யாழில் கிணறு ஒன்றில் அடையாளம் தெரியாத சடலம்! அருகில் மோட்டார் சைக்கிள்! கொலையா?

0

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று அவதானிக்கப்பட்டது. மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் இனங்கானப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

யாழில் ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு!

0

யாழ்ப்பாணத்தில்  ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி முருகன் வீதி பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் ஊழியர்கள் புதிய இணைப்புக்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது குறித்த வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த வேளை போக்குவரத்திற்கு இடையூறாக வயர்களை வீதியில் போட்டு வைத்துள்ளதாக , ஊழியர்களுடன் முரண்பட்டு , ஊழியர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த ஊழியர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...

படுக்கை விரிப்புகளுக்குள் வைத்து 50 கோடி ரூபா சிகரெட்டுகள் கடத்தல்!- சிக்கிய கொள்கலன்!

0

டுபாயிலிருந்து படுக்கை விரிப்புகள் எனப் பொய்யாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 33 இலட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை இலங்கைச் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டுபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சந்தேகத்துக்கிடமான கொள்கலன் ஒன்றைச் சுங்கப் பிரிவினர் அண்மையில் விசேட சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போதே, இவ்வளவு பெரிய அளவிலான சிகரெட் தொகை பிடிபட்டது. இறக்குமதி ஆவணங்களில் குறித்த கொள்கலனில் "படுக்கை விரிப்புகள்" இருப்பதாகப் பொய்யாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்க வரி மற்றும் சோதனைகளில் இருந்து...

இன்றைய (07.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். பொறுப்புகள் கூடும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 ரிஷபம் இன்று செவ்வாய் சஞ்சாரத்தால் வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்...

பிருத்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த சுகிர்தனுக்கு 16 மாத சிறை! நடந்தது என்ன?

0

பிரித்தானியாவில் மிகவும் மோசமான சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட 38 வயதான சுகிர்தன் தங்கராசா என்ற இளைஞரே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுவெளியில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டமை மற்றும் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டனின் ஹைபில்ட் லேனில் வசித்து வந்த சுகீர்தன் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி போர்ட்ஸ்மவுத்தில் உள்ள கிங்ஸ்டன்...

இன்றைய (06.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப் படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம் இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். வீண் அலைச்சல், காரிய தடை தாமதம் உண்டாகலாம்.குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்....

காலில் சிறு காயம்! உயிர் பிரிந்தது! யாழ் இந்துவில் 3A எடுத்த 19 வயது மாணவன் மரணத்தின் பின்னணி!

0

இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்… Sepsis Awareness - செப்சிஸ் விழிப்புணர்வு யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் லவன் அக்‌ஷயன் (வயது 19) கிருமித் தொற்றின் (Infection ) பின், அது Sepsis என்ற அபாயகரமான நோய்நிலையை அடைந்தமையினால் நேற்றைய தினம் (04.04.2026) உயிரிழந்திருக்கிறார். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த இவர், சிகிச்சைக்காக கோமா நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் கோமா நிலையில் இருக்கும்போதே அவருடைய க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருந்ததாகவும், அப் பரீட்சையில், கணிதப் பிரிவில்...

இன்றைய (05.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்....

தோற்காமல் இருப்பதன் மூலம் ஈரான் வெற்றி பெறுகிறது, வெற்றிபெறாமல் இருப்பதன் மூலம் அமெரிக்கத் தரப்பு தோற்றுக்கொண்டிருக்கிறது.

0

கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் மாத்திரம் அமெரிக்கா தனது ஐந்து அதி சக்தி வாய்ந்த போர் விமானங்களை இழந்திருக்கிறது. F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle): ஈரான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்த ஒரு வீரர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. A-10 தண்டர்போல்ட் II (A-10 Thunderbolt II): ஈரான் வான் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதில் பலத்த சேதமடைந்தது. இதன் விமானி குவைத் வான்பரப்பில் விமானத்திலிருந்து குதித்து...

புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து தலையை வெட்டிச்சென்ற பயங்கரம் – வவுனியாவில் பரபரப்புச் சம்பவம் Video

0

வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றி எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா -  மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று மாதங்களிற்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார். அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தது. தற்போது புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி அதில் இருந்து உயிரிழந்தவரின் தலையை இனம் தெரியாத நபர்கள் அகற்றிச்சென்றுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் அண்மையில் உயிரிழந்த ஒருவரின் இறுதிச்சடங்கு மயானத்தில்...