கலியாணம் கட்டி ஓரிரு வாரங்கள்! பெண் இஞ்சினியர் மதுஷானி தென்னிலங்கை விபத்தில் பலி!

0

களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் மதுஷானி பத்திரண என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நில்லையில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் பலரது உயிர் காக்க தானம் செய்யப்பட்டுள்ளன. 21ஆம் திகதி, மதுஷானியின் தந்தைக்கு மருந்து வாங்குவதற்காக கணவனுடன் பத்தேகமவிற்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். அன்றிரவே மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கணவனுக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினால் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மதுஷானியின் தலையில்...

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியர் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் அவதுாறு! அருச்சுனா எம்.பி உட்பட இரு டொக்டர்மாருக்கு நீதிமன்றல் நடந்த கதி!

0

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகி இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மன்றில் முன்னிலையாகவில்லை. அதனை அடுத்து வழக்கு விசாரணைகளை...

சித்த வைத்திய பேராசிரியர் தயாளினி கொலை வழக்கு!! நீதிமன்றில் நடந்தது என்ன?

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபனின் கொலை வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களான படுகொலையானவரின் மகளையும் மருமகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மூத்த விரிவுரையாளர் கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் 21ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது ,  சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , இன்றைய...

இன்றைய (02.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம் இன்று பணப் பிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும். நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. சந்திரன் சஞ்சாரம் மூலம் எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட...

கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மட்டக்களப்பு ரயூவன்!

0

கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மயிலம்பாவெளியைச் சேர்ந்த சிறுவன் மட்டக்களப்பு மயிலம்பாவொளி விபுலானந்த புரம் பகுதியை சேர்ந்த 11 வயதான ம.ரயூவன் என்கின்ற சிறுவன் இன்று (1) காலை 8 மணியளவில் மயிலம்பாவெளி பிரதான வீதியில் வீதியை கடந்து கோயிலுக்கு செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதிய நிலையில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்

யாழ். மாவட்ட ரீதியில் முதலிடம்! கணவனை இழந்த தாயின் கண்ணீருக்குக் கிடைத்த வெற்றி!

0

2025-ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio-Technology) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கிஷானி யாழ். மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27-வது இடத்தையும் பெற்றுத் தனது கல்லூரிக்கும் தீவகப் பகுதிக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளார். கிஷானியின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு பெரும் கண்ணீர் கதை ஒளிந்துள்ளது. அவர் 10 மாதக் குழந்தையாக இருந்தபோதே, கடற்றொழிலுக்குச் சென்ற அவரது தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்....

வெளிநாட்டில் மயானத்திற்குள் பெண் ஒருவருடன் தகாத உறவு! தமிழ் குடும்பஸ்தருக்கும் பெண்ணுக்கும் ஒரு வருட சிறை!

0

மலேசியாவின் பினாங்கு பகுதியில் மயானம் ஒன்றில் பகிரங்கமாகப் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக 58 வயதுடைய தமிழ் ஆடவர் ஒருவருக்கும், 37 வயதுடைய பெண் ஒருவருக்கும் மலேசிய நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மலேசியாவின் பினாங்கு பகுதியில் உள்ள சீன மயானம் ஒன்றில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டப்பகலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஓராண்டு சிறைத்தண்டனை சம்பவத்தில் 58 வயதுடைய ஜெகதீசன் மற்றும் 37 வயதுடைய ஹலிலா அபு பக்கர் ஆகிய இருவரும் மயானப் பகுதியில் தகாத முறையில்...

இன்றைய (01.04.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டா கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9 ரிஷபம் இன்று மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும்....

ஏ,எல் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதிியல் 1ம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவன் திருக்குமரன்! சிறுவயது முதலே படிக்கும் போது செய்தது என்ன? வீடியோ

0

ஏ,எல் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதிியல் 1ம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவன் திருக்குமரன்! சிறுவயது முதலே படிக்கும் போது பல சாதனைகளைச் செய்துள்ளார். அது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். 📢 #கிளிநொச்சியின்_பெருமையை_நாம்_மறந்துவிட்டோமா? கிளிநொச்சி மண்ணில் பிறந்த ஒரு இளம் மேதை… உலகளவில் இலங்கையின் பெயரை உயர்த்தியவன்… ஆனால் இன்னும் நம்மிடத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காதவன்… 🎓 #கிளிநொச்சி_மகா_வித்தியாலயத்தின்_மாணவன் #தெய்வேந்திரம்_திருக்குமரன் --- 🏆 உலக மேடையில் சாதித்த பெருமைகள் 🥉 IMO 2024 – வெண்கலப் பதக்கம் 🌍 உலக தரவரிசை – 283வது இடம் 🇱🇰 இலங்கை தேசிய அணியின் முக்கிய...

மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்! Video

0

மட்டக்களப்பு மட்டுமல்ல நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண தரும் பரபரப்பு வாக்குமூலம் இதோ... முன்னைய செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.   மட்டு’வில் பெண்களைக் கடத்தி நகைகளை கொள்ளையடித்த பின் அவர்களை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டவர்களின் பரபரப்பு வாக்குமூலம்! - தமிழிஸ் செய்திகள் - Tamiliz Tamil News and Articles