கற்பிட்டிக் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள், சகோதரன் பாரிய அலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலி!!
கற்பிட்டி, தழுவைக் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உட்பட மூவர் அலைகளில் சிக்கி மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. புத்தளம், தில்லையடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளம் பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தழுவைக் கடற்கரைக்குச் சுற்றுலாச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், வீசிய பலத்த காற்றுடன் கூடிய பாரிய கடல் அலையில் சிக்கி...
இன்றைய (07.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எடுக்க ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 ரிஷபம் இன்று பயணங்களால் நன்மை உண்டாகும். சந்திரன் ஆதாயத்தை தருவார். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை,...
கனடாவில் இருப்பதாக கூறி பாலரமணன் செய்யும் கொடூரங்கள்!! ஆட்களை கடத்தி எதியோப்பியாவில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை! வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். பாலறமணன் என்ற ஆள் கடத்தல்காரன் தான் கனடாவில் இருப்பதாக கூறி இலங்கையில் இருந்து கொண்டு பல ஆண்டுகளாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைக்கு முந்தைய தினம் அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். இவன் ஆட்களைக் கடத்தி எத்தியோப்பியாவில் உள்ள இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட மாபியாக்களுக்கு வழங்கி அவர்களை வைத்து சித்திரவதை செய்து அதனை காணொளியாக எடுத்து அதை அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் இருந்து சென்ற இளைஞர்களிடம் முற்பதாயிரம் டொலர்கள்...
யாழில் சுவிஸ் குடும்பஸ்தரை கொன்று நகைகள், பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் பிடிபட்டனர்! பொலிசார் கூறுவது என்ன?
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேசத்தில் சுவிஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று அதிகாலை (06) யாழ்ப்பாண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவர் கைது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்களிடமிருந்து சில சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான...
வீட்டில் இருந்த சிறுமி வாயைப் பொத்தி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு-கல்முனையில் வானுடன் பிடிபட்ட 56 வயது வர்த்தகர்! நடந்தது என்ன?
வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை (04) முறைப்பாடும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டிற்கமைய...
சங்கீதனை விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு – கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும்,வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இஞைளன் சாவகச்சேரிபொலீஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த் இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்த்தின்போது விடுதலை செய்ய விடுதலை...
யாழில் ஆட்டோவை நசுக்கிய டிப்பர்! ஒருவர் பலி! 2 பேர் படுகாயம்! கால்கள் முறிந்து தொங்கின!
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். புத்தூர் வீதியில் மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் , முச்சக்கர வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்து கால்கள் முறிந்த நிலையில் , மீட்கப்பட்டு , யாழ்ப்பாணம் போதனா...
யாழ். பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் வவிகரன் மரணம்! இள வயதிலும் இப்படி வந்ததா?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை 37 ஆம் அணி மாணவரான கிளிநொச்சி பகுதியைச் சேரந்த சிங்கராஜா வவிகரன் மாரடைப்பால் இன்று (06.06.2026) காலமானார். இவர் ஸ்கந்தபுரம் தாய்நிலம் அறிவுச்சோலை கல்வி நிலைய புவியியல் பாட ஆசிரியராகவும பணியாற்றியுள்ளார்.
இன்றைய (06.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று ராசியாதிபதி செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் சாதகமான பலனை தருவார். பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. அதிர்ஷ்ட...
சுவிஸ்லாந்திலிருந்து திருமண நிகழ்விற்காக வந்த குடும்பப் பெண் ரஞ்சனி யாழில் மரணம்!
யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த புண்ணியமூர்த்தி ரஞ்சினி எனும் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ் வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.










