யாழில் தனது பெறாமகளின் நகையை திருடிய போதைக்கு அடிமையான சித்தப்பா!

0

தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் இடம்பெற்ற நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குழந்தையின் சித்தப்பாவான, 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் போதைப்பாவனைக்கு அடிமையாகியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்...

கடுகன்னாவ மண்சரிவின் உயிரிழப்பு அதிகரிப்பு ; பல்கலை விரிவுரையாளரும் சடலமாக மீட்பு!

0

கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில்,  ஒருவர் முன்னதாகவே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் , மண்ணுக்குள் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் 10 மணி நேர மீட்புப் பணியின்போது மேலும் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இராணுவம், தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்தவர்களில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் லீக் ஆகியதா? விசாரணைக்கு உத்தரவு!

0

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன. இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இது குறித்து முறையான மற்றும்...

2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – முழு விபரம் இதோ!

0

ஆண்கள் பாடசாலைகள் (Boys Schools) இ.ல பாடசாலை பெயர் (தமிழ்) இடம் வெட்டுப்புள்ளி 1 ரோயல் கல்லூரி கொழும்பு - 07 171 2 டி.எஸ். சேனநாயக்க கல்லூரி கொழும்பு - 07 152 3 புனித அந்தோனியார் கல்லூரி கண்டி 146 4 இசிபத்தான கல்லூரி கொழும்பு - 05 146 5 ஹாட்லி கல்லூரி பருத்தித்துறை 145 6 புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி ஹட்டன் 143 7 யாழ். இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் 139 8 கா/ ஸாஹிரா கல்லூரி சாய்ந்தமருது 138 9 கொழும்பு இந்து கல்லூரி கொழும்பு - 04 134 10 சரஸ்வதி மத்திய கல்லூரி பதுளை 132 11 ஓட்டமாவடி மத்திய கல்லூரி ஓட்டமாவடி 132 12 மட்/ புனித மிக்கேல் கல்லூரி மட்டக்களப்பு 132 13 யாழ். மத்திய கல்லூரி யாழ்ப்பாணம் 132 14 மெதடிஸ்ட் மத்திய கல்லூரி மட்டக்களப்பு 132 15 காத்தான்குடி மத்திய கல்லூரி காத்தான்குடி 132 16 ஸாஹிரா தேசிய பாடசாலை புத்தளம் 131 17 கிண்ணியா மத்திய கல்லூரி கிண்ணியா 131   பெண்கள் பாடசாலைகள் (Girls Schools) இ.ல பாடசாலை பெயர் (தமிழ்) இடம் வெட்டுப்புள்ளி 1 முஸ்லிம் மகளிர் கல்லூரி கொழும்பு - 04 156 2 மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை 149 3 பாத்திமா பாலிகா ம.வி புத்தளம் 149 4 வேம்படி...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்!

0

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மற்றைய ஆண் குழந்தையும் இன்றையதினம் உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த தர்ஷன் அஸ்வின் (9 மாதங்கள்) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில் ஏப்ரல் மாதம் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில் குழந்தை மயக்கமுற்றுள்ளது. இந்நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்....

இலங்கையில் தனக்கு நடந்தது தொடர்பாக நியூசிலாந்து பெண்ணின் பரபரப்பு தகவல்!

0

தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனியாகப் பயணம் செய்துவரும் 24 வயதுடைய நியூசிலாந்து பெண் ஒருவர், இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆபாசமாகத் தன்னை வெளிப்படுத்தியதால் "அச்ச உணர்வுடன்" இருந்ததாகத் தெரிவித்துள்ளார். கிறிஸ்ட்சர்ச்சைச் சேர்ந்த மோலி (Molly) என்ற அந்தப் பெண், ஆபாசமாகத் தன்னை வெளிப்படுத்திய குற்றத்திற்காக அந்த நபரைக் கைது செய்த உள்ளூர் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும், சிலர் இந்தச் சம்பவத்திற்காகத் தன்னையே குற்றம் சாட்ட முயன்றது அவருக்கு ஆச்சரியத்தை...

கிளவுட்ஃப்ளேர் முடக்கம்: X மற்றும் ChatGPT உலகளாவிய பாதிப்பு – இணையத்தின் அடித்தளம் ஆட்டம் காண்கிறதா?

0

Cloudflare Outage: Global Impact on X and ChatGPT - Is the Internet's Foundation Shaking? தேதி மற்றும் நேரம்: நவம்பர் 18, 2025 (செவ்வாய்க்கிழமை) தற்போதைய நிலவரம்: UTC 13:35 (இந்திய நேரம்: இரவு 7:05) அறிமுகம்: உலகளாவிய வலையமைப்பின் அதிர்வு  நவீன இணையத்தின் (Modern Internet) மிக முக்கியமான உட்கட்டமைப்பு (Infrastructure) வழங்குநர்களில் (Provider) ஒன்றாக விளங்கும் கிளவுட்ஃப்ளேர் (Cloudflare), நவம்பர் 18, 2025 அன்று ஒரு பெரிய உலகளாவிய முடக்கத்தைச் (Global Outage) சந்தித்தது. இந்த ஒற்றை நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட சீர்கேடு (Service Degradation), உலகெங்கிலும்...

புதுக்குடியிருப்பில் தலைகீழாகப் புரண்ட வாகனம்! வீடியோ

0

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. நேற்று  (17.11.2025) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தற்போது நிலவும் அதிக மழை மற்றும் சாலையின் ஈரப்பதம் , வாகனத்தின் அதிக வேகம் காரணமாக தடம் புரண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. எனினும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித ஆபத்துகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பிலான...

இலங்கையில் அதி கூடிய மழை வீழ்ச்சி 101.7 மிமி யாழ்ப்பாணத்தில் பதிவு..

0

எதிர்வரும் 27 வரை மழை நீடிக்க வாய்ப்பு .. மாவட்ட உதவி பணிப்பாளர் என் சூரியராஜா இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மிமி மழை வீழ்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில்...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான ஐஸ் போதைப்பொருள் மீட்பு.!

0

இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.4.50 கோடி மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் எஸ் பி பட்டினம் அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து இன்று செவ்வாய் (18) காலை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர் பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிபட்டினம்,...