சுகந்தியும் விபத்தில் பலி! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் 3 பேரை பலியெடுத்த விபத்து! வீடியோ

0

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான ராக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்றாவது நபர், தாயகத்தில் ஏழாலையைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) ஆகியோருடன் மரணமடைந்த மூன்றாவது நபர் சிவாஸ்கரன் சுகந்தி (47) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. முன்னைய செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் தாயும் மகனும் விபத்தில் பலி! - தமிழிஸ் செய்திகள் - Tamiliz...

தயாளினியைக் கொன்றது யார்? மருமகனா? மகளா? இல்லை…? மூத்த ஊடகவியலாளர் ருசாங்கன் கூறுவது என்ன?

0

மூத்த ஊடகவியலாளர் ருசாங்கன் கோடீஸ்வரன் என்பவரது  சமூகவலைத்தளப்பதிவினை அப்படியே தந்துள்ளோம்.  யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி அவர்களின் அவலமான சாவு குறித்து பலரும் பலவிதமாகவும் எழுதித் தள்ளி சப்பித் துப்பிக்கொண்டிருக்கிறார்கள். நானும் என் பங்குக்கு கொஞ்சம் துப்பிப்போட்டுப் போக வரவில்லை. பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில், சித்த மருத்துவத்தில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக, சித்த மருத்துவத்துறை மேம்பாட்டுக்கான விசேட குழுவில் பேராசிரியர் மிகுந்தன் அவர்கள் தலைமையில் அம்மையாருடன் பணியாற்றிய அந்த அருமையான பொழுதுகளை மீட்டு, அம்மாவுக்கு எனது உள்ளத்தில் ஆழத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு, நீங்கள்...

யாழிலிருந்து இத்தாலி செல்லமுற்பட்ட 3 இளைஞர்கள் இந்தியா, நேபாளத்தில் பிடிபட்டனர்!

0

நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இத்தாலி பயண முயற்சி தோல்வியடைந்தமையால் மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த மூவர், கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசா மூலம் நேபாளத்திற்குப் பயணித்துள்ளனர். அங்கிருந்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதே இவர்களது திட்டமாக இருந்துள்ளது. நேபாளத்தில் வைத்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பெற்று இத்தாலிக்குப் பயணிக்க முற்பட்ட போது, அவர்களில் இருவர் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு...

யாழில் அடையாள அட்டை இல்லை என கூறி வீதியில் நின்ற அப்பாவி குடும்பஸ்தருக்கு பொலிசார் செய்த கொடுமை!

0

தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். குறித்த கைது சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் தனது வீட்டாருக்கு அறிவிக்க அனுமதி வழங்காது அவரது கையடக்க தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளனர். காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு காலையில் நடந்து சென்ற வேளை வீதியில் முச்சக்கர வண்டியில் நின்ற பொலிஸார் அவரை அழைத்து விசாரித்து , தேசிய அடையாள...

கொள்ளையடித்த நகையில் சொகுசு வாழ்க்கை: வீடு கட்டி, கார் வாங்கி வலம் வந்த கொள்ளைக் கும்பல்! – மட்டக்களப்பு நெல்லிக்காடு சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள்!

0

பெண்களின் தாலியில் சொகுசு வாழ்க்கை மட்டக்களப்பு, நெல்லிக்காடு வயல் பகுதியில் பெண்களைக் கிணற்றில் வீசி நகைகளைக் கொள்ளையடித்த கும்பல், அந்தப் பணத்தில் மட்டக்களப்பில் மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தமை பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைதான தம்பதியினர் மற்றும் அவர்களது கூட்டாளிகள், அப்பாவிப் பெண்களின் தாலிக்கொடிகளை விற்றுப் பெற்ற பணத்தைக் கொண்டு ஒரு காரினையும், சொகுசு வீட்டினையும் கட்டியுள்ளனர் என்பது பொலிஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீட்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் சந்தேகநபர்கள் இந்தக் குற்றச்செயல்களுக்காகப் பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகள், ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்...

யாழ்ப்பாணத்தில் நடப்பது என்ன? மற்றுமொரு மாணவிக்கு நடந்த கொடூரம்!

0

யாழ்ப்பாணத்தில் என்னதான் நடக்கிறது? யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு துயரமான சம்பவம் சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பாடசாலை மாணவி ஒருவரின் உயிரிழப்பு தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா என்பது பொதுமக்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது. யாழ் மாவட்டத்தின் பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி, அண்மையில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தவறான முடிவை எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட துயரத்தை மட்டுமல்லாமல், சமூக பாதுகாப்பு, மாணவர்களின் மனநிலை மற்றும் இணையதளத்...

இன்றைய(23.03.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும்....

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் தாயும் மகனும் விபத்தில் பலி!

0

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான டாக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர், தாயகத்தில் நவாலியைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கியில் கொண்டாடிய பின்னர், சுவிற்சர்லாந்திற்கு திரும்ப வானூர்தி நிலையத்துக்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த துயரச் செய்தி உறவினர்கள் மற்றும் சமூகத்தினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிருத்தானியாவில் புற்றுநோயால் இறந்த இலங்கைத் தமிழ் வைத்திய நிபுணர் வாசிகரனின் குடும்பத்திற்கு நடக்கும் கொடூரம் இது!

0

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மனைவி பிரபோத்யா விஜேதுங்க மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த வைத்தியர் வாசீஹரன், அங்குள்ள பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். வதிவிட உரிமை எனினும், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அண்மையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வைத்தியர் வாசீஹரனின் விசாவிலேயே அவரது குடும்பத்தினரும் பிரித்தானியாவில் தங்கியிருந்தனர். அவரது...

மகள் தயாளினியின் முதுகின் மேல் ஏறி இருக்க திவாகர் கழுத்தை நெரித்து கொன்றான்!! யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலையில் பிடிபட்ட மகள், மருமகனின் பரபரப்பு வாக்குமூலம் இதோ

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால காதல் போதை, கஞ்சா போதை கலந்த ஒரு போதைக்கலவையினால் இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரிவுரையாளரின் மகளும், மருமகனும் திட்டமிட்டு இந்த கொலையை செய்தது இதுவரையான விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி அதிகாலையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, அன்று காலையிலேயே அரியாலை- தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டுள்ளார். சடலத்தை வீசிவிட்டு,...