யாழில் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த தங்கராசா யாழ் பஸ் நிலையத்தில் சடலமாக மீட்பு!!
யாழ்ப்பாணத்தில் பேருந்து தரப்பிடமொன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றில் , முதியவரின் சடலம் காணப்படுவதாக சுன்னாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். குறித்த முதியவர் கடந்த 03 ஆண்டு காலமாக குடும்பத்தை பிரிந்து யாசகம் பெற்று , பொது இடங்களில் தங்கி வாழ்ந்து...
கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை – இலங்கை இளைஞனுக்கு 25 ஆண்டு ஆயுள்தண்டனை!
கனடா ஒட்டாவாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் , மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் உட்பட 06 பேரை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையரான 20 வயது இளைஞனான பெப்ரியோ டி சொய்சா , என்பவருக்கு கனேடிய நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலையாளியான பெப்ரியோ டி சொய்சா ஒட்டாவாவின் பர்ஹேவன் புறநகர்ப் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்துள்ளார் நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக,...
யாழில் பெரும் துயரம்; ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு |
யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற தாயார் , குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதான தாயாரே உயிரிழந்துள்ளார். தவிக்கும் பச்சிளம் குழந்தைகள் குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. திருமணமாகி நீண்ட வருடங்களின் பின் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை...
யாழில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சட்டவிரோத நிதி சேகரிப்பு கும்பல்..!
யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பல் ஒன்று காவல்துறையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (06.11.2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு, அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்கு பாரியளவு நிதி தேவை எனவும் பொய்கூறி வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், குறித்த கும்பல் நேற்று (06.11.2025) யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த குழுவில் இருந்த மூவரையும் அழைத்துச்...
முல்லைத்தீவில் 26 வயதில் 4 திருமணங்கள் செய்த யுவதி!
அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது. ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து...
2பிள்ளைகளின் தாயாரான ரஞ்ஜனியை காணவில்லை!
பதுளை , தெல்பெத்த தோட்ட மேல் பிரிவை சேர்ந்த நல்லமுத்து ரஞ்ஜனி வயது 46 இரண்டு குழந்தைகளின் தாய் காணாமல் போய்யுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவரது கணவர் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். குறித்த படத்தில் உள்ளவரை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0552222222 என்ற தொலை பேசிக்கோ அல்லது 0775216725,0762315106 என்ற தொலைபேசிக்கு அறிய தரவும். தகவல் -ராசலிங்கம் கருனன்.
சுவிஸ்லாந் வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆனந்தஜோதி பலி!
2025 நவம்பர் 3 ஆம் தேதி திங்கட்கிழமை காலை, சூரிக் மாநிலத்தின் Pfäffikon பகுதியில் வாகன விபத்தில் 53 வயதான விநியோக வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.Kempttalstrasse எனும் பகுதியில் சாலையில் இருந்து விலத்திய வாகனம் ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். விபத்து நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த 53 வயதான முன்னைநாள் சுகாதார பரிசோதகர் ஆனந்தஜோதி என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – 10 பேர் கைது!
பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட 'ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை, பொரலஸ்கமுவ, காலி, பசறை மற்றும் பதுளைப் பகுதிகளை சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய நபரும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தனர் என்பதுடன், அவர்களிடம் சிறிய அளவில் கொக்கெய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள்...
கற்பிட்டியில் 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றல் !
கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை செவ்வாய்க்கிழமை (04)நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன. 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (04)...
புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசார் தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனன். இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பீப்பாய்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த...










