யாழில் அம்மாவை விட்டு அப்பா ஓடிவிட்டார் என பலருக்கு முன் கூற வைத்து கொல்லப்பட்ட மாணவன்!! வீடியோ
இணையத்தளம் ஒன்றில் வந்த செய்தியை அப்படியே தந்துள்ளோம். மனவெழுச்சி உரை’ என்று அழைக்கப்படும் மோட்டிவேஷன் ஸ்பீச் (Motivation Speech) என்பது சோர்ந்து போய் உள்ளவர்களை உற்சாகப்படுத்துவதற்கான திறன் ஆகும். ஆனால் உற்சாகமாக இருப்பவர்களை மோட்டிவேஷன் என கூறி மேடைக்கு அழைத்து வந்து அவனது சோகத்தை வெளியில் கொட்ட வைக்கவோ அல்லது பழையதை கிளற வைக்கவோ கூடாது. மோட்டிவேஷன் ஸ்பீச் செய்பவர்கள் இதில் அவதானமாக இருக்க வேண்டும். அத்துடன் பெற்றோரே உங்கள் விந்து துளியில் உங்கள் கருவில் கலந்து வளர்க்கப்பட்ட பிள்ளைகளை நினைத்துப் பார்த்தாவது உங்கள் தனிமனித...
அடுத்தடுத்து வெடிக்கும் பதற்றம்! மட்டக்களப்பு, யாழ், பதுளை சிறைகளில் பாதுகாப்பு தீவிரம்! Video
இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அமைதியின்மை சம்பவங்களையடுத்து, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டின் பல சிறைச்சாலைகளிலும் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பிலும் பாதுகாப்புத் தரப்பினர் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையைச் சூழவும் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று இரவு (06) கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள்...
தமிழர் பகுதியில் கசிப்பு காய்ச்சியவர்களை பிடிக்கச் சென்ற பொலிசாரை நையப்புடைத்த குடும்பப் பெண்கள்!
மட்டக்களப்பு – வெல்லாவெளி, 35ஆம் கொலனியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உள்ளிட்ட சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று வியாழக்கிழமை (06) இரவு சுமார் 7 மணியளவில், கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 7 பொலிஸார் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள் எனக் கூறப்படும் பெண்கள் உள்ளிட்ட...
மன்னார் வங்காலை கடற்கரையில் சடலம்! அடையாளம் காண உதவவும்!
அடையாளம் காண உதவவும். மன்னார் வங்காலை கடற்கரையில் இன்று இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் அறியப்படவில்லை. உறவினர்கள் எவரேனும் இவரை அடையாளம் காண உதவவும்.
இன்றைய (07.08.2026) இராசி பலன்கள்!
மேஷம் இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்று தரும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள்...
யாழ்.பல்கலைக்கழக மாணவி நிரோஷினி மரணம்!
இது சமூகவலைத்தள பதிவாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறை மாணவி நிரோஷினி நேற்றுப் புதன்கிழமை (05.08.2026) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
தமிழர் பகுதியில் D.I.G ஆன பொலிஸ் உயரதிகாரியையே மிரட்ட முயன்ற டிப்பர் சாரதி கைது….
அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் (D.I.G.) சுஜித் வெதமுல்ல Sujith Wedamulla அவர்களின் உத்தரவின் பேரில் அம்பாறை நகரில் முன்னெடுக்கப்பட்ட விசேட வாகன சோதனையின் போது, சட்டத்தை மதிக்காமல் நடந்துகொண்ட டிப்பர் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்படி அம்பாறை தலைமையகப் பொலிஸார் இந்த விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்தனர். நடவடிக்கையின் முன்னேற்றத்தை பார்வையிட பிரதிப் பொலிஸ்மா அதிபரும் கொண்டுவட்டுவான் குளம் அருகே அமைந்திருந்த சோதனைச் சாவடிக்கு சென்றிருந்தார். ஆரம்பத்தில் பொலிஸார் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர...
யாழில் காவாலி ஒருவன் தீயில் எரிந்து மரணம்!! தாயார் சிம் காட் எடுக்க IC கொடுக்கவில்லையாம்!!
இது இணையத்தளம் ஒன்றில் வந்த பதிவு. அதனை அப்படியே இங்கு தந்துள்ளோம். தாயாரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி புதிய தொலைபேசி சிம் அட்டை ஒன்றைப் பெற்றுத் தருமாறு கோரி ஏற்பட்ட குடும்பத் தகராறு, 24 வயதுடைய காவாலி மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்துள்ளான். சுன்னாகத்தைச் சேர்ந்த குறித்த காவாலி, தனது தாயாரிடம் சிம் அட்டை எடுத்துத் தருமாறு வற்புறுத்தியுள்ளான். இதற்கு தாயார் சம்மதிக்காததால் இருவருக்குமிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த காவாலி, வீட்டை விட்டு வெளியேறித் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அருகில்...
நீர்கொழும்பு சிறைக்குள் நடந்தது என்ன? விரிவான அறிக்கை ஜனாதிபதியிடம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06) பாராளுமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தார். கடந்த மாதம் 05ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 22 கைதிகளும் 10 அதிகாரிகளும் உயிரிழந்ததாக அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், இச்சம்பவத்தில் 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்கனவே இழப்பீடு...
யாழில் ஏழைத் தொழிலாளியின் வீட்டை நொறுக்கி காவாலிகள் அராஜகம்!
வடமராட்சி கிழக்கு, வத்திராயன் கிராமத்தில், 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்டு வீடும் காணியுமின்றித் தவித்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் காணி வழங்கிவைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட காணியில் கடந்த 21 வருடங்களாக வசித்து, அதனைப் பராமரித்து வந்த சிவதாஸ் ஞானவேல் என்பவரது இல்லமும், அதனைச் சுற்றியிருந்த காணி வேலிகளும் வியாழக்கிழமை (06) அதிகாலை சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலரால் மிகக் கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கும் வகையில் இடம்பெற்றுள்ள இந்த அடாவடிச் செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்...










