இலங்கையின் சாபமாக மாறியுள்ள பிரயாணங்கள்! 16 வயது மாணவனை கனவுடன் பலியெடுத்த பஸ் விபத்து! நடப்பது என்ன?
தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜய கங்க வீதியில் பயணித்த தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஏற்பட்ட துயரமான விபத்தில், இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்க இருந்த ஒரு பாடசாலை மாணவன் உயிரிழந்ததுடன் மேலும் 47 பேர் காயமடைந்தனர்.உயிரிழந்தவர் ஹங்குரங்கெத பகுதியில் 411/4 என்ற முகவரியில் வசித்த,தலாவ தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற 16 வயதுடைய பசிந்து தில்ஷான் நந்தசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவ்விபத்து நேற்று (10) மதியம் 12.15 மணியளவில் தலாவ பிரதான பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு, 15 நிமிடங்களுக்கு பின்னர்...
யாழில் நாயால் மரணமான நிசாந்தன்!
யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி பணி முடிந்து , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்களான நிலையில் , படுகாயங்களுடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் 04 சிறுவர்கள் பார்வையிழப்பு
வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம். இதை செய்வதால் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது....
16 வயது மாணவனை வல்லுறவுக்குள்ளாக்கிய 39 வயது லலிதாவுக்கு 54 வருட சிறை!
சிறுவனை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. திருவாரூர் மாவட்டம் தேதியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி லலிதா(39). இவர், எரவாஞ்சேரி வடுகர்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நடனம் ஆட கற்றுத்தருவதாக கூறி அந்த சிறுவனை லலிதா கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம்...
சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமானது உயிர்கொல்லி போதைப்பொருள்பொருட்களே!
சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை காலத்துக்கேற்ற ஒன்றாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. விருந்தினர்கள் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு திருவுருவச் சிலைகளுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஆளுநர் உரையாற்றும் போது, மாணவர்களிடம் தலைமைத்துவ...
நாளை முதல் 27ஆம் திகதி வரையில் வடக்கில் மழை பெய்யும் ?
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 25 - 27ஆம் திகதி வரையில் கனமழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் மேலும் தெரிவிக்கையில், புதிய காற்றுச் சுழற்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக, தென்கிழக்காக என அங்குமிங்கும் அலைந்து இலங்கைக்கு கீழாக குமரிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் எதிர்வரும் 19ம்...
ஆபாச வீடியோக்களை தயாரித்ததற்காக மென்பொருள் பொறியாளர் (கணவர்) மற்றும் உளவியல் ஆலோசகர் தம்பதியினர் கைது
பெரியவர்கள் மட்டுமே அணுகக்கூடிய தளங்களில் 334 ஆபாச வீடியோ காட்சிகளை பதிவேற்றியதற்காக வெலிக்கடை பகுதியில் மிரிஹான காவல் நிலைய குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தால் திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 மற்றும் 36 வயதுடைய இந்த தம்பதியினரின் கணவர் ஒரு கணினி பொறியாளர் மற்றும் மனைவி ஒரு உளவியல் பயிற்றுவிப்பாளராக குறிப்பிடப்படுகிறார்.சந்தேக நபர்கள் இருவரும் (நவம்பர் 09) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான மூத்த காவல் அதிகாரி திரு. மங்கள தெஹிதெனியவின் அறிவுறுத்தலின் பேரில், பெண் தலைமை...
மனைவியை பார்க்க அடங்காத ஆசை! யாழிலிருந்து களவாக இந்தியா சென்ற சுரேசுக்கு நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுறுவிய இலங்கை நபர் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று (08) அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவு பொலிஸார் திடீர்...
பல்கலை மகளிர் விடுதியின் அருகே மனித கரு உடற்கூறு; அதிர்ச்சியில் அதிகாரிகள்!
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஜயவர்தன மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விஜயவர்தன மண்டபத்தின் துணைவேந்தர் மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (07) நண்பகல் பேராதனை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழைச் சேர்ந்த பாதள உலக ஜே. கே. பாய் வெளிப்படுத்திய கள்ள பாஸ்போர்ட் பற்றிய விபரம் இதோ…
இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு மோசடியாக மொரீசியஸ் நாட்டுக்கான கள்ள கடவுச்சீட்டுக்களை தயாரித்த விடயத்தை கே.ஜே. பாய் வெளிப்படுத்தியுள்ளார். ஜே.கே. பாய் என அழைக்கப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் சேர்ந்தவராவார். கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தி, பெக்கோ சமன், அவரது மனைவி, பத்து வயது சிறுமி உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புடைய பலருக்கு மொரீசியஸ் கடவுச்சீட்டுகளை தயாரிப்பதில் ஜே.கே. பாய் முக்கிய மூளையாக செயற்பட்டுள்ளார். மொரீசியஸ் கடவுச்சீட்டு துருக்கியில் உள்ள ஒரு கடத்தல்காரரால் தயாரிக்கப்பட்டதாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. துருக்கி கடத்தல்காரரின் பணி டுபாயில் வசிக்கும்...










