யாழில் வீடு ஒன்றில் 28 பவுண் நகைகள் கொள்ளை! கொண்டாட்டத்திற்கு செல்வதற்கு எடுத்து வைத்த நகைகளாம்!

0

யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் , தமது உறவினர் வீட்டு கொண்டாட நிகழ்வுக்கு மறுநாள் காலை செல்வதற்காக நகைகள் மற்றும் ஆடைகளை எடுத்து தயார் செய்த பின்னர் , தூக்கத்திற்கு சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த போது , ஆடைகள் களையப்பட்டு , நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை வீட்டார் பார்த்து , அதிர்ச்சியடைந்த நிலையில் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்...

தனது நண்பனுக்கு கஞ்சா விற்ற பல்கலைக்கழக மாணவனுக்கு 4 லட்சம் அபராதம்!!

0

சக மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் கடத்தல் சிகரெட்டுகளை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட பல்கலைக்கழக மாணவருக்கு, குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சத்தரசிங்க ரூ.410,000 அபராதம் விதித்தார். சந்தேக நபர் பலாங்கொடையைச் சேர்ந்தவர் மற்றும் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஆவார். புகையிலை வரி அவசரச் சட்டத்தை மீறி, நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 254 கிராம் கஞ்சா மற்றும் 500 வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததாகவும், அவற்றை விற்றதாகவும் அவர் மீது பொலிஸார் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தனர். பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் சோதனை நடத்திய மார்ஷல், கஞ்சா மற்றும் வெளிநாட்டு...

நெடுந்தீவு கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய இந்திய படகு; 11 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

0

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான இந்திய இழுவைப் படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு (05) சீரற்ற வானிலை காரணமாக கடலில் அனர்த்தத்திற்குள்ளாகியிருந்தது. குறித்த படகில் 11 இந்திய மீனவர்கள் பயணித்த நிலையில், அவர்கள் ஆபத்தில் சிக்கியிருந்தனர். இதனையடுத்து, மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் உடனடியாக ஆரம்பித்தனர். நீண்ட நேர முயற்சியின் பின்னர் இன்று (06) குறித்த 11 மீனவர்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டு நெடுந்தீவு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மீட்கப்பட்ட அனைத்து மீனவர்களும்...

தமிழர் பகுதியில் இளம் பெண் மது நீண்டகாலமாக செய்த லீலை!! பொலிசாரிடம் பிடிபட்டது எப்படி?

0

அம்பாறை மாவட்டத்தின் இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் "மது" என்றழைக்கப்படும் பெண் ஒருவர் விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் இங்ஹினியாகல பொலிஸாரும் இணைந்து செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சந்தேகநபரின் வசமிருந்து தலா 10 கிராம்...

இன்றைய (06.08.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 மிதுனம் இன்று எடுத்த காரியத்தை...

யாழில் 35 வயது குடும்பப் பெண்ணுடன் ஓடிய 20 வயது மாணவனால் இரு கிராமத்திற்கு இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது!!

0

இணையத்தளம் ஒன்றில வந்த செய்தியை இங்கு தந்துள்ளோம். யாழ் வலிகாமம் பகுதியில் இரு கிராமங்களுக்கிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாகத் தெரியவருகின்றது. இரு கிராமத்தவர்களும் ஒருவருக்கொருவர் மோதும் நிலையில் உள்ளார்கள். 35 வயதான ஒரு பிள்ளையின் தாயான கோடிஸ்வரன் ஜெயராதாவை  20 வயது மாணவனான விமேந்திரன் தஸ்மின் கூட்டிச் சென்று தலைமறைவாகியுள்ளான். குறித்த மாணவன் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்று வருபவன் எனவும் இந்த வருடம் இரண்டாவது தடவையாக இன்னும் ஓரிரு நாட்களில் எ.எல் பரீட்சை எழுத ஆயத்தமான மாணவன் எனவும்...

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் தடை செய்யப்பட்ட 24 இணையத்தளங்கள்

0

அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை நடத்திச் சென்ற 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்வதற்குத் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழுள்ள தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையினால், 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே...

யாழில் மின்தடை நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து முகமூடிக் கொள்ளையர்கள் தாக்குதல்!! நகைகள் கொள்ளை!

0

அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. பின்னர் அந்த வீட்டில் இருந்த 10 பவுண் தங்க ஆபரணங்களை அந்த கும்பலானது கொள்ளையடித்துச் சென்றுள்ளது. குறித்த கும்பலானது முகங்களை மூடி காட்டியவாறு வந்ததால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ்...

34 ஆண்டுகள் அயராத அர்ப்பணிப்பு; ஓய்வு பெறும் யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா!

0

34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று ஓய்வு பெறுகின்றார். இன்னிலையில் ஓய்வு பெற்று செல்லும் மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா தொடர்பில் , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, 34 ஆண்டுகள் அர்ப்பணிப்பின் அடையாளம் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா   யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை என்பது வடக்கு மக்களின் நம்பிக்கையின் சின்னம் மட்டுமல்ல; எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய மனிதநேயத்தின் ஆலயமாகவும் திகழ்கிறது. குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களில், குண்டுவெடிப்புகள், இடம்பெயர்வுகள், மருந்து மற்றும் உபகரணப் பற்றாக்குறைகள், மின்சாரத் தட்டுப்பாடுகள்...

பெற்றோரே அவதானம்!! ரியூசனுக்கு கொடுக்கப்பட்ட காசில் சாராயம் வாங்கிப் பிடிபட்ட மாணவன்!! வீடியோ இணைப்பு!!

0

பண்டாரவளையில் உள்ள ஒரு மதுக்கடையில் காலை 8 மணிக்கு சாராயம் வாங்கிய ஒரு பதின்வயது இளைஞனை, பொதுமக்களில் ஒருவர் சந்தித்து வாக்குவாதம் செய்யும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது. அந்தக் காணொளியில், 19 வயது இளைஞன் பள்ளிப் பையுடன் மதுக்கடையிலிருந்து வெளியே வருவதைக் கண்ட ஒருவர், அவனிடம் கேள்வி கேட்பது தெரிகிறது. விசாரணையில், அந்த இளைஞன் தனது கல்விக் கட்டணத்திற்காக வழங்கப்பட்ட பணத்தைக் கொண்டு ரூ. 3,100-க்கு ஒரு சாராயம் வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பொதுமக்களில் ஒருவர், ஒரு பதின்வயது இளைஞனுக்கு மது விற்றது குறித்து மதுக்கடை...