நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு!
யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (13) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு...
ஆனையிறவு பகுதியில் இளம் பெண்ணின் சடலம்! கொலையா?? Video
கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இனங்காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ9 வீதியின் தட்டுவன் கொட்டி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று (14) காலை காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் துயரச் சம்பவம்!! தோட்ட கிணற்றில் நீராட சென்ற சிறுவன் நிரக்சன் சடலமாக மீட்பு!
வடமராட்சி கம்பர்மலையில் நண்பர்களுடன் கிணற்றில் நீராடிய சிறுவன் நீரில் முழ்கி பலி ! கிணற்றில் நண்பர்களுடன் நீராடிய சிறுவன் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . நெற்கொழு கழுகு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை 2:00 மணியளவில் கிணற்றில் ஏழு நண்பர்களுடன் நீராடிய போது குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது , கம்பர்மலையை சேர்ந்த நிரஞ்சன் நிரக்சன் வயது 17 என்ற சிறுவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைககப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை...
யாழ் யுவதி ஒருவர் தாய்லாந்து விடுதியிலிருந்து மீட்பு! காதலன் ஏமாற்றினானா?
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதான யுவதி ஒருவர் தாய்லாந்தில் உள்ள இரவு விடுதி ஒன்றிலிருந்து அந் நாட்டுப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். தீவகப்பகுதியை சொந்த இடமாகக் கொண்ட குறித்த யுவதி தென்பகுதி இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் அவனுடன் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இந் நிலையில் யுவதி பற்றிய தகவல்கள் உறவினர்களுக்கு கிடைக்காத நிலையில் யுவதி வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். கடந்த மாதம் யுவதியின் உறவினர் ஒருவருக்கு யுவதி தொலைபேசியில் தொடர்பு...
முல்லைத்தீவு உணவகத்தில் சாப்பாட்டு பார்சலுக்குள் இருந்த மீன் பொரியலுக்குள் புழு!
முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில்உணவகமொன்றில் நபரொருவர் மதிய உணவுக்காக 5 பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார். பின்னர் உணவை அவிழ்த்து சாப்பிடும் போது, மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் மட்டும்தான் – நீதிபதி இளஞ்செழியன் கூறுவது என்ன?
பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் மட்டும்தான். அதிகாரத்தை பாவிக்க வேண்டும், துஸ்பிரயோகம் தான் செய்ய கூடாது என்று முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நான் பதவி அதிகாரத்தை 100வீதம் பாவித்துள்ளேன். அதனால்தான் அரசதரப்பிலிருந்தோ வேறு பலதரப்பிலிருந்தோ விரல்கள் நீட்டப்படவில்லை. சாக்கடை அரசியல் என்று கூறுகிறார்கள், அதனை பூக்கடை அரசியலாகவும் மாற்றலாம். அதற்கு காலம் சரியான பதில் சொல்லும். நெல்சன் மண்டேலா, தந்தை செல்வா ஆகியோர் சாக்கடை அரசியல் செய்யவில்லை. நான் நீதித்துறையை நேசிக்கின்றேன், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதா வைக்கப்படவில்லையா என்று தெரியவில்லை என்று...
வவுனியா மக்களுக்கான அவசர எச்சரிக்கை – தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர்…!
வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் மிக அதிகளவான மீன்கள் இன்று மாலை (12.11.2025) தொடக்கம் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை மீன்பிடியினை தற்போதைக்கு தவிர்க்குமாறும் பொதுமக்கள் குறித்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் அறிவித்துள்ளார். விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆவா குழு காவாலித் தலைவன் வினோ உட்பட 2 பேர் போதைப்பொருளுடன் கைது!!
ஆவா குழு தலைவன் வினோத் உட்பட இருவர் நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் 24 வயதுடைய யுவதி பச்சைப் பனை மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டாரா?
யாழ். போதனா வைத்தியசாலையில் பணி புரியும் தாய் மாமன் பொலிஸாரால் கைது! யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றையதினம் (11) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய...
கொழும்பில் சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்தவர் கைது!
சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த, நாட்டின் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி கடையில் இருந்து ரூ.6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை இவர் திருடியுள்ளார். தொடர்பாக, கிட்டத்தட்ட 70 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், இவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் உட்கொண்ட தீவில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் 60 வயதுடையவர் என்றும், அவர் 1993 ஆம்...










