விபத்தில் சிக்கி படுகாயமடைந்த புஸ்பகுமார் உயிரிழப்பு.!

0

தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் விபத்திற்குள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றின் மீது ஜீப் வண்டி மோதியது. இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை...

யாழில் 17 வயதான மகனை காணவில்லை என தாயார் முறைப்பாடு!!

0

யாழ்ப்பாணத்தில் 17 வயதான தனது மகனை காணவில்லை என தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த ச. சயோசியன் (வயது 17) எனும் தனது மகன் கடந்த 31ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை வரையில் வீடு திரும்பவில்லை என தயார் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , சிறுவன் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் , பெற்றோருக்கு அல்லது பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

அழுகிய மரக்கறிகளை ஊழியர்களின் சமையலுக்காக வைத்திருந்த முல்லைத்தீவு ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்!

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூ. 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நிறுவனம்...

யாழில் ஹேரோயின் விற்று பிடிபட்ட சந்தேகநபர் பொலிசாரின் பிடியிலிருந்து தப்பி ஓட்டம்!!

0

சுன்னாகம் பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இன்றையதினம் (01.11.2025) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியது. தடுப்புகாவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றவேளை சந்தேகநபர்...

சற்று முன் இயக்கத்தி பகுதியில் காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து!! Video

0

சற்று முன் இயக்கத்தி பகுதியில் காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து

காலியில் கல்லால் அடித்து குடும்ப பெண் படுகொலை!

0

காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த கொலை சம்பவம் நேற்று (31) காலை இடம்பெற்றுள்ளது. அஹுங்கல்ல , பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில்...

சாரயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியாவில் குடும்பஸ்தர் மீட்பு!

0

சாராயத்துடன் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பாலத்திற்கு அருகாமையில் குடும்பஸ்தர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதை அவதானித்த மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் சாராயத்துடன் வயலுக்கு பயன்படும் களை நாசினி மருந்தை கலந்து அருந்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 வயது மாணவன்

0

மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் Ahriff எனும் மாணவன் தனது வீட்டின் அறையிலிருந்த மின் விசிறியை இயங்கச் செய்த போது மின் ஒழுக்கு ஏற்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் (30) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள பாரிஸ் ஹாட்வெயார் உரிமையாளரது மூத்த மகன் என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் வீடு ஒன்றினுள் கயிற்றில் தொங்கிய நிலையில் 27 வயது யுவதி அஜந்திகா சடலமாக மீட்பு!

0

யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த அழகேஸ்வரன் அஜந்திகா (வயது 27) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கியின் பாகங்கள்.! Video

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள நூலகக் கட்டிடத்தின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆயுதங்களும் வெடிபொருட்களும் நேற்று மாலை (நேற்றுமாலை) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்களில் இரண்டு மகசின்களும், அவற்றுக்குரிய 59 துப்பாக்கி ரவைகளும், அத்துடன் 5 அடி நீளமான மின் வயர்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். நூலகத்தின் சீலிங் பகுதிக்குள் இந்த ஆபத்தான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், உடனடியாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் அளித்தது. இதனையடுத்து, நேற்று இரவு முதலே பல்கலைக்கழக வளாகத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று காலை...