கனடா பொலிசாரின் அலட்சியத்தால் யாழ்ப்பாண இளைஞன் பலி! நடந்தது என்ன?
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்: கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யாழ். பலாலியைச் சேர்ந்த, புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவரான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி(30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த றெஜிபோல்ட், மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்தக் கசிவு காரணமாக நிலைகுலைந்து விழுந்துள்ளார். சிகிச்சை அளிக்க தாமதம்.. இதன்போது, விரைந்து வந்த பீல்...
சற்று முன் சாவகச்சேரி நுனாவிலில் விபத்து! ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இராஜசிங்கம் வீதி குருநகர் பகுதியை சேர்ந்த 44 வயதான செல்வம் றொபின் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பாரவூர்தியின் சாரதியை மருத்துவ பரிசோதனையின் பின்னர் நாளை சாவகச்சேரி நீதவான்...
யாழில் 17 வயது பயஸ் சுட்டுக்கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு!
அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து, நீதிமன்றில் முற்படுத்துமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் அனீபா ரஜீவ் மத்திய குற்ற புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுளளார். அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கட்டளையை மீறி ஹயஸ் ரக வாகனத்தை செலுத்தினார் என பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் , 17 வயது சிறுவனான...
கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 65 வயதான மனைவியை விவாகரத்துச் செய்கின்றார் 69 வயது கணவன்! எதற்காக?
யாழ் நகர்ப்பகுதியில் கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான 8 பரப்பு காணியை தமது பிள்ளைகளுக்கு பங்கீடு செய்வதில் ஏற்பட்ட தகராறு முற்றி தனது மனைவியை விவாகரத்துச் செய்ய முற்பட்டுள்ளார் 69 வயதான தர்மராசா. தர்மராசாவுக்கு 2 ஆண், 3 பெண் பிள்ளைகளுமாக 5 பிள்ளைகள். அனைவரும் திருமணம் முடித்துள்ளனர். அவர்களில் 4 பேர் புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுடன் வாழ்கின்றாா்கள். தா்மராசாவும் அவரது மனைவியும் கடந்த 16 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்கள். அவா்களை கனடாவுக்கு அழைத்தது அவர்களது மூத்த ஆண் பிள்ளை. தர்மராசா...
சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் ரயிலுடன் மோதி சிதறிய ஆட்டோ! ஒருவர் பலி . ஒருவர் படுகாயம்…வீடியோ
சற்றுமுன் வவுனியா தாண்டிக்குளத்தில் முச்சக்கரவண்டி புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்றவர் பலியானதுடன் சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வ்வுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்துள்ளனர்.
இலங்கை திறைசேரி கணனி கட்டமைப்புக்கள் ஊடுருவி 2.5 மில்லியன் டொலர்களை ( 80 கோடி) சூறையாடிய கில்லாடிகள்!
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி முறைமைக்குள் ஊடுருவி (Hacking), 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதை நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் சட்ட அமலாக்கப் பிரிவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு வழங்க வேண்டிய 22.9 மில்லியன் டொலர் கடன் தவணையில், 2.5 மில்லியன் டொலர் நிதியைத் திறைசேரி செலுத்தியுள்ளது. எனினும், கணினி முறைமைக்குள் ஊடுருவிய சைபர் மோசடியாளர்கள், போலி மின்னஞ்சல்கள் ஊடாக அந்த நிதியை வேறொரு கணக்கிற்குத்...
இன்றைய (23.04.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது....
வவுனியாவைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் விதுஷா லண்டனில் மரணம்!
வவுனியாவைச் சேர்ந்தவரும் வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் பழைய மாணவியுமான 33 வயதான இளம் குடும்பப் பெண் பிரதாபன் விதுஷா லண்டனில் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவரது இழப்பினால் லண்டன் வாழ் வவுனியா உறவுகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீதவான் ரஞ்சித்குமார் சிறையில் அடைப்பு! நீதிமன்றில் நகைகள் கொள்ளை!
முன்னாள் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பொதுச் சொத்துக்களை கையாடல் செய்த வழக்கு இன்று (22) அழைக்கப்பட்ட போது நகர்த்தல் மனு பத்திரம் ஊடாக மன்றில் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் ஆஜராகி இருந்தார். இதன்போது திறந்த மன்றில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது களுவாஞ்சிக்குடி நீதிமன்ற...
யாழில். அமைச்சர் தலைமையில் விசேட கூட்டம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது என ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு அரச நிகழ்வுகளில் பங்கேற்றார். இதனொரு அங்கமாக யாழ்ப்பாண நகர திட்டம் பற்றிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாநகர முதல்வர், துறை சார்ந்த அதிகாரிகள் பலரின் பங்கேற்புடன் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது செய்தி சேகரிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...









