந்த 16-ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம்...
இன்றைய (20.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம் இன்று வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம்...
இலங்கையை பிக்மீ சாரதியான 2 குழந்தைகளின் அப்பாவித் தந்தை கொலை செய்யப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு கால்வாயில் வீசப்பட்டது ஏன்?
வேலையை முடித்த பிறகு, தனது இரண்டு குழந்தைகளின் பசியைப் போக்குவதற்காக, நள்ளிரவில் கூடுதலாக ஒரு பயணம் மேற்கொண்ட ஒரு அப்பாவித் தந்தைக்கு நேர்ந்த இந்தத் துரதிர்ஷ்டவசமான கதியைக் கேட்டால், உங்கள் கண்களில் கண்ணீர் வந்துவிடும். 'பிக்மீ' சேவைக்காக வீட்டை விட்டுப் புறப்பட்ட இந்த இரண்டு குழந்தைகளின் தந்தை, மோசமாக சிதைக்கப்பட்ட சடலமாக ஒரு கால்வாயில் கிடந்தார். இந்தச் சம்பவம் பிட்டிபான, ஹோமகம, கலகஹேன பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது. ஒரு ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்த இந்த இளம் தந்தை, 'பிக்மீ' சேவை மூலம் ஒருவரை ஏற்றிச்...









