கட்டுநாயக்காவில் இந்த அதிகாரி என் மருமகளுக்கு செய்த கேவலம்! அநுரா வந்தும் திருந்தவில்லை!

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம் இந்த ஊழல් சேவகர்கள் அம்பலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும் ✊ என்னுடைய 21 வயது மருமகள், தன்னுடைய தாயாரைப் பார்ப்பதற்காக விடுமுறைக்காக டிசம்பர் 19 ஆம் தேதி யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள். அவளிடம் மின்னணு நுழைவு அனுமதிச்சீட்டு இருந்தது; ஆனால் தற்செயலாக தன்னுடைய பிறந்த தேதியை ஏப்ரல் என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் மே என்று தவறாக பதிவு செய்திருந்தாள். அதைக் கண்ட குடியேற்ற அதிகாரி, பிறந்த மாதத்தைத் திருத்துவதற்காக 50 பவுண்டுகள் செலுத்துமாறு அவளிடம் கேட்டார். பணத்தைக் கொடுத்த பிறகு அவள் ரசீது...

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைஷாலியின் கை துண்டிப்பு! பொலிசார் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு! நடப்பது என்ன?

0

சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து - நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் என்று பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைஷாலி என்ற சிறுமி காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இந்த விடயத்தில் மருத்துவத் தவறு...

யாழ் பல்கலை சிரேஷ்ட சித்தமருத்துவ விரிவுரையாளர் தயாளினி கொலையில் இன்னொரு திருப்பம்!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் சாட்சியம்,அவதானக் குறிப்புகள், நீதிமன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளரின் வீட்டில் குற்றச் சம்பவம் நடைபெற்றமை தெளிவாகுவதுடன் விரிவுரையாளர் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டது. குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றபோது நீதிவான் எஸ்.லெனின்குமார் இதனை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தொடர் நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஜீன் மாதம் 16ம் திகதிக்கு திகதியிட்ட நீதிவான், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன்...

ஆட்டோவுக்கு மேல் விழுந்த மரம்! மாணவன் உட்பட மூவர் பலியான நாவலப்பிட்டி விபத்து..வீடியோ

0

இன்று(4) காலை நாவலபிட்டி மாபாகந்த பகுதியில் முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சட்டென சரிந்து விழுந்ததில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவனும், இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த துயரம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உப்புச்சப்பான விசயம்? யாழில் கார்கில்ஸ் food city மனேஜருர் உட்பட இருவருக்கு சிறை! நடந்தது என்ன?

0

கோப்பாயில் அமைந்துள்ள கார்கில்ஸ் food city யில் தரமற்ற உப்பு விற்பனை செய்த காரணத்தால் இருவரிற்கு தண்டத்துடன் ஒன்றரை வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதி பொது சுகாதார பரிசோதகர் எ. ஜோ. எர்ஷன் றோய் அவர்களால் கோப்பாய் சந்தியில் இயங்கும் கார்கில்ஸ் food cityயில் 18.02.2026ம் திகதி உப்பு மாதிரிகள் பெறப்பட்டன. பெறப்பட்ட உப்பு மாதிரிகளின் தரம் தொடர்பில் பகுப்பாய்வு செய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட உப்பானது தரமற்றது என பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பூட்சிற்றி...

செம்மணியில் குவியல் குவியலாக என்புக்கள்!

0

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் புதன்கிழமை 5 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 06 என்புக்கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது இன்றைய தினம் 05 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுக்களில் 06 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மூன்றாம் கட்ட...

இன்றைய (04.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9 ரிஷபம் இன்று எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும்....

யாழில் இயக்கப் பாட்டு பாடிய பிரபல பாடகன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு! இயக்கத்தை மீள் உருவாக்க முற்பட்டாராம்!

0

எழுச்சி பாடல்களைப் பாடி அதனை சமூக ஊடங்களில் பகிர்ந்த கிளிநொச்சி இளைஞனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட இசை நிகழ்வு இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான குறித்த இளைஞன் பக்தி மற்றும் தென்னிந்தியப் பாடல்கள் பாடியுள்ளார். அதனையடுத்து, தான் இசை நிகழ்வில் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, அதனை...

அனலைதீவிற்கு நேற்று வழங்கப்பட்ட பேருந்து இன்று பழுதடைந்தது! Video

0

அனலைதீவிற்கு நேற்று வழங்கப்பட்ட பேருந்து இன்று, தற்போது பழுதடைந்து இயங்க முடியாத நிலையில் அனலைதீவு துறைமுகத்தில் நிற்கின்றது. யாழ்.மாவட்டத்தின் ஏனைய இடங்களில் பல வருடங்களாக ஓடி பழுதடைந்த நிலையில் நின்ற பேருந்திற்கு புதிய வர்ணம் பூசிவிட்டு, கடற்படைக்கு பெருந்தொகை பணம் கொடுத்து அனலைதீவில் கொண்டு சென்று இறக்கியிருக்கின்றனர்.

இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது: தந்தையின் துரித நடவடிக்கையால் குழந்தை உயிர் தப்பியது!

0

காலி மாவட்டத்தின் ஏல்பிட்டிய, கஹதூவ துடுவெகொட பகுதியில், இரண்டரை மாத வயதுடைய தனது பெண் கைக்குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாயொருவர் இன்று (02) ஏல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தகவல்களின் படி, குழந்தையை கிணற்றில் வீசிய பின்னர் தாயார் சத்தமிட்டு கூறியுள்ளார். அதைக் கேட்டு உடனடியாக செயற்பட்ட தந்தை, கிணற்றில் மிதந்து கொண்டிருந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளார். பின்னர் அயலவர்களின் உதவியுடன் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தை வீசப்பட்ட கிணறு ஆழமில்லாததாக இருந்ததால், அந்த பச்சிளம் குழந்தையின் உயிர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்...