தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம் – இலங்கையை உலுக்கும் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி
தேதி: நவம்பர் 28, 2025 (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய ரீதியில் இணைய சேவைத் தடங்கல் - காரணம் என்ன? இன்று காலை முதல் இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் இணைய சேவை (Internet) மற்றும் தொலைபேசி சேவைகள் (Airtel, Dialog, SLT) அடிக்கடி துண்டிக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் போன்ற சில பகுதிகளில் மழை குறைவாக இருந்தபோதிலும், சிக்னல் (Signal) இல்லாமல் இருப்பது அல்லது "No Service" என காட்டுவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு செய்தித் தளங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ...
அரச ஊழியர்களுக்கு நாளை விசேட விடுமுறை! 🇱🇰
நிலவி வரும் கடுமையான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் பாதுகாப்பையும், பொதுமக்களின் சிரமங்களையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. யாருக்கு விடுமுறை? • அத்தியாவசிய சேவைகள் (Essential Services) தவிர்ந்த ஏனைய அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் நாளை (நவம்பர் 28, 2025) விசேட விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. • பொது நிர்வாக அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முக்கிய குறிப்பு: அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. அவர்கள் வழமை போல் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். பொதுமக்களும், அரச ஊழியர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு...
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தயவுசெய்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான எதிர்கால அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் மேலதிக தகவல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் தேசிய...
யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் ஹெலி மூலம் கொண்டு செல்லப்பட்டது!
யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் இன்று (26) விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இன்னும் 2 நாட்கள்!! இலங்கை நீரில் மூழ்குமா? வரலாறு காணதவகையில் மழைப் பொழிவும் சூறாவளியும்!! நடக்கப் போவது என்ன?
இது யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் சமூகவலைத்தளப் பதவிலிருந்து பிரதி செய்யப்பட்டது 25.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி ++++++. அனர்த்த அவசர முன்னெச்சரிக்கையின் இற்றைப்படுத்தல் ++++++ இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெறும். இது நாளைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும். இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27.11.2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய...
கிளிநொச்சியில் மருமகனால் மாமனார் அடித்துக் கொலை!
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது-59) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது...
யாழ் போதனாவைத்தியசாலையில் பிரதாபனின் நிறைமாத கர்ப்பிணி மனைவி காப்பாற்றப்பட்டது எப்படி?
சாவகச்சேரி - மட்டுவிலைச் சேர்ந்த பிரதாபன் என்பவரது மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் 25.09.2025 அன்று அவருக்கு பிறசருடன் (உயர்குருதி அமுக்கம்) கூடிய வலிப்பு திடீரென ஏற்பட்டது. ஆகையால் அவர் நோயாளர் காவுவண்டி முலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியாலைக்கு கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் மூலம் வைத்தியர் கஜேந்திரனுக்கு தகவல் வழங்கப்பட்டது. தனது பணி முடிந்து...
சிறுவர் பாடசாலை ஆசிரியர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!
சிறுவர் பாடசாலை (மொன்டிசோரி) ஆசிரியர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 'மியிஜய செவன' தொடர்மாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மாதம்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகலின் அடிப்படையில் தோடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த வீட்டில் சோதனை செய்த போது, ஆசிரியரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஆசிரியிடம், தனது கணவர் தொடர்பில் விசாரித்த போது அவர் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வருதாக கிடைத்த தகவலின் பேரில் காத்திருந்த பொலிஸார். வீட்டுக்கு...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் ரவுடித்தனம் புரிந்தவருக்கு நடந்த கதி!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மற்றும் வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிர்மாய்ப்பதற்கு முயற்சித்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரவு வைத்தியசாலைக்குள் சென்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் விவரத்தைக் கூறி அந்த இளைஞரைப் பார்வையிடுவதற்கு வழிகாட்டுமாறு அம்புலன்ஸ் சாரதி ஒருவரைக் கேட்டுள்ளார். இந்நிலையில் அவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த...
விபத்தில் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் பலி!
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று திரும்பி வரும் வழியில் இடம்பெற் விபத்தில் சிக்கி ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியபீட மாணவன் மரணம் பிற்பகல் 4.30 மணியளவில் வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் முஹம்மத் மஸூத் காலமானார். அவர் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று ஓட்டமாவடி நோக்கி வரும் வழியிலேயே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார். 23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி மர்கஸ் பள்ளிவாயல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது சடலம் தற்போது மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,...










