கிளிநொச்சியில் ஒன்றரை வயது குழந்தையை 50 ஆயிரத்திற்கு விற்க முற்பட்ட தாயும் ஆணும் பிடிபட்டது எப்படி?

0

ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய்  மற்றும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில், குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை வாங்கியதாக கூறப்படும் நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோத குழந்தை பரிமாற்றம் தொடர்பான இந்த நடவடிக்கை உடனடியாக முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை தற்போது பாதுகாப்பாக பொலிஸ் காப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு உயிரை, அதுவும் பெற்ற பிள்ளையை பணத்திற்காக விற்ற இந்த செயல் அப்பகுதி மக்களிடையே...

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து – இளைஞன் பலி!

0

கலென்பிந்துணுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உபுல்தெனிய, பஹலகம ஏரி அணையில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று அணையில் இருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (25) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என கலென்பிந்துணுவெவ பொலிஸார் தெரிவித்தனர். விவசாய நடவடிக்கைகளுக்காக சில தினங்களுக்கு முன்னரே குறித்த இளைஞர் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளார். அவர் உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவரது உழவு இயந்திரத்தில் சாரதியாகப் பணியாற்றி அங்கேயே தங்கியிருந்துள்ளார். விபத்து நடந்த...

யாழ் பிரபல மருந்தகத்தின் “சேல்ஸ் ரெப்” இருவர் போதை மாத்திரைகளுடன் கைது!

0

யாழில் பிரபல  மருந்தகத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் இரண்டு பேர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் புலனாய்வுப் பிரிவினரால் போதை மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கொக்குவில் மற்றும் குருநகர் பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. சிற்றி எனும் பெயருடன் கூடிய மருந்தக விற்பனை முகவர்களே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

அர்சுனா எம்பியின் காணிக்குள் நுளைந்த பெண்கள் உட்பட 5 பேரை சிறைக்குள் தள்ளிய அர்சுனா! பாதுகாப்பிற்பாக துவக்கை தூக்கிய பரபரப்பு காட்சி! வீடியோ

0

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த காணி தனக்குச் சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பினரும் அதற்கு உரிமை கோரி வருகின்றனர். நேற்றையதினம் குறித்த காணியைச் சுத்தம் செய்யும் பணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த...

யாழில் நீண்ட காலமாக தகாத செயல் செய்து வந்த குருநர் பெற்றா கைது! பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிரடி!

0

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய குருநகர் பெற்றா என அழைக்கப்படும் ஒருவர் நேற்று (24) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 02 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்...

இன்றைய (26.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய...

முல்லைத்தீவு நகர் பகுதியில் ஹோட்டலில் றூம் போட்டு 14 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவனும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஹோட்டல் முகாமையாளரும் கைது!

0

முல்லைத்தீவு நகர் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியை அழைத்துச் சென்று விடுதியொன்றில் அறை எடுத்து அவளை துஷ்பிரயோகம் செய்த 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அந்த சிறுவனுக்கு ஒத்தாசை புரிந்து அவனுக்கு அறை வாடகைக்கு கொடுத்த விடுதி முகாமையாளரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் மரணமான மாணவி அக்சயா தாய்க்கு எழுதிய கடிதம் வெளியாகியது!!

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்... திரும்பத் திரும்பச் சொல்கிறோம், பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்று கொஞ்சம் நோட்டமிடுங்கள். பள்ளிக்கல்வி முடியும்வரைக்கும் அவர்களுக்கென்று சொந்தமாக Smart Phone வாங்கிக் கொடுக்காதீர்கள். பிள்ளைகளுக்கு முன் குடும்பச் சண்டை போடாதீர்கள். இதுபோன்ற குழந்தைகளின் சாவுகள் இனிமேலும் வேண்டாம்.  

கனடாவில் தனது உடல் உறுப்புக்களை தானம் செய்து விட்டு இறந்த யாழ்ப்பாண இளைஞன்! 6 பேருக்கு உயிர் தானம்

0

கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்ததும், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதுடைய றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என்பவரே உயிரிழந்தவர்.கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மாலை, Queen Street மற்றும் Kennedy Road சந்திப்பிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த Peel பிராந்திய பொலிஸார், மயக்க...

மாத்தளையில் தந்தையை கொலை செய்த மகன்! எதற்காக கொலை?

0

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தில், தனது தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 64 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் 33 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக...