கஞ்சிப்பானை இம்ரான் கைது!
பிரபல பாதாள உலக தலைவர் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அவர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படுவார் என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
கற்பிட்டி விபத்தில் சிக்கி அப்பா,மகன் பலி….
கண்டக்குழி குடாவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் மரணம் கற்பிட்டி கண்டக்குழி குடாவில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் இருவரும் உயிரிழப்பு கற்பிட்டி கண்டக்குழி குடாவின் வீதி வழியாக மோட்டார் சைக்கிள் தந்தையும் மகனும் பயணித்துக் கொண்டிருந்ததாகவும் அச்சமயம் எதிர்பாராத விதமாக பின்னால் பொலிஸ் ஜீப் ஒன்று வருவதைக் கண்ட மோட்டார் சைக்கிள் செலுத்திய தந்தை பதற்றமடைந்து மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியதாகவும் அதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியோரத்திலிருந்த...
பிரித்தானியாவில் பரீட்சை மோசடி செய்த தமிழ் ஆசிரியர் சந்தோஷ்குமாருக்கு நடந்த கதி!!
பிரித்தானியாவில் மாணவர்களின் அனுமதியின்றி மாற்றங்களை மேற்கொண்ட தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு கற்றல் நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவன்றி பகுதியில் உள்ள மெடோ பார்க் பாடசாலையில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியராக பணியாற்றிய 36 வயதுடைய சாய்கிருஷ்ணன் சந்தோஷ்குமார் என்ற ஆசிரியருக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சையின் போது மாணவர்களின் அனுமதியின்றி அவர்களின் பாடநெறி பணிகளில் மாற்றங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டிற்காக, கற்பித்தல் பணிகளில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில், BTEC தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவின் கீழ் பயின்ற 23 மாணவர்களின் பிரசண்டேஷன் ஆவணங்களில்...
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! பலர் மூழ்கி காணாமல் போனதாக அச்சம்!
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த படகானது இன்று (16.08.2026) பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகட்டுவான் பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது. இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தவேளை நயினாதீவு மீனவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் தெரியவரவில்லை. இந்நிலையில்...
நாளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணசபை முன் போராட்டம்!! எதற்காக ?
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை 17ம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த...
இன்றைய இராசி பலன்கள்(16.08.2026)
மேஷம் இன்று மற்றவர்களை நன்றாக புரிந்து கொண்டு அன்புடன் பழகுவீர்கள். மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில்...
பிருத்தானியா வாழ் தமிழர்களே!! அவதானம்!! பெண் பிள்ளைகள் கடத்தப்படுகின்றார்கள்!!
பிரித்தானியாவில் பெண் பிள்ளைகளை இலக்கு வைத்து கடத்தும் சம்பவமொன்று செயல்பட்டு வருவதாக எச்சரிக்ககப்பட்டுள்ளது. இந்நிலையில், கோர்ன்வால் பகுதியில் காணாமல் போன இரு சிறுமிகள் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களை கடத்திய சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயிருந்த நிலையில், வார்விக்ஷயர் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்மத்தியில், நேற்று அதிகாலை கோர்ன்வாலின் டிண்டாகெல் பகுதியைச் சேர்ந்த 62 மற்றும் 25 வயதுடைய இரு ஆண்கள், மற்றும் 56 வயதுடைய பெண் ஒருவர்...
லண்டனில் வீடுகளுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடவடிக்கை! இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!
பிரித்தானியாவின் லண்டனில் வீடுகளுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடவடிக்கைகளை குடிவரவு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதற்கமைய Southall, Wembley ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், விசா இல்லாத இலங்கை தமிழர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் விநியோக சாரதிகளாக (Delivery Drivers) சட்டவிரோதமாக பணிபுரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் Westminster-இல் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, விசா இல்லாத 15 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். Bromley-யில் உள்ள கேரவன் தளம் ஒன்றில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் துப்புரவுப் பணிகளில்...
புலம்பெயர் தமிழர்களே அவதானம்!! கட்டுநாயக்காவில் ஜேர்மன் தமிழனுக்கு நடந்த அநீதி!!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறும் ஊழல் மற்றும் கையூட்டு நடவடிக்கைகளால் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட தமிழ் பயணி ஒருவர் தனது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி அன்று, அபுதாபி வழியாக ஜெர்மனியின் பிராங்போர்ட் நகருக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற பயணி ஒருவரே இத்தகைய அநீதிக்கு முகமளித்துள்ளார். ஆன்லைனில் செக்-இன் (Check-in) செய்திருந்ததால், ஆரம்பக்கட்ட சோதனைகளின் பின்னர் பொதிகளை ஒப்படைக்கும் கவுண்டருக்குச் சென்றபோது, அந்தப் பயணியின் மடிக்கணினி அடங்கிய கைப்பை...
செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 53 ஆவது நாளான இன்றைய தினம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 562 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 557 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.










